என் மலர்
திண்டுக்கல்
- குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனையில் இருந்த ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- நிலக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள வீலி நாயக்கன்பட்டியை சேர்ந்த தவசீலன் (53). இவர் சலூன் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களாக குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி அரசு மகளிர் கலைக் கல்லூரி பகுதியிலுள்ள மின் டிரான்ஸ்பார்மரில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைைமயில் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த தவசீலனுக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.
- நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(28-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(28-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நிலக்கோட்டை, நூத்துலா புரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம், கே.புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலி நாயக்கன்பட்டி, சுட்டிக் காலடிப்பட்டி, அவையம்பட்டி, மணியகாரன்பட்டி, பங்களாபட்டி, சீத்தா புரம், தோப்புபட்டி,
சின்னமநாயக்கன்கோட்டை, கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
- சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. குறிப்பாக ஸ்கீம்ரோட்டில் திரும்பும்போது ஆபத்தான முறையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது.
- காலை நேரத்தில் வேகமாக வரும் பஸ்கள் அதில் மோதும் வாய்ப்பு உள்ளதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சேலம், கரூர், ஈரோடு, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து வரும் பஸ்களும், நத்தத்தில் இருந்து வரும் பஸ்களும், ரவுண்டானாவை கடந்து சாலைரோடு, அரசு ஆஸ்பத்திரி, பூமார்க்கெட் வழியாக பஸ் நிலையம் சென்று வந்தது.
இதனால் கிராமங்களில் இருந்துவரும் பொதுமக்கள் கோட்டை மாரியம்மன்கோவில், பூமார்க்கெட், அரசுஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு வசதியாக இருந்தது. ஆனால் தொலைதூரம் சுற்றிச்செல்வதால் மாற்று வழியாக ரவுண்டானாவில் இருந்து மெங்கில்ஸ்ரோடு மற்றும் ஸ்கீம்ரோடு வழியாக பஸ்நிலையம் செல்கிறது. இந்த சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. குறிப்பாக ஸ்கீம்ரோட்டில் திரும்பும்போது ஆபத்தான முறையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது.
காலை நேரத்தில் வேகமாக வரும் பஸ்கள் அதில் மோதும் வாய்ப்பு உள்ளதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் தனியார் பஸ்கள் டைமிங் பிரச்சினையில் ஒருவரையொருவர் முந்தி செல்ல முயல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் பஸ்களில் வருகின்றனர். அவர்களையும் ஆபத்தில் சிக்க வைக்கும் முறையில் பஸ்களை இயக்குவதால் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே போக்குவரத்து அதிகாரிகள் பஸ்நிலையத்திற்கு மாற்றுவழியில் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் கிராமத்தில் வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை நடைபெறுகிறது.
- ராமநாதபுரத்திற்கு செல்லும் நபர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்து மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் எடுத்துரைத்தார்.
குள்ளனம்பட்டி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் கிராமத்தில் வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை நடைபெறுகிறது. இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வருகை தருவார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு செல்லும் நபர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்து மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் எடுத்துரைத்தார்.
அவர் பேசுகையில்,தற்போது அமலில் உள்ள தடைஉத்தரவின்படி பசும்பொன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாடகை வாகனங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள், டிராக்டர், ஆட்டோ, டாடாஏசி போன்ற வாகனங்கள் மூலமாகவும், திறந்தவெளி வாகனங்களில் செல்லவும் அனுமதி கிடையாது.
சொந்த 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் மட்டுமே உட்கோட்ட அலுவலகங்களில் முன்அனுமதி பெற்று செல்லலாம். சொந்த வாகனத்தில் செல்வோர் உரிமையாளர் பெயர், அதில் பயணம் செய்பவர்கள், வாகனத்தின் பதிவு எண், ஓட்டுனர் போன்ற விபரங்களை உள்ளூர் போலீஸ் நிலையத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அங்கு தரப்படும் அனுமதி சீட்டினை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும்.
வாகனத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்திச்செல்ல கூடாது. சாதி உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கவோ, கோஷங்கள் எழுப்பவோ அனுமதி கிடையாது.
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகனத்தின் உரிமையாளர் தணிக்கையின்போது கட்டாயம் வாகனத்தில் இருக்க வேண்டும். வாகனத்தில் ஆயுதங்கள், மதுபானங்கள் எடுத்துச்செல்ல கூடாது. வழியோரங்களில் வெடிகள் போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்பவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து காலை 10 மணிக்குள் புறப்பட வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களினால் அனுமதிசீட்டு பெறாத வாகனங்களுக்கு சோதனைச்சாவடிகளில் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் வழங்கப்படும் அனுமதி சீட்டை வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும்.
