கொடைக்கானலில் வயல்வெளிகளில் மதுபாட்டில்களை வீசிச்செல்லும் சுற்றுலா பயணிகள்

மன்னவனூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு ள்ள இயற்கை வயல்வெளி களில் அமர்ந்து மதுபானம் அருந்தி செல்கின்றனர். அரசு பள்ளி வளாகத்தில் அமர்ந்து மதுபானம் குடித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சிய டைய வைத்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானலில் தற்போது 2வது சீசன் தொடங்கி உள்ளது. கடும் மேகமூட்டமும், பனி ப்பொழிவும் நிலவி வருவ தால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரி த்துள்ளது. அவர்கள் கொடைக்கான லின் முக்கிய சுற்றுலா தலங்களான குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு கள், ஏரி, மோயர்பாயிண்ட், பிரையண்ட்பார்க் உள்ளி ட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இதேபோல கொடை க்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேல்மலைக் கிராமமான மன்னவனூர் பகுதிக்கு வருகின்றனர். இங்கு அமைந்துள்ள சூழல் சுற்றுலா இடத்தைக் கண்டு ரசிப்பதோடு, தற்போது புதிதாக தொடங்க ப்பட்டுள்ள சுற்றுலா ஏற்பாடுகளையும் கண்டு அதில் பங்கேற்று உற்சாக மடைந்து வருகின்றனர்.

மன்னவனூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு ள்ள இயற்கை வயல்வெளி களில் அமர்ந்து மதுபானம் அருந்தி செல்கின்றனர். அதன் பின்பு அவர்கள் காலி மது பாட்டில்களை வயல்வெளி யிலேயே வீசி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவ தோடு, கால்நடைகளுக்கு காயம் ஏற்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் உடன்வரும் சிறுவர்களும் மதுபானம் அருந்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இவர்களை பார்த்து உள்ளூர் சிறுவர்க ளும் மதுபானம் அருந்தி வருகி ன்றனர். இவர்களுக்கு டாஸ்மாக் கடை ஊழியர்க ளும் வயதைப் பற்றி கவலைப்படாமல் மது பானம் கொடுத்து விடுகின்ற னர். இங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் இவர்கள் அமர்ந்து மதுபானம் குடித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சிய டைய வைத்து ள்ளது.

தற்போது கொடை க்கானலில் காலி மதுபாட்டி லுக்கு ரூ.10 கொடுக்கப்படு கிறது. இதனால் விவசாயிகள் சிலர் அந்த பாட்டிலை அகற்றி டாஸ்மாக் கடை களில் கொடுத்துவிடு கின்றனர். ஆனால் சிறுவர்க ளின் மது பழக்கத்தால் அவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

எனவே கொடைக்கான லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மதுபானங்களை அருந்தி வயல்வெளிகளில் வீசுவதை தவிர்க்க வேண்டும். சிறுவர்களுக்கு மதுபானங்கள் வழங்குவதை டாஸ்மாக் கடை ஊழியர்கள் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com