என் மலர்
ஈரோடு
- பஸ்சின் முன்பக்க இரு சக்கரங்களும் கழன்று பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது.
- பஸ் பயங்கர சத்தத்துடன் குலுங்கியபடி நின்றது.
கொடுமுடி:
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரசு டவுன் பஸ் 6 ஏ நம்பர் ஈரோட்டில் இருந்து சோலார், மொடக்குறிச்சி வழியாக பாசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பஸ்சை கதிர்வேல் என்பவர் ஓட்டி வந்தார். மணி என்பவர் கண்டக்டராக இருந்தார்.
பஸ் ஊஞ்சலூர் அடுத்த சோளாங்காபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் முன்பக்க இரு சக்கரங்களும் கழன்று பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது.
இதனால் பஸ் பயங்கர சத்தத்துடன் குலுங்கியபடி நின்றது. பயணிகள் உயிர் தப்பினர்
இதில் பஸ்சில் பயணம் செய்த 8 பயணிகள் உயிர் தப்பினர்.
இதைத்தொடர்ந்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அந்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
- ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வாடகை பாக்கி வைத்திருந்தனர்.
- 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் 2022-2023-ம் ஆண்டு க்கான சொத்து வரி, காலி இட வரி, குடிநீர் வரி, வணிக கடைகளுக்கான வாடகை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் சொத்து வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீட்டின் குடிநீர் இணைப்பினை துண்டித்தும், மாநகராட்சி வணிக கடைகளுக்கான வாடகை பாக்கி வைத்திருந்தால் கடைகளுக்கு பூட்டி சீல் வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு சொந்த மான நேதாஜி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகள் வாடகை யாக ரூ.97 ஆயிரத்து 965 ரூபாய் மாநகராட்சிக்கு செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் அந்த மூன்று கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பணம் செலுத்தாததால் 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.15 அடியாக குறைந்து உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 704 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.15 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 704 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
காளிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- திடீரென மனோஜ்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
- பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கே.ஜி.வலசு, மேற்கு தலவுமலை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதில் 2-வது மகன் மனோஜ்குமார் (20). டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்டோர் இன்சார்ஜாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் மனோஜ்குமாருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு சரியாக சாப்பிட முடியாமல் உடல் எடை குறைந்தது.
இதனையடுத்து அவர் தான் வேலை பார்த்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது குடல் பகுதியில் புண் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டார்.
பின்னர் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மனோஜ்குமாருக்கு கல்லீரல் பாதிப்பு மற்றும் தைராய்டு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
மருத்துவரின் அறிவுரையின் பேரில் ஈரோட்டில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மனோஜ்குமார் சேர்ந்தார்.
இந்நிலையில் திடீரென மனோஜ்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மனோஜ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெப்பிலி ஒழுங்கு முறை துணை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- விவசாயிகள் 3,697 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்த வெப்பிலி ஒழுங்கு முறை துணை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் விவசாயிகள் 3,697 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 23 ரூபாய் 89 காசுக்கும், அதிகபட்ச விலையாக 27 ரூபாய் 79 காசுக்கும், சராசரி விலையாக 26 ரூபாய் 52 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 1,692 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.42 ஆயிரத்து 109 விற்பனையானது.
- கருந்தலைப் புழுவின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது.
- கோடை காலங்களில் இதன் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
கோபி:
தென்னையைத் தாக்கும் கருந்தலைப் புழு மேலாண்மை முறைகள் குறித்து கோபிசெட்டிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி கூறியிருப்பதாவது:
தென்னையைத் தாக்கும் கருந்தலைப் புழுவின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது. ஆனால் கோடை காலங்களில் இதன் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
இது அனைத்து வயது மரங்களையும் தாக்கும், இப்புழுக்கள் மரத்தில் அடிப் பகுதிகளில் உள்ள ஓலைகளில் பச்சையத்தை சுரண்டி உண்பதால் மரத்தின் மேற்பகுதியில் உள்ள 3-4 ஓலைகளை தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து விடும்.
அதிகமாக தாக்கப்பட்டமரங்கள் தீயினால் எரிந்தது போன்று காணப்படும். தாக்கப்பட்ட ஓலைகளின் அடிப்பகுதியில் செம்மண் நிறத்தில் கூடுகள் காணப்படும்.
இப்புழுக்களை கட்டுப்படுத்த முதலில் தாக்கப்பட்ட ஓலைகளை வெட்டி எடுத்து தீயிட்டு அழித்து விட வேண்டும். குறிப்பாக கோடைக் காலம் தொடங்கும் முன்பே இதை செய்து விடுவது நன்று.
பெத்திலிட் மற்றும் பிரக்கானிட் என்ற குளவி வகை குடும்பங்களை சார்ந்த ஒட்டுண்ணிகளை 1 எக்டருக்கு 3000 என்ற அளவில் இலையின் அடிப் பாகத்தில் விட வேண்டும்.
பிராக்கானிட் ஒட்டுண்ணி கோபி செட்டிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தென்னை ஒட்டுண்ணி வளர்ப்பு நிலையத்தில் கிடைக்கும்.
இது தேவைப்படும் விவசாயிகள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு முன்கூட்டியே பதிவு செய்து ஒட்டுண்ணிகளை வாங்கி பயன்படுத்தி தென்னையைத் தாக்கும் கருந்தலைப் புழுக்களை திறம்பட கட்டுப் படுத்தலாம்.
ரசாயன பூச்சிக் கொல்லிகளை தெளிப்பு செய்திருந்தால் 3 வாரங்கள் கழித்து ஒட்டுண்ணிகளை விட வேண்டும்.
