என் மலர்
திண்டுக்கல்
- 2-வது திருமணம் செய்த தந்தையை அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரை கைது விசாரித்து வருகின்றனர்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ஊத்தாங்கால் புதுப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி(49). தென்னைமரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு சற்குணபாண்டி(23), புவனேஸ்குமார்(19) என 2மகன்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா உயிரிழந்துவிட்டார். இதேபோல் ஜெயாவின் தங்கை பாண்டியம்மாளின் கணவரும் இறந்துவிட்டார்.
இதனால் தனிமையில் இருந்த 2 பேரும் கடந்தமாதம் 2-வது திருமணம் செய்து கொண்டனர். இதனால் சற்குணபாண்டி மற்றும் புவனேஸ்குமார் ஆத்திரமடைந்தனர். அவர்கள் பாண்டி மற்றும் பாண்டியம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தகராறு முற்றவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாண்டியை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க வந்த பாண்டியம்மாளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
காயமடைந்த அவர்களை வத்தலக்குண்டு அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வழக்குபதிவுசெய்து சற்குணபாண்டி மற்றும் புவனேஸ்குமாரை கைது செய்தனர்.
- கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். வனத்துறையினர் எச்சரிக்கையை மீறிச்சென்றதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாறை:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நகர் பகுதியில் சுற்றுலா இடங்களை அவர்கள் கண்டுகளித்தபோதும் இயற்கை எழில்கொஞ்சும் மலைப்பகுதியில் ஓய்வெடுக்க ஆர்வம்காட்டுகின்றனர்.
இதனால் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களுக்கு அவர்கள் படையெடுத்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக ெகாடைக்கானலில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆப்பரித்து கொட்டுகிறது. மேலும் புதிய அருவிகளும் உருவாகி உள்ளன.
கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மலைகளுக்கு இடையே வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதில் சிலர் மதுஅருந்துவது உள்ளிட்ட சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது உள்ளிட்டவைகளில் ஈடுபடுவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டது. கடந்த சில வருடங்களில் 15-க்கும் மேற்பட்டவர்கள் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து வனத்துறை சார்பில் ஆபத்தான பகுதி எனவே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி சிலர் ஆபத்தான முறையில் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவதானப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை காட்டி கொடுத்த வாலிபரை கடத்திச்சென்று புல்லாவெளியில் கொன்று வீசினர்.
இதனைதொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும் ஆபத்தான முறையில் இருந்த பாலத்தையும் வேலி கட்டி சுற்றுலா பயணிகள் செல்லமுடியாதவாறு தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும் அவ்வப்போது அருவியில் ரோந்து சென்று தகாத செயல்களில் ஈடுபடுகின்றனரா என கண்காணித்து வருகின்றனர். இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,
விடுமுறையை கொண்டாட மலைப்பகுதிக்கு வருகின்றனர். ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தாக முடிந்துவிடக்கூடாது. இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். வனத்துறையினர் எச்சரிக்கையை மீறிச்சென்றதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளோம். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
- கொடைக்கானலில் அரிய வகை தாவரங்கள், மூலிைக செடிகள், பறவை இனங்களும் உள்ளன. குறிப்பாக மரங்கொத்தி பறவை அதிக அளவில் காணப்பட்டது.
- காகம் போல் திரும்பிய திசையெல்லாம் இருந்த பறவைகள் எண்ணிக்கை பல மடங்கு குறைந்து விட்டதால் இயற்கை ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே உள்ளது. இங்கு மான், யானை, சிறுத்தை, காட்டெருமை, முயல் உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் உள்ளன. மேலும் அரிய வகை தாவரங்கள், மூலிைக செடிகள், பறவை இனங்களும் உள்ளன. குறிப்பாக கொடைக்கானலில் மரங்கொத்தி பறவை அதிக அளவில் காணப்பட்டது.
இங்கு நிலவும் இதமான சீதோஷ்ணம் மற்றும் அடர்ந்த வனப்பகுதி ஆகியவை பறவை மற்றும் விலங்கினங்களுக்கு சாதகமாக இருந்து வந்தது. ஆனால் வனப்பகுதியை ஒட்டி ஆக்கிரமிப்பு மற்றும் குடியிருப்புகள் அமைந்ததால் விலங்கினம் ஊருக்குள் வரத் தொடங்கியது.
இதே போல பறவை இனங்களும் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று விட்டது. கொடைக்கானலில் அபூர்வமாக தென்பட்ட மரங்கொத்தி பறவைகள் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. காகம் போல் திரும்பிய திசையெல்லாம் இருந்த பறவைகள் எண்ணிக்கை பல மடங்கு குறைந்து விட்டதால் இயற்கை ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.
