என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
    • 100-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    செந்துறை:

    நத்தம் அருகே செந்துறை சந்தைப்பேட்டையில் தனியார் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் சவரிமுத்துகொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பங்குத்தந்தை இன்னாசிமுத்து, பள்ளிதாளாளர் பிரிட்டோ, பள்ளி முதல்வர் மரிய பிரான்சிஸ் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைகவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் இயக்கக் கூடாது, சாலை விதிகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு 100-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • செம்பட்டி அடுத்த புதுகோடங்கிபட்டி அருகே சந்தேகத்தின்பேரில் நின்றிருந்த சின்னாள பட்டியைச் சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
    • விசாரணையில் 2 பேரும் பைக் திருடிதை ஒப்புக்கொண்டதால் போலீசார் கைது செய்தனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் சின்னமுனி யாண்டி. இவர் கடந்த வாரம் செம்பட்டி அடுத்த வத்தலக்குண்டு சாலையில் உள்ள புல்வெட்டி குளம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதுகுறித்து சின்னமுனியாண்டி செம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் செம்பட்டி அடுத்த புதுகோடங்கிபட்டி அருகே சந்தேகத்தின்பேரில் நின்றிருந்த சின்னாள பட்டியைச் சேர்ந்த இள ங்கோவன் மகன்மணி கண்டன் (வயது31), கண்ணன் மகன் பிரகாஷ் (22) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்கு ப்பின் முரணான தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன், மணிகண்டன் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி னர். பின்னர் அவர்களை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • இடப்பிரச்சினை மற்றும் குடிபோதையில் தகராறு செய்ததால் அண்ணனை கணவருடன் சேர்ந்து தங்கை சரமாரியாக வெட்டி பெட்ரோல் ஊற்றி எரித்தார்.
    • படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் போலீசார் தம்பதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடு சென்மார்பட்டியைச் சேர்ந்தவர் மணி (வயது 78). விவசாயி. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகன் வனராஜா (35) என்பவருக்கு மட்டும் திருமணம் ஆக வில்லை.

    இவர் விராலிமாயன்பட்டி ஊராட்சியில் மேல்நிலை தொட்டி குடிநீர் ஆபரேட்டராக உள்ளார். இவரது தங்கை நித்யா அதே பகுதியில் தனது 3 குழந்தைகளுடன் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நித்யாவின் கணவர் ராஜேஷ் உசிலம்பட்டியில் கறிக்கடை வைத்துள்ளார்.

    வனராஜா தனது தந்தைக்கு சொந்தமான 34 செண்ட் நிலத்தை வைத்து பராமரித்து வந்துள்ளார். அந்த நிலத்தில் தனக்கு பங்கு வேண்டும் என நித்யா கேட்டுள்ளார். ஆனால் தான் அந்த இடத்தில் பால்பண்ணை வைக்கப்போவதாகவும் அதனால் இடத்தை தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் குடிபோதையில் அடிக்கடி தனது தங்கை நித்யாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று நித்யா வீட்டுக்குள் சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் அவரையும் அரிவாளால் வெட்ட முயன்றார்.

    இது குறித்து தனது கணவரிடம் நித்யா கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் நள்ளிரவில் வனராஜா வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டு இருந்த அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த வனராஜா தப்பி ஓட முயன்ற போது அவர் மீது நித்யா பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்.

    இதில் அவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டதோடு வீட்டில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்தது. பலத்த காயங்களுடன் வனராஜா வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் ேமல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து விருவீடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து நித்யா மற்றும் ராஜேசை கைது செய்தனர்.

    • பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளைச்சம்பவங்கள், பெண்களிடம் நகை, செல்போன் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அழகாபுரியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்றிரவு இங்கு புகுந்த மர்மநபர்கள் தரைப்பகுதியை சேதப்படுத்தி எந்திரத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

    ஆனால் முடியாததால் எந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் பாதுகாப்பான எந்திரம் என்பதால் அதனை சேதப்படுத்த முடியவில்லை. நீண்டநேரம் போராடிவிட்டு பணம் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஏ.டி.எம் எந்திரம் சேதப்படுத்தியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் எந்திரத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்த பணம் தப்பியது தெரியவந்தது. எனினும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளைச்சம்பவங்கள், பெண்களிடம் நகை, செல்போன் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் இன்று காலை சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாநகராட்சி 43-வது வார்டு சி.கே.சி.எம் காலனியில் காளியம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினசரி கோவிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    கடந்த 15 வருடங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்த கோவில் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    நேற்று பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர். இன்று அதிகாலை கோவிலில் புகுந்த மர்மநபர்கள் அம்மனின் கிரீடம் மற்றும் இடதுகையை சேதப்படுத்தி சென்றனர். சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் இன்று காலை சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

    மேலும் அருகில் இருந்த உண்டியலில் குறைந்த அளவே பணம் இருந்துள்ளது. எனவே பணம் கிடைக்காத ஆத்திரத்தில் சிலையை உடைத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் கைரேகை தடயங்களையும் பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    கோவிலில் இருந்த மின்பெட்டியையும் சேதப்படுத்தி அதிலிருந்த பியூஸ் கட்டையை எடுத்து மின்வினியோகத்தை துண்டித்த பின்னர் கைவரிசையை காட்டியுள்ளனர். எனவே அந்த கோணத்திலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

    அதிகாலையில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஹெலிகாப்டர் தளத்தில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
    • கார் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெறும் பகுதி வரை செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி 35-வது பட்டமளிப்பு விழா நடந்தது. அந்த விழாவில் அப்போதைய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாந்த் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதன் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 3 ஆண்டுகளாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.

