என் மலர்tooltip icon

    ஈரோடு

    போலீசார் சார்பில் விபத்துகளை தடுக்க வாகன விழிப்புணர்வு நடத்தினர்.
    அந்தியூர்:

    போலீசார் சார்பில் விபத்துகளை தடுக்க வாகன விழிப்புணர்வு நடத்தினர்.

    ஈரோடு மாவட்டத்தில் சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்து போலீசார் பல்ேவறி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறார்கள். இதே போல்   அந்தியூர்அண்ணா மடுவு பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி தலைமையில் வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

     இதில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் எப்படி சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும், சாலை விபத்துக்களை தடுப்பது குறித்தும்  ஒலி பெருக்கி மற்றும் காணொலி காட்சி மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். மேலும்  விழிப்புணர்வு நோட்டீசு கொடுத்தும் வாகன விபத்துக்களை தடுக்க அறிவுரைகள் வழங்க ப்பட்டது. 

     முன்னதாக பவானி    அந்தியூர் பிரிவு பகுதியில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாஜி கொடி யசைத்து விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு வாகனம் பவானி, சித்தார், குறிச்சி, அம்மாபேட்டை, அந்தியூர், ஆப்பக்கூடல், அத்தாணி, கவுந்தப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்றது. அந்த பகுதியில்  பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு வாகனங்கள் மூலம திரையிடப்பட்டு விழப்புணர்வு ஏற்படு த்தப்பட்டது.
    அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் பட்டுப்புழுக்களை பாதுகாப்பாக வளர்க்கும் வழிமுறைகள் மண்டல இணை இயக்குனர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் பட்டுப்புழுக்களை பாதுகாப்பாக வளர்க்கும் வழிமுறைகள் மண்டல இணை இயக்குனர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

     ஈரோடு பட்டு வளர்ச்சி துறை மண்டல இணை இயக்குனர் ஜெயபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி யதால் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் பாக்டீரியா தொற்றால் ‘பிளாச்சரி நோய்’ தாக்கும் வாய்ப்புள்ளது.

    புழு வளர்ப்பு மனையின் மேற்கூரை மீது தென்னை ஓலையை பரப்பலாம். அறையின் உட்புறம் ஓலை கூரை அமைக்கலாம். அறையின் ஜன்னலில் கித்தான் சாக்கு கட்டி, தண்ணீர் தெளித்து ஈரமாக்கலாம். குளிர்ந்த காற்று உருவாகி, புழு வளர்ப்பறையை காக்கும்.

    சுவர் ஓரங்களில் மணல் திட்டு அமைத்து ஈரமாக வைக்கலாம். புழு வளர்ப்பு கூரையின் உட்புறம் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ஈரமாக்கலாம். தண்ணீர் புகை போல பீச்சியடிக்கும் ‘பாக்கர் எந்திரம்’ பயன்படுத்தலாம்.

    ஒவ்வொரு புழு வளர்ப்புக்கு முன்னும் அறை மற்றும் புழு வளர்ப்பு தளவாடங்களை 100 சதவீதம் மூன்றடுக்கு முறை மருந்தடிப்பு செய்யலாம். முந்தைய புழு வளர்ப்பில் நோய் தொற்று இருந்தால் அறையின் சுவர் தரையில் சுண்ணாம்பு பூச வேண்டும்.

    ஒவ்வொரு தோலுரிப்புக்கு முன்பும் சுண்ணாம்பு தூளை தெளித்து தோலுரிப்புக்கு பின்னர் படுக்கையில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். திடீரென இரவில் மழை பெய்தால் குளிர்ச்சி, ஈரப்பதம் சீராக்க வேண்டும்.

    பட்டுப்புழுக்களுக்கு உணவளிக்க அறுவடை செய்யும் இலையுடன் கூடிய தண்டுகள் குளிர்ச்சியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். தண்டுகளை சேமித்து வைக்கும்போது சுவர் ஓரங்களில் நிற்க வைத்து ஈரதுணியால் மூடி வைத்து பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் புழு வளர்ப்பை தோல்வி அடையாமல் தவிர்க்கலாம்.
    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தந்தைக்கு ஏற்பட்ட விபத்து மற்றும் வயிற்றுவலி காரணமாக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கொளப்பலூர் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி தவமணி. இவர்களுக்கு தட்சின் என்ற மகனும், கோதைநாயகி என்கிற விவிதா (20) என்ற மகளும் உள்ளனர்.