பிற மாவட்டங்களில் இருந்து செல்லும் வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் வரையறுக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். தலைவர்களுடன் செல்லும்போது 3 வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும்.
அலங்கார ஊர்தி, அணிவகுப்பு, மாட்டு வண்டியில் செல்லுதல், சாதி தலைவர்களின் வேடம் அணிந்து செல்லுதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. வருகிற 30-ந்தேதி மட்டும் அவர்களது சொந்த ஊரில் புகைப்படம் எடுத்து மாலை அணிவித்து மரியாதை செய்யலாம் என்றார்.
- திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூரிய கிரகணத்தின்போது மேகம் சூழ்ந்திருந்தது.
- பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் கிரகணத்தின்போது உலக்கையை உரல் மீது நிறுத்தி வைப்பார்கள். கிரகணம் நடைபெறும் நேரத்தில் அந்த உலக்கை கீழே விழுகாமல் நேராக நிற்கும்.
வடமதுரை:
சூரிய கிரகணம் நேற்று மாலை 4.29 மணியிலிருந்து 5.48 மணிவரை நடைபெற்றது. இதனை வெறும் கண்களால் பார்த்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் பல்வேறு பகுதிகளில் கண்ணாடி அணிந்து பொதுமக்கள் பார்த்தனர்.
கொடைக்கானலில் மேகமூட்டம் இருந்ததால் கிரகணம் தெரியவில்லை. இதேபோல் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூரிய கிரகணத்தின்போது மேகம் சூழ்ந்திருந்தது. பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் கிரகணத்தின்போது உலக்கையை உரல் மீது நிறுத்தி வைப்பார்கள். கிரகணம் நடைபெறும் நேரத்தில் அந்த உலக்கை கீழே விழுகாமல் நேராக நிற்கும்.
தற்போதும் பெரும்பாலான கிராமங்களில் இந்த முறையில் கணித்து வருகின்றனர். நேற்று கிரணகத்தின்போது எரியோடு அருகே தொட்டணம்பட்டியை சேர்ந்த விவசாயி சிவா(32) தனது விளைநிலத்தில் நெல்குத்தும் உரல் மீது உலக்கையை நிற்க வைத்தார். அது கிரகணம் முடியும் வரை நேராக நின்றது.
இதேபோல் திண்டுக்கல்லில் பல வீடுகளில் உலக்கையை நிறுத்தி வைத்தனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. மாறி வரும் விஞ்ஞான உலகில் நமது முன்னோர்களின் பாரம்பரியத்தையும் பின்பற்ற வேண்டும். தொழில்நுட்ப வசதி இல்லாத காலத்தில் சூரிய கிரகணம் கோள்களின் இயக்கம் ஆகியவற்றை சிற்பம் மூலம் வெளிப்படுத்தினர்.
எனவே நாமும் அதை பின்பற்ற வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
- வடமதுரை துணை மின் நிலையத்தில் நாளை (27-ந்தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமதுரை:
வடமதுரை துணை மின் நிலையத்தில் நாளை (27-ந்தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை புத்தூர், வடமதுரை, போஜனம்பட்டி, காணப்பாடி, வேலாயுத ம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, சடையம்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, அழகர் நாயக்கன்பட்டி, வெள்ளைபொம்மன் பட்டி, ஊராளிபட்டி, சீத்தப்பட்டி, தும்மலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
- ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்.
- போலீசார் போராட்டம் நடத்தியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பகுதியில் வாழும் இந்து அருந்ததியர் மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வலியுறுத்தி ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் ராமன் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் ராமனிடம் பட்டா வழங்குவதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு பட்டா வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இதை அறிந்த நிலக்கோட்டை வருவாய்த்துறை அதிகாரிகள், நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜூக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் போராட்டம் நடத்திய ராமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மன்னவனூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு ள்ள இயற்கை வயல்வெளி களில் அமர்ந்து மதுபானம் அருந்தி செல்கின்றனர்.