    இந்நிலையில் இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 11-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்ய வந்தனர்.

    பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கம், காந்திகிராம சுகாதார மற்றும் குடும்பநல அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அங்கிருந்து கார் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெறும் பகுதி வரை செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்க உள்ளவர்கள் யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • தன்னை கடித்த பாம்புடன் விவேக் போடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
    • சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்ததால் விவேக்கிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மல்லிகாபுரத்தைச் சேர்ந்தவர் விவேக் (வயது 25). இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார். இன்று தேவாரம் அருகே உள்ள திருக்கோட்டை பகுதியில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

    அங்குள்ள சிமெண்ட் கற்களை அகற்றிக்கொண்டு இருந்தபோது உள்ளே பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு சீறிப்பாய்ந்து அவரது வலது கையில் கடித்து விட்டது. இதனால் வலியால் அலறி துடித்த விவேக்கை அருகில் இருந்தவர்கள் ஆறுதல்படுத்தினர்.

    உடனடியாக அவரை கடித்த பாம்பையும் உயிருடன் பிடித்தனர். தன்னை கடித்த பாம்புடன் விவேக் போடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். இதை பார்த்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்ததால் விவேக்கிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அவர் தெரிவிக்கையில், தன்னை கடித்த பாம்பு எந்த வகை என டாக்டரிடம் தெரிவிக்கவே அதை கையில் பிடித்து வந்தேன். வலியால் நான் துடித்தபோது பாம்பை அருகில் இருந்தவர்கள் உயிருடன் பிடித்தனர் என்றார். இச்சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • காந்திவேல் குடிபோதையில் பைக்கை ஓட்டி உள்ளார்.
    • உடனடியாக குழந்தையை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சுக்காம்பட்டி எஸ்.குரும்பபட்டியை சேர்ந்தவர் காந்திவேல் (வயது 25). இவர் தீபாவளி அன்று தனது மனைவி மற்றும் 1 வயது குழந்தை கபிலனுடன் எஸ்.எஸ்.எம். கல்லூரி அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். மறுநாள் தனது ஊருக்குச் செல்வதற்காக தனது 1 வயது மகனை பைக்கில் அமர வைத்து அழைத்துச் சென்றார்.

    அப்போது காந்திவேல் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் மயிலாப்பூர் அருகே வந்தபோது பைக்கில் இருந்து குழந்தை தவறி விழுந்து படுகாயம் அடைந்தது. உடனடியாக குழந்தையை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

    தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சிறுவன் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தான். தந்தை குடிபோதையில் பைக் ஓட்டிய அலட்சியத்தால் 1 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்து ள்ளது.
    • பருவ மழை முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்து ள்ளது. இதனை முன்னிட்டு பருவ மழை முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழையால் அதிகம் பாதிக்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடி க்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் - பழனி பைபாஸ் புறவழிச்சாலையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாகவே தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடான நிலை இருந்து வந்தது. அந்த பகுதியில் ராட்சத குழாய்கள் பொருத்தப்பட்டு கழிவு நீர் வெளியே செல்லும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.

    இதே போல் மாநகராட்சி க்குட்பட்ட பல்வேறு பகுதி களிலும் மழைக்காலங்களில் அதிகம் பாதிப்பு ஏற்பட க்கூடிய பகுதிகளை கண்ட றிந்து அதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறிப்பாக பல தெருக்களில் கழிவு நீர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்து செல்லும் நிலை உள்ளது. பாதாள சாக்கடை தொட்டியில் மேன்ஹோல் பிரச்சினையால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தெருக்க ளில் செல்லும் நிலை உள்ளது.

