என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறை அருகே பெற்றோர் இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே பெற்றோர் இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை அடுத்துள்ள குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது 22). இவரது தந்தை ராமசாமி, தாயார் நாகம்மாள் இறந்து விட்டதால் அவரது அத்தை தெய்வானை வீட்டில் வளர்ந்து வந்தார்.

    பன்னீர்செல்வம் 10-ம் வகுப்பு படித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். பன்னீர்செல்வம் அவரது பெற்றோர் இறந்ததில் இருந்தே மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலை எண்ணத்தில் இருந்துள்ளார். அவர் அத்தை வீட்டார் ஆறுதல் கூறி வந்தனர். ஆனால் பன்னீர் செல்வம் மன ேவதனையுடன் காணப்பட்டார். 

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர்    மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பன்னீர்செல்வத்தை பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பெருந்துறை மருத்துவக் கல்லூரி ரவுண்டானா அருகே அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

     அவர் ஊமத்த காய்கள் (விஷம்) தின்றதாக தெரிந்தது. உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தநிலையில் பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை  சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    சஸ்பெண்டு செய்யப்பட்ட மன உளைச்சலில் ஈரோடு மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    சஸ்பெண்டு செய்யப்பட்ட மன உளைச்சலில் ஈரோடு மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மீரான் மொய்தீன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (52).இவரது மனைவி சாந்தி. செந்தில்குமார் ஈரோடு மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் வேலை பார்த்து வந்தார். 

    வேலை வாங்கி தருவதாக பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக செந்தில்குமார் தாற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டு கடந்த 2 வருடமாக வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.  

    இந்நிலையில் சம்பவத்தன்று ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற செந்தில்குமார் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். 

    அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் இன்று 3,194 மையங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 3,194 மையங்களில் சிறப்பு கொரோனா  தடுப்பூசி முகாம் தொடங்கியது

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 4-வது அலையை கட்டுப்படுத்த அரசின் உத்தரவின் பேரில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 

    அதன்படி, மாவட்டத்தில் 3,194 மையங்களில் இன்று காலை 7 மணிக்கு மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியது. இந்த முகமானது மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் பஸ், ரெயில் நிலையம் என 3,194 மையங்களில் நடைபெற்று வருகிறது. 

    தடுப்பூசி செலுத்தும் பணியில் 4,260 பணியாளர்களும், 66 அரசு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முகாமில் காலை முதலே 12 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள், 15 வயது முதல் 18வயதுக்கு உட்பட்டவர்கள், 18வயதுக்கு மேற்பட்டவர்கள்  ஆர்வமுடன் வந்து முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசியினை செலுத்திக்கொண்டனர். 

    கோவிஷீல்டு, கோவாக்சின், கோர்பி–வேக்ஸ் தடுப்பூசி பயன்ப–டுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இன்று நடக்கும் முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயி–க்கப்பட்டுள்ளதாக சுகாதா–ரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    மேலும் 60 வயதை கடந்தவர்கள் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த மெகா தடுப்பூசி முகாம்களில் இன்று தான் அதிக அளவு மையங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த கணவரின் நினைவு நாளில் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கொமரபாளையம், எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சாந்தி (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    பழனிச்சாமிக்கு கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு மே மாதம் 7ந் தேதி பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். அன்று முதல் சாந்தி கணவரின் நினைப்பாகவே இருந்துள்ளார்.

    பின்னர் சாந்தி தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சாந்தி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த அவரது மகன் தாயிடம் விசாரித்தபோது அப்பா கொரோனா காரணமாக இறந்த இதே நாளில் நானும் சாக முடிவெடுத்து விஷம் குடித்து விட்டேன் என்றார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் கார் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சாந்தியை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சாந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொரோனா தாக்கம் காரணமாக இறந்த கணவரின் நினைவு நாளில் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு மாநகர் பகுதி, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதி, அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனினும் அவ்வப்போது இரவு நேரங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று காலை ஈரோடு மாவட்டத்தில் வழக்கம்போல் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தியது. மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் இரவு 7 மணி முதல் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.

    குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதி, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதி, அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து, ட்ரான்ஸ்பார்மர் வெடித்தும் மரக்கிளைகள் விழுந்தும் மின் தடை ஏற்பட்டது.

    குறிப்பாக சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 42 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அங்கு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் சூறாவளியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    முகாசிபிடாரியூர் தியாகி குமரன் நகரில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இரவு நேரம் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். விடிய,விடிய தூங்காமல் அவதி அடைந்தனர். ஒரு சிலர் வாளி மூலம் மழை தண்ணீர் வெளியேற்றினர். பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.