- அரசு பள்ளி வளாகத்தில் அமர்ந்து மதுபானம் குடித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சிய டைய வைத்துள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் தற்போது 2வது சீசன் தொடங்கி உள்ளது. கடும் மேகமூட்டமும், பனி ப்பொழிவும் நிலவி வருவ தால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரி த்துள்ளது. அவர்கள் கொடைக்கான லின் முக்கிய சுற்றுலா தலங்களான குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு கள், ஏரி, மோயர்பாயிண்ட், பிரையண்ட்பார்க் உள்ளி ட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இதேபோல கொடை க்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேல்மலைக் கிராமமான மன்னவனூர் பகுதிக்கு வருகின்றனர். இங்கு அமைந்துள்ள சூழல் சுற்றுலா இடத்தைக் கண்டு ரசிப்பதோடு, தற்போது புதிதாக தொடங்க ப்பட்டுள்ள சுற்றுலா ஏற்பாடுகளையும் கண்டு அதில் பங்கேற்று உற்சாக மடைந்து வருகின்றனர்.
மன்னவனூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு ள்ள இயற்கை வயல்வெளி களில் அமர்ந்து மதுபானம் அருந்தி செல்கின்றனர். அதன் பின்பு அவர்கள் காலி மது பாட்டில்களை வயல்வெளி யிலேயே வீசி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவ தோடு, கால்நடைகளுக்கு காயம் ஏற்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் உடன்வரும் சிறுவர்களும் மதுபானம் அருந்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இவர்களை பார்த்து உள்ளூர் சிறுவர்க ளும் மதுபானம் அருந்தி வருகி ன்றனர். இவர்களுக்கு டாஸ்மாக் கடை ஊழியர்க ளும் வயதைப் பற்றி கவலைப்படாமல் மது பானம் கொடுத்து விடுகின்ற னர். இங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் இவர்கள் அமர்ந்து மதுபானம் குடித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சிய டைய வைத்து ள்ளது.
தற்போது கொடை க்கானலில் காலி மதுபாட்டி லுக்கு ரூ.10 கொடுக்கப்படு கிறது. இதனால் விவசாயிகள் சிலர் அந்த பாட்டிலை அகற்றி டாஸ்மாக் கடை களில் கொடுத்துவிடு கின்றனர். ஆனால் சிறுவர்க ளின் மது பழக்கத்தால் அவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
எனவே கொடைக்கான லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மதுபானங்களை அருந்தி வயல்வெளிகளில் வீசுவதை தவிர்க்க வேண்டும். சிறுவர்களுக்கு மதுபானங்கள் வழங்குவதை டாஸ்மாக் கடை ஊழியர்கள் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழகத்தில் சென்னை நீங்கலாக 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
- உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், ஓட்டுனநர்கள் போன்ற கூடுதல் பணியிடங்கள் திண்டுக்கல் மாநகராட்சியில் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி தொடங்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் நகராட்சியாக இருந்தபோது உள்ள பணியாளர்களே செயல்பட்டு வந்தனர். இதனால் பல்வேறு பணிகளில் மந்தநிலை காணப்பட்டது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளை சிறப்புநிலை அ பிரிவு மாநகராட்சிகளாகவும், சேலம், திருச்சி, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளை சிறப்பு நிலை ஆ பிரிவு மாநகராட்சிகளாகவும் தரம் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகள் தேர்வு நிலை மாநகராட்சி எனவும், 3 முதல் 5 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகள் நிலை 1 மாநகராட்சியாகவும், அதற்கு கீழ் மக்கள் தொகை கொண்ட திண்டுக்கல் மற்றும் சிவகாசி மாநகராட்சிகள் நிலை 2 பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பின்பும் மண்டல அலுவலகங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான செயல்பாடுகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பணிகளுக்கும் பல்வேறு இடங்களில் இருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கே மக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை ஆணையர் பணியிடம் மட்டுமே உள்ளது.
4 மண்டலங்களுக்கும் தனித்தனியாக உதவி ஆணையர்கள், நியமிக்கப்பட உள்ளனர். இதுதவிர வருவாய் பிரிவிற்கு ஒரு உதவி ஆணையாளர் என மொத்தம் 5 ஆணையாளர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கு அலுவலர், மாமன்ற செயலாளர், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு உதவி வருவாய் அலுவலர் என ெமாத்தம் 4 உதவி வருவாய் அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், ஓட்டுனநர்கள் போன்ற கூடுதல் பணியிடங்கள் திண்டுக்கல் மாநகராட்சியில் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களுக்கான தேவைகள் உடனுக்குடன் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
மேலும் அத்தியாவசிய பணிகள் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தோப்புப்பட்டி நோக்கி மதுரை - பெரியகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கொடைக்கானலில் இருந்து வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள தோப்பு பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செந்தூரபாண்டி (வயது 32). இவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு நகை கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரும் தம்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் காளிதாஸ் ( 24 ) ஆகிய 2 பேரும் நிலக்கோட்டையில் இருந்து தோப்புப்பட்டி நோக்கி மதுரை - பெரியகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானலில் இருந்து வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட செந்தூரபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காளிதாஸ் பலத்த காயங்களுடன் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- காய்கறிகளின் விலைக்கேற்ப ரூ.10 முதல் ரூ.20 வரை ஒரு கூறு என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர்.