    கோதைநாயகி அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பச்சையப்பன் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அப்போது முதல் கோதைநாயகி தான் தனது தந்தையை உடனிருந்து கவனித்து வந்தார். தனது அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டு விட்டதே என மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் கோதைநாயகிக்கு அடிக்கடி வயிற்று வலியும் இருந்து வந்தது. இதற்காக அவர் மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை தவமணி தனது மகன் தட்சனுடன் தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டின் குளியலறையில் இருந்து தண்ணீர் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. தவமணி மகள் குளித்துக்கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் தண்ணீர் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. அவரது மகன் தட்சன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கோதைநாயகி தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரைக் கீழே இறக்கி வைத்து ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கோதைநாயகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் தந்தைக்கு ஏற்பட்ட விபத்து மற்றும் வயிற்றுவலி காரணமாக கோதைநாயகி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
    ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிவில் ஒவ்வொரு வருடமும் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாடு செழிக்கவும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி மற்றும் தீர்த்தக் குடங்களுடன் தட்டாங்காட்டுபுதூர், வெப்பிலி, அய்யம்பாளையம், புதுப்பாளையம், தோப்புப்பாளையம், மேலப்பாளையம் உள்பட பல்வேறு ஊர்கள் வழியாக மலையை சுற்றி கிரிவலம் புறப்பட்டனர்.

    இன்று காலை 7 மணிக்கு மேல் சென்னிமலை மலைக் கோவிலில் கணபதி ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் இன்று மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபனம், தேவார திருமுறை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு சுப்பிரமணியசுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் மற்றும் முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்காக பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்துள்ளனர்.
    கெட்டுப்போன கோழி இறைச்சி, செயற்கையாக நிறமூட்டும் பொடி, கெட்டுப்போன எண்ணெய், தர்பூசணி விதைகள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    பவானி:

    ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அசைவ உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி, எண்ணெய், நிறமூட்டும் பொடிகள் மற்றும் ரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் என்.சதீஸ்குமார், எம்.லட்சுமி ஆகியோர் பவானி புதிய பஸ் நிலையம், மேட்டூர் சாலை, அந்தியூர் பிரிவு உள்பட பல்வேறு பகுதிகளில் 6 அசைவ உணவகங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது, கெட்டுப்போன கோழி இறைச்சி 5 கிலோ, செயற்கையாக நிறமூட்டும் பொடி, கெட்டுப்போன எண்ணெய், தர்பூசணி விதைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதோடு, உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறி இயங்கிய உணவகங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    உணவு பாதுகாப்பு விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.


    சென்னிமலை அருகே அம்மன் கண் விழித்ததாக வந்த செய்தி தெரிய வந்ததும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் ஆதித்யா நகர் என்ற பகுதியில் சிவஞானசித்தர்கள் பீடம் அறக்கட்டளை சார்பில் ஓம் நர்மதை மருந்தீஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது.

    இந்த கோவிலில் உள்ள ஓம் நர்மதா அம்பிகை அம்மன் சிலைக்கு நேற்று மஞ்சள் கயிறில் விரலி மஞ்சள் இணைத்து கட்டப்பட்டது. பின்னர் சரவணன் என்பவர் அம்மனுக்கு தீபாராதனை காட்டினார்.

    அப்போது அம்மன் கண் விழித்ததாகவும் அந்த காட்சி பிரமிப்பாகவும் பரவசமாகவும் இருந்ததாகவும் கூறினார்.

    இந்த தகவல் பற்றி தெரிய வந்ததும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
    பெருந்துறை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பெண் பயணி சிகிச்சை பலனின்றி பலியானார். 16 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெங்களூரில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று இரவு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 25 பயணிகள் இருந்தனர்.

    இதேபோல் சேலத்தில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி இரும்பு குழாய் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.

    லாரி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள டீச்சர்ஸ் காலனி பிரிவு என்ற பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த ஆம்னி பஸ் லாரியை முந்தி செல்ல முயன்றது.

    அப்போது எதிர்பாராத வகையில் ஆம்னி பஸ்சின் இடது புறம் லாரியின் பக்கவாட்டில் மோதி விபத்தானது. அதிகாலை நேரம் என்பதால் பஸ் பயணிகள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். விபத்து நடந்ததும் பயணிகள் அனைவரும் சத்தம் கேட்டு என்னமோ ஏதோ என்று நினைத்து கதறினர்.

