நிலக்கோட்டை அருகே சலூன் கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனையில் இருந்த ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நிலக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள வீலி நாயக்கன்பட்டியை சேர்ந்த தவசீலன் (53). இவர் சலூன் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களாக குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி அரசு மகளிர் கலைக் கல்லூரி பகுதியிலுள்ள மின் டிரான்ஸ்பார்மரில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைைமயில் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த தவசீலனுக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com