- இதன்மூலம் கூடுதல் காய்கறிகளை வாங்கி சென்று அதனை வீணாக்கும் நிலையும் தவிர்க்கப்படுகிறது என்றார்.
வடமதுரை:
வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் விலை எப்போதும் நிரந்தமாக இருப்பதில்லை. பல சமயங்களில் விலை அதிகமாகவும், ஒரு சில சமயங்களில் அதிக விலை வீழ்ச்சி அடைந்து குப்பையில்கொட்டி செல்லும் நிலையும் ஏற்படுகிறது.
இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மட்டுமின்றி இல்லத்தரசிகளும் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இது தவிர மார்க்கெட்டுகளுக்கு சென்றால் ஒரு கிலோவுக்கு குறை யாமல் வாங்கினா ல்தான் காய்கறிகள் தருவார்கள். குறைந்த அளவு பயன்படுத்தும் மக்கள் சாலையில் விற்கப்படும் காய்கறிகளையே வாங்கும் நிலை உள்ளது.
இவர்களின் மன நிலையை உணர்ந்து அய்யலூர், வடமதுரை பகுதிகளில் கூறுகட்டி காய்கறிகள் விற்கப்படுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
காய்கறிகளின் விலைக்கேற்ப ரூ.10 முதல் ரூ.20 வரை ஒரு கூறு என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இது குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், நகர்புறங்களில் வசதி படைத்தவர்கள் அதிக அளவு காய்கறிகளை வாங்கி பிரிட்ஜில் வைத்து பல நாட்கள் உபயோகப்ப டுத்துவார்கள்.
ஆனால் வசதி இல்லாத ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களால் இயன்ற காய்கறிகளை குறைந்த அளவு வாங்கி செல்வது வழக்கம். விலை உயர்வு காரணமாக பல சமயங்களில் அவர்கள் வாங்க நினைக்கும் காய்கறிகளை வாங்க முடியாது. இதற்காகத்தான் வியாபாரிகள் காய்கறிகளை கூறுகட்டி விற்பனை செய்து வருகிறோம். தற்போது எங்களை பார்த்து பல ஊர்களிலும் இேதபோல விற்பனையை வியாபாரிகள் செய்து வருகின்றனர்.
அன்றாடம் கூலித்தொழில் செய்யும் மக்கள் தங்கள் வசதிக்கேற்ப ரூ.10 முதல் ரூ.20 வரை காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இதன்மூலம் கூடுதல் காய்கறிகளை வாங்கி சென்று அதனை வீணாக்கும் நிலையும் தவிர்க்கப்படுகிறது என்றார்.
- குதிரையாறு அணை அருகில் உள்ள புதுக்குளத்தில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
- அப்போது வலையுடன் சகதியில் சிக்கி வாலிபர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
பழனி:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகில் உள்ள கல்லாபுரத்ைத சேர்ந்தவர் மாரிமுத்து (வயது40). இவர் கடந்த சில நாட்களாக பழனி குதிரையாறு அணை அருகே வசித்து வந்தார். சம்பவத்தன்று குதிரையாறு அணை அருகில் உள்ள புதுக்குளத்தில் மீன் பிடிக்க சென்றார்.
ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தனது கணவர் மாயமானது கண்டு அவரது மனைவி மாரியம்மாள் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் தெய்வ வள்ளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
குதிரையாறு அணை அருகே அவர்கள் சென்று பார்த்தபோது கரையில் மாரிமுத்து அணிந்திருந்த ஆடைகள் மற்றும் செருப்பு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்து அணை ப்பகுதிக்குள் தேடினர். அப்போது வலையுடன் சகதியில் சிக்கி மாரிமுத்து இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குடிபோதையில் மீனுக்கு வலை வீசியபோது அதில் தான் சிக்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவி த்தனர். இறந்துபோன மாரிமுத்துவுக்கு 3 மகள்கள் உள்ளனர்.