இதன் தாக்குதல் ஒட்டுண்ணிகளால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கும் போது டைக்குளோர் வாஸ் 100 இசி அல்லது மாலத்தியான் 50 இசி அல்லது குயினல்பாஸ் அல்லது
பாஸலோன் போன்ற ரசாயனபூச்சிக் கொல்லிமருந்துகளை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி மருந்து என்ற அளவில் கலந்து இலையின் அடிப்பகுதி நன்கு நனையுமாறு தெளித்து கட்டுப்படுத்தலாம் .
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.
கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 937 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் 7 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- விருப்பம் உள்ளவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- தகுதியான விண்ணப்பதாரருக்கு ‘யூசர் நேம்’, ‘பாஸ்வேர்டு’ வழங்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இ–-சேவை மையம் தொடங்க படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர் முன் வரலாம். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன் வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மூலம் இ–-சேவை மையங்களை செயல்படுத்தி அரசின் சேவைகளை இருப்பிடத்தில் வழங்குகிறது.
அரசின் இணைய தள சேவையை மக்களுக்கான பொது இணைய தளம் மூலம் வழங்குகிறது. இதனை மேம்படுத்த 'அனைவருக்கும் இ–-சேவை மையம்' திட்டத்தை செயல்படுத்துகிறது.
விருப்பம் உள்ளவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் https://www.tnesevai.tn.gov.in/ மற்றும் https://tnega.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியை பயன்படுத்தி வருகின்ற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கிராமப்புறங்களில் இம்மையம் பெற விண்ணப்ப கட்டணம் 3,000 ரூபாய். நகர்புற கட்டணம் 6,000 ரூபாய். இக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். தகுதியான விண்ணப்பதாரருக்கு 'யூசர் நேம்', 'பாஸ்வேர்டு' வழங்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- நாயின் உரிமையாளர் மாணிக்கம் இது குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்தார்.
- நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கழுதை பாலி என்ற பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் தனது விவசாய தோட்டத்தில் கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வளர்த்து வரும் கோழிகளை அடிக்கடி ஒரு நாய் பிடித்து சென்றது. இது குறித்து அண்ணாதுரை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மோகன்ராஜ் (28) என்பவரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ஜி.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஒரு நாய் அண்ணாதுரையின் விவசாய தோட்டம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றது. அப்போது அந்த நாய் தான் கோழிகளை பிடித்து சென்ற நாய் என்று கருதி அண்ணாதுரை இது குறித்து தனது நண்பர் மோகன்ராஜிக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மோகன்ராஜ் தனது வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து அந்த நாயை சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்த நாய் அங்கேயே இறந்துவிட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் நாயின் உரிமையாளர் மாணிக்கம் இது குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு காயத்துடன் இறந்து கிடந்த நாயை மீட்டனர். மேலும் அண்ணாதுரை மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இறந்த நாயின் உடல் இன்று கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பகல் நேரங்களில் அனல் பறக்கும் வெப்ப காற்று வீசிவருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை நிலவும் வெயில் காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம்இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.
வழக்கம் போல் நேற்றும் மாவட்டம் முழுவதும் அனல் காற்று வீசியது. இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை வருவது போல் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பவானி பகுதியில் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
இதே போல் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஏராளமான வாழைகள் முறிந்து சேதமானது. இந்த மழையின் காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-
கோபிசெட்டிபாளையம்-26.2, பவானி-28.6, எலந்தகுட்டை மேடு-16.2, மாவட்டம் முழுவதும் 71 மி.மீ. மழை பெய்தது.
- மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- 7 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு, மார்ச். 21-
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.
கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 677 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 936 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் 7 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- தலைமறைவாக இருந்த மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
- பின்னர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி ஆனந்தம் பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (58). இவர் அதே பகுதியில் பால் சொசைட்டி செயலாளராக உள்ளார். இவரது மகன் மோகன சுந்தரம் எலக்ட்ரீசியன் படித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் கோபாலு க்கு பவானி சிங்கம் பேட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (45) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் பூனாச்சி துணை மின் நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் மூர்த்தி தனக்கு மின் வாரியத்தில் தலைமை அதிகாரிகள் பழக்கம் உள்ளது என கோபாலிடம் கூறியுள்ளார். பணம் கொடுத்தால் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய கோபால் தனது மகன் மோகனசுந்தரத்துக்கு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காக கோபாலிடம் முதற்கட்டமாக ரூ.7 லட்சம் வழங்கியுள்ளார்.
பின்னர் மேலும் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். வேலை உறுதியாகி விட்டதாக கூறி மேலும் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு தபாலில் பணி நியமன ஆணையை அனுப்பியுள்ளார்.
இந்த பணி நியமன ஆணையுடன் மோகன சுந்தரம் மின்வாரிய அலுவல கத்தில் பணியில் சேர சென்றபோது அவை போலி என தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த தந்தையும், மகனும் மூர்த்தியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதிலளி க்காமல் தலைமறை வாகி விட்டார்.
இதேப்போல் அந்தியூர் பிரம்மதேசத்தை சேர்ந்த விஜயகுமார், வெற்றிவேல் ஆகியோரிடமும் மின்வாரி யத்தில் வேலை வாங்கி தருவதாக தலா ரூ.4 லட்சம் மூர்த்தி பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தியூர், பவானி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 24 பேரிடம் ரூ.1 கோடியே 25 லட்சம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி மூர்த்தி ஏமாற்றியது தெரியவந்தது.
2 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த மூர்த்தி யை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்ப ட்டார்.
இந்த மோசடியில் மூர்த்திக்கு மூளையாக மற்றொருவர் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அவர் தற்போது தலை மறைவாக உள்ளார்.
அவரை பிடி க்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் பிடிப்ப ட்டால் இந்த மோசடியில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரியவரும்.