    இதே போல் திண்டுக்கல் - திருச்சி சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுவ தால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இது போல பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு முன்னே ற்பாடு பணிகளை மேற்கொ ள்ள வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • போலீஸ் அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து மூலம் பிரச்சினைகளை தீர்த்து, உண்மைகளை மறைத்து அதன் மூலம் வளம் காண்கின்றனர்.
    • பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசார் அவர்களுக்கு அச்சுறுத்த லாக உள்ளார்கள் என்று பொதுமக்கள் வேதனை யடைந்துள்ளனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்டு 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சமீப காலமாக இங்கு வரும் புகார்கள் உரிய முறையில் விசாரிக்கப்படுவதில்லை. இங்குள்ள அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து மூலம் பிரச்சினைகளை தீர்த்து, உண்மைகளை மறைத்து அதன் மூலம் வளம் காண்கின்றனர். இதில் எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் அதிகார மையமாக நடந்து கொள்வது சக போலீசார் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் பெரியூர் நல்லூர் காடு பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்ற பெண் மரம் விழுந்து மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளனர். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடக்கிறது. குறிப்பாக பாச்சலூர் பகுதியில் கடந்த வருடம் பள்ளிக்கு சென்ற 11 வயது சிறுமி மர்மமான முறையில் தீக்காயங்களுடன் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து இது வரை எந்தவித உண்மையும் வெளிவரவில்லை. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தியும் கிணற்றில் போட்ட கல் போல கிடக்கிறது. அதே போல பல்வேறு வழக்குகள் வெளிவராமலேயே முடிந்து வருகிறது.

    காபி எஸ்டேட் பகுதி களில் திருட்டு, விவசாய நிலங்களில் அவகோடா, காபி உள்ளிட்ட விளை பொருட்கள் திருடு போவதும் அதிகரித்து வருகிறது. இங்கு பணி யாற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் போலீஸ் நிலையத்தில் நியாயம் கிடைக்காத சூழலில் பொதுமக்கள் செய்வ தறியாது தவிக்கின்றனர்.

    இங்கு பணியாற்றிய போலீசார் அதிகாரிகளின் நடவடிக்கைகளால் சமீபகாலமாக இடமாறுதல் பெற்று சென்று விடு கின்றனர். கொடைக்கானல், தாண்டிக்குடி போலீஸ் நிலையங்களில் மாறி, மாறி பணியாற்றிய இவர்கள் மீது ஏராளமான புகார்கள் சென்றதால், அப்போதைய தென் மண்டல ஐ.ஜி., இவர்களை மலைப்பகுதியில் பணியமர்த்தக் கூடாது என உத்தரவிட்டார். ஆனால் மீண்டும் இப்பகுதியிலே பணிமாறுதல் பெற்ற நிலையில், தனி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    குற்றவாளிகளை பிடிக்காமல் அவர்களை தப்பிக்க வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் இங்கு நிகழும் பிரச்சினை களை ஆய்வு செய்தால் உண்மை நிலை வெளிச்சத்தி ற்கு வரும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசார் அவர்களுக்கு அச்சுறுத்த லாக உள்ளார்கள் என்று பொதுமக்கள் வேதனை யடைந்துள்ளனர்.

    • வெள்ளகவி கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்
    • இதனைத் தொடர்ந்து தங்களது பட்டா நிலங்களை ஊராட்சி ஒன்றியத்திற்கு தானமாக பொதுமக்கள் வழங்கினர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் வெள்ளகவி கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் பிரிவின் கீழ் கிராம பொது மக்களால் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவின்படி வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.

    மேலும் புதிதாக சாலை அமைக்கும் பணி கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டது. வட்டக்கானல் முதல் வெள்ளகவி வரை உள்ள பாதையின் மொத்த அளவு 7 கி.மீ தூரமாகும். இதில் சாலையில் 5 கி.மீ வரை சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 2 கி.மீ பகுதி தனி நபர் வசிக்கும் பகுதியாக இருந்தது. எனவே அந்த நிலத்தை பெறும் முயற்சியில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இறங்கியது.

    பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்களது பட்டா நிலங்களை ஊராட்சி ஒன்றியத்திற்கு தானமாக வழங்க பொதுமக்கள் முடிவு செய்தனர். இந்த பத்திரத்தின் ஆவணங்களை நில உரிமையாளர்கள் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா விடம் ஒப்படைத்தனர்.

    இதன் காரணமாக மீதம் உள்ள சாலைப்பணிகள் விரைவில் முடிவடைவ தோடு தார் சாலை அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வத்தலக்குண்டுவில் இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவானது.
    • ஒருதரப்பினரை மட்டும் விசாரணைக்கு அழைத்ததால் பழைய வத்தலக்குண்டு பிரிவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு மேற்குத்தெரு மற்றும் பட்டாளம்மன் கோவில் தெரு பகுதி மக்களிடையே தீபாவளி நாளில் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவானது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று இருதரப்பை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் பழைய வத்தலக்குண்டு பகுதிக்கு சென்று மேலும் 2 பேரை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல போவதாக தெரிவித்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் ஒருதரப்பை சேர்ந்தவர்களை மட்டுமே குறிவைத்து கைது செய்வதாகவும், தாங்கள் விசாரணைக்கு யாரையும் அனுப்பமாட்டோம் என தெரிவித்தனர். ஆனால் போலீசார் தாங்கள் விசாரணை செய்துவிட்டு அனுப்பிவிடுவதாக கூறியும் பொதுமக்கள் கேட்கவில்லை. இதனை தொடர்ந்து பழைய வத்தலக்குண்டு பிரிவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்த நிலக்கோட்டை டி.எஸ்.பி. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். யாரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×