என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பருவமழை முன்னெச்சரிக்கையாக திண்டுக்கல்லில் வடிகால்கள் சீரமைப்பு பணி தொடக்கம்
- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்து ள்ளது.
- பருவ மழை முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்து ள்ளது. இதனை முன்னிட்டு பருவ மழை முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழையால் அதிகம் பாதிக்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடி க்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் - பழனி பைபாஸ் புறவழிச்சாலையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாகவே தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடான நிலை இருந்து வந்தது. அந்த பகுதியில் ராட்சத குழாய்கள் பொருத்தப்பட்டு கழிவு நீர் வெளியே செல்லும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.
இதே போல் மாநகராட்சி க்குட்பட்ட பல்வேறு பகுதி களிலும் மழைக்காலங்களில் அதிகம் பாதிப்பு ஏற்பட க்கூடிய பகுதிகளை கண்ட றிந்து அதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக பல தெருக்களில் கழிவு நீர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்து செல்லும் நிலை உள்ளது. பாதாள சாக்கடை தொட்டியில் மேன்ஹோல் பிரச்சினையால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தெருக்க ளில் செல்லும் நிலை உள்ளது.
இதே போல் திண்டுக்கல் - திருச்சி சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுவ தால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இது போல பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு முன்னே ற்பாடு பணிகளை மேற்கொ ள்ள வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