    லாரியின் வலது புறத்தில் பஸ் சொருகிக் கொண்டதால் பஸ்சில் இருந்து பயணிகள் இறங்க முடியவில்லை. இதையடுத்து பெருந்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த அங்கமுத்து என்பவரது மனைவி சரஸ்வதி (74) மற்றும் பாலசுப்பிரமணி (47), செல்வராஜ் (61), ராமமூர்த்தி (47), கிருஷ்ணன் (53), ரகுபதி (58), பவித்ரா (26), தேவ்சித்தார்த் (1லு), கிருஷ்ணவேணி (51), பெருமாள் (60), செல்லம்மாள் (56), பிரகாஷ் (54) உள்பட 17 பேர் காயமடைந்தனர்.

    காயம் அடைந்த பயணிகள் 4 ஆம்புலன்ஸ்கள் மூலம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த சரஸ்வதி (74) என்ற பெண் பயணி சிகிச்சை பலனின்றி அதிகாலை 5.30 மணி அளவில் இறந்தார். மேலும் பாலசுப்பிரமணி என்பவருக்கு 2 கால்களிலும் முறிவு ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து பற்றி தெரிய வந்ததும் பெருந்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக கோவை-சேலம் பைபாசில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழக மற்றும் மத்திய அரசின் சார்பில் ஊரக பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், குறிப்பாக திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்ப–டுத்து–வதை தடுக்க பொதுக்க–ழிப்பிட வளாகம் மற்றும் தனிநபர் இல்ல கழிப்பிடம் ஆகியவை கட்டிக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த, 2017 டிசம்பர் மாதத்தில் இருந்து திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் விளங்கி வருகின்றது.

    மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்களில், ஒரு லட்சத்து, 38 ஆயிரத்து, 935 தனி நபர் இல்லக்கழி ப்பறைகள் கட்டப்பட்டன.

    மேலும் வீடு, வீடாக சென்று தனிநபர் இல்லக்க–ழிப்பறைகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து கழிப்பறைகள் இல்லாத வீடுகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.30.81 கோடி செலவில் 27 ஆயிரத்து, 498 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து–ள்ளனர்.

    மேலும்ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் கழிப்பறை வசதி இல்லாத குடும்பங்கள் பயன்பெறும் வகையில், 31 ஒருங்கிணைந்த சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டி செயல்பாட்டில் உள்ளதாகவும், 13 ஒருங்கிணைந்த சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற (20-ந்தேதி) அன்றுகாலை 10 மணி அளவில் –ஈரோடு–கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது.

    எனவே இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களும் தங்களது– கோரிக்கை மனுக்களை 2 பிரதிகளில் நேரில் சமர்ப்பிக்கலாம் என– கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
    ஈரோடு மாவட்டத்தில் இன்று 870 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 28 ஆயிரத்து 365 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 870 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 28 ஆயிரத்து 365 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 

    தமிழகத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று தொடங்கிய தேர்வு வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக 113 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5 மையங்கள் தனித்தேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 870 தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 28 ஆயிரத்து 365 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வை எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வை எந்த ஒரு சிரமமுமின்றி எழுதும் வகையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 

    தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டு இருந்தன. மேலும் தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.

    மாணவர்கள் தேர்வு அறைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி இன்று காலை சீக்கிரமாகவே அந்தந்த தேர்வு நடக்கும் பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் வந்து விட்டனர்.

    மாணவ-மாணவிகள் கோவிலுக்கு சென்று தேர்வை நல்லபடியாக எழுத வேண்டும் என்று சாமி கும்பிட்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சிறிது நேரம் படித்தனர். தேர்வு எழுதச் செல்லும் மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்களுக்கு வினாத்தாள் கொடுத்ததும் முதல் 15 நிமிடம் வினாத்தாள்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.  

    அதைத்தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 118 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் என மொத்தம் 203 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தேர்வு மையங்களை தீவிரமாக கண்காணித்தனர்.
    கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் மாரியம்மன் கோவில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் மாரியம்மன் கோவில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

    கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 3-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று காலை  பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். 

    விழாவையொட்டி 4-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தி கொண்டும், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நேற்று இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

    இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. நாளை (சனிக்கிழமை)  மறு பூஜை நடக்கிறது.
    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 4 வது அலையை தடுக்கும் வகையில் நாளை மறுநாள் 3,194 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 4 வது அலையை தடுக்கும் வகையில் நாளை மறுநாள் 3,194 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது.

    தடுப்பூசி காரணமாக கொரோனா 3-ம் அலையில் பெருமளவு மக்கள் பாதிப்பு ஏற்படுத்தாமல் அவர்கள் லேசான அறிகுறியுடன் குணமடைந்தனர்.

    இதையடுத்து தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நாளைமறுநாள் (8-ந்தேதி) அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 3,194 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,260 பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபடுகின்றனர். 

    மேலும் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் முன் களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.

    இந்த முகாமை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
    ×