வனப்பகுதியில் உணவு சங்கிலி சரியான முறையில் இருந்தால்தான் இயற்கை காப்பாற்றப்படும். எனவே அழிவின் விளிம்பில் உள்ள மரங்கொத்தி பறவைகளை மீட்டெடுக்க வேண்டும் என அவர்கள் வனத்துறையினருக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வழக்கமாக நவம்பர் மாத மத்தியில் பனிப்பொழிவு அதிகரிக்கும். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளநிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.
- பனிமூட்டதால் பகலிலேயே எதிரில் நபர்கள் தெரியாத நிலை உள்ளது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்தசில நாட்களாக கனமழை பெய்தது.அதனைதொடர்ந்து தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மலைப்பகுதியில் புதிய அருவிகள் உருவாகி எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காணப்படுகிறது. வழக்கமாக நவம்பர் மாத மத்தியில் பனிப்பொழிவு அதிகரிக்கும். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளநிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மலை கிராமங்களில் காணப்படும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிவரை பனிமூட்டம் உள்ளது. மேலும் மாலை 4 மணிக்கே இருள்சூழ்ந்து பனிப்பொழிவு தொடங்கி விடுவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஏரிச்சாலை, பஸ்நிலையம், மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி சாலை என அனைத்து முக்கிய சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது. தற்போது மீண்டும் பள்ளிகள் தொடங்கியுள்ளதால் அடுத்த மாதம் விடுமுறையில்தான் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனிமூட்டதால் பகலிலேயே எதிரில் நபர்கள் தெரியாத நிலை உள்ளது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். பருவமழை மாற்றம் காரணமாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
- ஆனந்தகிரி பகுதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தங்கள் கோரிக்கைகளுக்கு மனு கொடுக்க பொதுமக்கள் வருகின்றனர்.
- அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கழிப்பறைகள் சிதிலம் அடைந்து காட்சி பொருளாக உள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்..
கொடைக்கானல்:
கொடைக்கானல் பஸ் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் ஆனந்தகிரி பகுதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தங்கள் கோரிக்கைகளுக்கு மனு கொடுக்க பொதுமக்கள் வருகின்றனர்.
கிராம பகுதிகளில் இருந்து பஸ் நிலையம் வந்து இறங்கி நடை பயணமாக இங்கு வரும் கிராம மக்களும் தாங்கள் அளிக்க வேண்டிய மனுக்களை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்தநிலையில் இயற்கை உபாதைகளை கழிக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கழிப்பறைகள் சிதிலம் அடைந்து காட்சி பொருளாக உள்ளது.கோட்டாட்சியர் அலுவலகத்தை ஒட்டி சுகாதார மையம், கோட்டாட்சியர் அலுவலக குடியிருப்பு, பொதுமக்கள் குடியிருப்பு என உள்ளதால் மனு அளிக்க வரும் உள்ளூர் பொது மக்களும், கிராமப் பகுதியில் இருந்து வரும் பொது மக்களும் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே கோட்டாட்சியர் இதற்கு தீர்வு ஏற்படும் வகையில் அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறையை சீர் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருமண வேலைகளில் பிசியாக இருந்ததால் நிதிநிறுவன கணக்கு வழக்குகளை ஊழியர்களிடம் ஒப்படைத்திருந்தார்.
- கடந்த 4 மாதங்களில் சிறுகசிறுக ரூ.59 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே சாமியார்புதூரை சேர்ந்தவர் செல்வபிரகாஷ்(29). இவர் ஒட்டன்சத்திரத்தில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமண வேலைகளில் பிசியாக இருந்ததால் கணக்கு வழக்குகளை நிதிநிறுவன ஊழியர்களிடம் ஒப்படைத்திருந்தார்.
திருமணம் முடிந்து மீண்டும் நிதிநிறுவனத்திற்கு வந்த செல்வபிரகாஷ் வசூல் பணம் குறித்து கேட்டார். அப்போது ஊழியர்கள் அந்த பணத்தை மற்றவர்களுக்கு பைனான்ஸ் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பேச்சில் நம்பிக்கை ஏற்படாததால் ஜெயபிரகாஷ் விசாரித்தார். அதில் பணம் யாருக்கும் கொடுக்காமல் ரூ.59 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
இதில் கடந்த 4 மாதங்களில் சிறுகசிறுக ரூ.59 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சாமியார்புதூரை சேர்ந்த மேலாளர் ஜெயபிரகாஷ்(23), ஊழியர் ரகுராம்(21) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாவட்ட எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ஜாமீனில் வந்து தலைமறைவானர்கள் உள்பட 40 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- குற்றச்சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை செங்குறிச்சி மாமரத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 42). இவர் அப்பகுதியில் கத்தியை காட்டி மிரட்டியும் பொது மக்களிடம் ஆபாசமாகவும் பேசி மிரட்டி வந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி அறிவுரையின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் தனிப்படை போலீசார் கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் டி.எஸ்.பி. துர்கா தேவி உத்தரவின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் ஜாமீனில் வந்து தலைமறைவானர்கள் உள்பட 40 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.
