search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரத்தான் ஓட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    X
    மாரத்தான் ஓட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

    பெருந்துறை சப்-டிவிசனுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள் சுமார் 75 பேர் மற்றும் போலீசார் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார்.
    பெருந்துறை:

    பெருந்துறை சப்-டிவிசனுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள் சுமார் 75 பேர் மற்றும் போலீசார் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார்.

    ஈரோடு மாவட்டத்தில் 33-வது சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டத்திற்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டிருந்தார்.

    அதைத் தொடர்ந்து பெருந்துறை சப் டிவிசனுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள் சுமார் 75 பேர் மற்றும் போலீசார் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் பெருந்துறை வெங்கமேடு பகுதியில் தொடங்கப்பட்டது.

    இந்த ஓட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார். இந்த மாராத்தான் ஓட்டமானது வாய்க்கால் மேடு வழியாக சென்று கொங்கு பொறியியல் கல்லூரியில் முடிவடைந்தது.

    பின்னர் அங்கு நடைபெற்ற சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சாலை விழிப்புணர்வு பற்றி அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை டி.எஸ்.பி. கவுதம்கோயல், இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் மற்றும் சப்-இன்ஸ் பெக்டர்கள், போலீசார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×