    சூறாவளி காற்று காரணமாக அரச்சலூர் ரோட்டில் டிரான்ஸ்பார்மர் கீழே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதேப்போல் சென்னிமலை காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது இருந்த டவர் சூறாவளி காற்றுக்கு சரிந்து கீழே சாலையில் விழுந்தது.

    நல்லவேளையாக அந்த நேரத்தில் யாரும் வராததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மின் ஊழியர்கள் சரிந்த மின்கம்பங்களை மீண்டும் சீரமைத்து வருகின்றனர்.

    இதேபோல் அந்தியூர் பகுதியில் நேற்று மாலை 7 மணியளவில் சூறாவளி காற்றுடன் லேசாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இரவு 8 மணி முதல் 9 மணி வரை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தவிட்டுப்பாளையம் கரட்டுப்பாளையம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சூறாவளி காற்றால் பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து விழுந்தது.

    இதேபோல் அந்தியூர் காலனி பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்தது. தங்க பாளையம் பகுதியில் மரகிளை மின்கம்பம் மீது விழுந்து மின்தடை ஏற்பட்டது. இதேப்போல் தங்கபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து மின்தடை ஏற்பட்டது. இதனால் ஈச்சபாறை, வேதகாரன் குட்டை, அந்தியூர் காலனி, போன்ற பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இரவு 10 மணிக்குப் பிறகு மழை நின்றவுடன் தவிட்டுபாளையம் அந்தியூர் டவுன் பகுதிகளில் மின் ஊழியர்கள் மின்தடையை சரி செய்தனர்.

    மேலும் ஈச்சபாளையம் உட்பட்ட பகுதிகளில் அதிகாலை 5 மணிக்கு மின் வினியோகம் வந்தது. இதனால் விடிய, விடிய மக்கள் இருளில் அவதி அடைந்தனர்.

    இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், அத்தாணி, டி.என்.பாளையம் போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று பகலில் கடும் வெயில் வாட்டிய நிலையில் இரவு, 7 மணிக்கு மேல் மேகமூட்டம் ஏற்பட்டு, குளிர்ந்த காற்று வீசியது. 7.50 மணிக்கு மேல் கடும் புழுதி காற்றுடன், மின்னல், இடியுடன் மழை பெய்தது.

    இதன் காரணமாக ஈரோடு பஸ் நிலைய வளாகத்தில், 8 மணிக்கு டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இதனால் பஸ் நிலையம், சத்தி சாலை, வீரப்பன்சத்திரத்தில் ஒரு பகுதி, மூலப்பட்டறை, அகில்மேடு வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, பழனி மலை வீதி போன்ற இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    ஈரோடு ரெயில்வே நிலையம் எதிரே, ஒரு மின் கம்பம் காற்றால் சாய்ந்து, மின்தடை ஏற்பட்டது.

    ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, எஸ்.கே.சி., சாலை, சூரம்பட்டி நான்கு ரோடு உட்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் மின் தடை நீடித்தது. இரவு 8 மணிக்கு ஏற்பட்ட மின்தடை இரவு 11 மணிக்குத்தான் வந்தது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    சென்னிமலை 42, பவானிசாகர் 34.6, வரட்டுப்பள்ளம் 17, ஈரோடு 15, அம்மாபேட்டை7, தாளவாடி 6, பவானி 5.4, சத்தியமங்கலம் 4, பெருந்துறை 2, கவுந்தப்பாடி 1.6.
    சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய உண்டியல் நிறுவப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு பிரம்மலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய உண்டியல் நிறுவப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

    சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட முருங்கத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ளது பிரமலிங்கேஸ்வரர் கோவில். 

    இந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி உத்தரவின் பேரில் புதிய இரும்பு உண்டியல் ஒன்று நிறுவப்பட்டது. 

    ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய உண்டியல் நிறுவ உதவி ஆணையர் உத்தரவு பெறப்பட்டு. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உண்டியல் நிறுவப்பப்படாமல் இருந்தது.

    தற்போது உதவி ஆணையர் உண்டியல் நிறுவ வேண்டும் என உத்தரவிட்டதன் பேரில் ஒரு சிலர் ஆட்சேபணை தெரிவித்தும் கோவில் தக்கார் ரமணிக்காந்தன்  முன்னிலையில் புதிய உண்டியல் நிறுவப்பட்டு, பெருந்துறை சரக கோவில் ஆய்வாளர் ரவிக்குமார் உண்டியலுக்கு இலாக்கா முத்திரையிடார். 

    இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள் சுகுமார், ஸ்ரீதர், விசுவநாதன், உமா செல்வி, அந்தியூர் சரகம் ஆய்வாளர் மாணிக்கம், ஈரோடு ஆய்வாளர் தினேஷ்குமார், போலீசார், சென்னிமலை கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
    மொடக்குறிச்சி அருகே டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் அருகே உள்ள மண்கரடு, செல்வம் நகரை சேர்ந்தவர் சங்கர் (37). இவரது மனைவி பூங்கொடி. சங்கர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். பூங்கொடி கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

    இந்நிலையில் சங்கருக்கு உடல்நலப் பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்த வந்தார். இந்நிலையில் மீண்டும் கடந்த 6 மாதமாக உடல்நிலை பிரச்சினையால் அவதி அடைந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு  களைப்புடன் சங்கர் வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள தகர செட்டில் அமர்ந்திருந்தார். அப்போது பூங்கொடி வந்து கேட்டபோது தனக்கு களைப்பாக இருப்பதால் சற்று ஓய்வு எடுத்து வருவதாக கூறினார்.

    பின்னர் பூங்கொடி சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது சங்கர் தகர ஷீட்டில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். 

    உடனடியாக சங்கரை மீட்டு சிகிச்சைக்காக எழுமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நம்பியூர், எலத்தூர் பேரூராட்சியில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு செய்தார்.
    ஈரோடு:

    நம்பியூர், எலத்தூர் பேரூராட்சியில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு செய்தார்.

    ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருமந்தூர், சுண்டக்காம்பாளையம், லாகம்பாளையம், தாழ்குனி, கெட்டிச்செவியூர், கோசணம் மற்றும் நம்பியூர்,  எலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  ரூ.7.25 கோடி மதிப்பீட்டில்   மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்பியூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.61 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வரும் வாரச்சந்தை வணிக வளாகத்தினையும், காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மறு சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.32  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நம்பியூர் பேரூராட்சியில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் சார்பில் ஒரு விவசாயிக்கு 500 எண்ணிக்கையில் மலைவேம்பு மற்றும் 10 எண்ணிக்கையில் பெருநெல்லி ஆகிய மரக்கன்றுகளை வழங்கப்பட்டு, பராமரித்து வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, எலத்தூர்  பேரூராட்சியில்  கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் நகமலை முதல் கடம்செட்டிபாளையம் வரை சாலை அமைக்கும் பணியினையும், சுண்டக்காம் பாளையம் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர்  வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கும் பணியினையும், அதேப் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செம்மை கரும்பு சாகுபடி திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு ரூ.7,920/- மானியத்தில் 9000 ஒரு பருநாற்றுகள் வழங்கி 0.72 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு பராமரித்து வருவதையும், அதனைத் தொடர்ந்து, லாகம்பாளையம் ஊராட்சி, எல்.மேட்டுப்பாளையம் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.1.30 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ள–தையும்,அதேப் பகுதியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதையும்,மேலும்,அதேப் பகுதியில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பிரதான் மந்திரிகிரிஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.33  லட்சம் மானியத்தில் 1.20 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறிப் பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்துள்ளதையும்,வேமாண்டம்பாளையம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய–கழிப்பறைஅமைக்கும் பணியினையும் நேரில் சென்றுபார்வையிட்டுஆய்வுமேற்கொண்டார். 
    முன்னதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சுண்டக்காம்பாளையம் ஊராட்சி,– சிட்டாம்பா–ளையத்தில் பொது–மக்களிடமிருந்து மழைநீர்  வடிகால் வசதி, பட்டா, பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, மனுக்களின் மீது விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
     
    மேலும், லாகம்பாளையம்  ஊராட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணைமின் நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குருமந்தூர் ஊராட்சியில் 7 குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள நீர்தேக்க தொட்டி மற்றும் நடுப்பாளையம் பகுதியில் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும், அதேப் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியினை பார்வையிட்டு உணவு பொருட்கள் இருப்பு மற்றும் பதிவேடுகளையும், தொடர்ந்து, நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், கோசணம் ஊராட்சி திட்டமலையில், தோட்டக்கலை துறையின் சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ரூ.50,000 மானியத்தில் செயல்படும் காளான் வளர்ப்பு கூடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், கெட்டிச்செவியூர் ஊராட்சியில் ரூ.1.38கோடி மதிப்பீட்டில் பாரத பிரதமரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தீர்த்தம்பாளையம் சாலை முதல் காளியப்பம்பாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து, நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், தாழ்குனி ஊராட்சி அக்கரை பாளையத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.09 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நூலக கட்டிடத்தினையும், தாழ்குனி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவேடுகளையும், சி.எஸ்.ஐ. காலனியில் 15-வது நிதிக்குழுமானியத்தின் கீழ் ரூ.1.39 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வடிகாலினையும், தாழ்குனி ஊராட்சி தூய்மை பாரத இயக்கம் திட்டம் கீழ் ரூ.1.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பொதுக்கிணறுஅருகில் செங்குத்து உறிஞ்சுக் குழியினையும்,

    அதனைத் தொடர்ந்து, கெட்டிச்செவியூர் ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ் ரூ.1.70  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டி–னையும், சாந்திபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயல்படும் நியாய விலைக்கடை மற்றும் உணவு பொருள்கள் இருப்பு பதிவேடு, கெட்டிச் செவியூர் ஊராட்சி தண்ணீர் பந்தல் பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉ றுதி திட்டத்தின் கீழ் ரூ.7.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையினையும், நிச்சாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.9.17 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் வர்ணம் பூசும் பணியினையும், சின்னாரிபாளையத்தில் தோட்டக் கலைத் துறையின் மூலம் நுண்ணீர் பாசனம் துணைநீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.1.90  லட்சம் மானியத்தில் 1.61 ஹெக்டேர்  பரப்பளவில் சொட்டுநீர் பாசனம், நீர்தேக்க தொட்டி மற்றும் மின் மோட்டார் அமைப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

    இந்த ஆய்வின் போது, நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல்,  பிரேமலதா, உதவிப்பொறியாளர் பெரியசாமி,  விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    பவானிசாகர் அருகே பவானி ஆற்றில் ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    பவானிசாகர் அருகே பவானி ஆற்றில் ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானிசாகர் அடுத்த படுகுதுறை பவானி ஆற்றின் நீரேற்று நிலையம் அருகே இக்கரைதத்தப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி மற்றும் கிராம உதவியாளர் பழனிசாமி ஆகியோர் ஆய்வு செய்து கொண்டு இருந்தனர். 

    அப்போது பவானி ஆற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

     இதில் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குடியை மறக்க முடியாததால் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    குடியை மறக்க முடியாததால் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (46). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

    இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குடி பழக்கத்தை  விடுவதற்காக புதுவலசு பகுதியில் உள்ள ஒரு முகாமில் முருகன் சேர்க்கப்பட்டு 4 மாதம் தங்கி அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

     இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த முகாமில் இருந்து முருகனை அவரது அக்கா ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அைழத்து வந்தார். ஆனால் தொடர்ந்து முருகன் குடி பழக்கத்தை கைவிட முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் முருகன் ரங்கம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

     இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

     இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பவானிசாகரில் 8 மாத கர்ப்பிணி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    பவானிசாகரில் 8 மாத கர்ப்பிணி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானிசாகர் சி.ஆர். முகாம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி யோகபிரியா என்ற நித்யா (26). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

     தற்போது நித்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    இதனால் நித்யா கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் புஷ்பராணி வீட்டுக்கு சென்று அங்கு தங்கி இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வந்த நித்யா திடீரென மாயமாகி விட்டார். வெளியில் சென்று இருந்த புஷ்பராணி வீட்டுக்கு வந்த  பார்த்த போது அங்கு நித்யா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

     அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்த போது அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து புஷ்பராணி பவானிசாகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

    போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் - போலீஸ் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் - போலீசார் பங்கேற்ற விளையாட்டு போட்டி தொடங்கியது. 

    இந்த போட்டியை ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார். குண்டெறிதல்,கோகோ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கால்பந்து, வாலிபால், 100, 200, 400, 1500 மீட்டர் ஓட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் தடகள போட்டி நடந்து வருகிறது.

    போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன், தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன், டவுன் இன்ஸ்பெக்டர் தேவராணி, கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் நிர்மலா, வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் உட்பட பல்வேறு போலீசார் மற்றும் பொதுமக்களிடையே விளையாட்டி போட்டு நடந்து வருகிறது.

      பொதுமக்களும், போலீசாரும் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். நாளை ஈரோடு சி.எஸ்.ஐ விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடை பெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 5 சப் டிவிஷன்களிலும் இன்று பொதுமக்கள் போலீஸ் நல்லுறவு விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த வாரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிசுகளை வழங்குகிறார்.
    ×