இதனால் கடந்த சில நாட்களாக வடமதுரை மற்றும் சுற்றுப்புற கிரா மங்களில் குற்ற சம்பவங்கள் குறைந்து வருகிறது என பொதுமக்கள் தெரிவித்த னர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ப்பட்ட நிலையில் பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குற்றச்சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- அலுவலர்கள் தங்கள் துறை சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை சட்ட மன்ற மதிப்பீட்டுக் குழு வினர் ஆய்வு செய்ய தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரி வித்தார்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் ராஜா தலைமை யில் குழுவினர் 2ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து கொடைக்கா னல் பகுதியில் வனத்துறை, நகராட்சி, தோட்டக்கலை த்துறை, சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட மேம்பாட்டுப்பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்கின்றனர்.அதனைத்தொடர்ந்து 3ந் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணி களை ஆய்வு மேற்கொள்கி ன்றனர். அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் தலைமையில் குழுவினர் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளனர்.
எனவே அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விரிவாக பட்டியல் தயார் செய்து ஆய்வின்போது சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் கேட்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். மதிப்பீட்டுக் குழுவினர் 2 தினங்களில் எந்தவொரு திட்டம் குறி த்தும் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.
எனவே அலுவலர்கள் தங்கள் துறை சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை சட்ட மன்ற மதிப்பீட்டுக் குழு வினர் ஆய்வு செய்ய தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரி வித்தார்.
- திண்டுக்கல்லில் இருந்து மொட்டயகவுண்டன்பட்டி வரக்கூடிய அரசு பஸ் அடிக்கடி பழுதாகிறது என பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
- சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நல்ல நிலையில் இயங்ககூடிய அரசு பஸ்ஸை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி அருகே மொட்டைய கவுண்டன்பட்டி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.திண்டுக்கல்லில் இருந்து வரக்கூடிய அரசு பஸ் இயக்கப்படவில்லை என பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் கடந்த சில தினங்களாக திண்டுக்கல்லில் இருந்து மொட்டையை கவுண்டன்பட்டி கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பஸ் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. இதேபோல் இன்று காலையும் திண்டுக்கல்லில் இருந்து 8:30 மணிக்கு மொட்டைய கவுண்டம்பட்டி வந்த அரசு பஸ் திடீரென பழுதாகி நின்றது.
இதனால் இந்தப் பகுதியில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்லக்கூடிய பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் மிகவும் சிரமம் அடைந்து ஆட்டோவில் கூடுதல் கட்டணம் செலுத்தி சென்றனர்.
இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கூறுகையில் எங்கள் பகுதிக்கு அரசு பஸ் இல்லை என அதிகாரிகளுக்கு புகார் கொடுத்ததின் பேரில் அரசு பஸ் இயக்கப்பட்டது. இருக்கு ஆனால் இல்லை என்ற வார்த்தை கேற்ப அந்த அரசு பஸ்சும் அடிக்கடி பழுதாகி விடுவதால், மாணவ மாணவிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மொட்டைய கவுண்டன்பட்டிக்கு நல்ல நிலையில் இயங்ககூடிய அரசு பஸ்ஸை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்டு உச்சிகாலபூஜை 12 மணிக்கும், அதனைதொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும்.மதியம் 2.45 மணிக்கு பராசக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சிக்கு பின்பு சன்னதி அடைக்கப்படும்.
- சூரசம்ஹார நாளில் மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என்று கோவில் இணைஆணையர் தெரிவித்துள்ளார்.
பழனி:
பழனி தண்டாயுதபாணிசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு விழா பூஜையும் நடைபெறும்.
அனைத்து கட்டண சீட்டுகளும் காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்டு உச்சிகாலபூஜை 12 மணிக்கும், அதனைதொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும்.மதியம் 2.45 மணிக்கு பராசக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சிக்கு பின்பு சன்னதி அடைக்கப்படும்.
எனவே படிப்பாதையில் வரும் பக்தர்கள் அன்று மதியம் 11.30 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். காலை 10 மணி முதல் மின்இழுவை ரெயில், ரோப்கார் இயங்காது. 4 கிரிவீதிகளிலும் சூரசம்ஹாரம் முடிந்து சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்றபின்பு சம்ரோட்சணபூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து ராக்காலபூஜை நடைபெறும். சூரசம்ஹார நாளில் மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என்று கோவில் இணைஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
- புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் 11-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
- சமூக நல இயக்குநரக அலுவலகத்தை ெதாடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 5-ந்தேதி அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு அல்லது தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.
தற்போது, முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வலைத்தளத்தில் மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.
திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு அல்லது தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகள், மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் 11-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தை ெதாடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
- பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் மற்றும் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.
- விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரேசன் விலைக்கடைகளில் நகர்புறங்களில் வழங்கப்பட்ட 5 கிலோ சிலிண்டர்கள் கிராமபுறங்களிலிலும் வழங்கப்படும் என்றார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் மற்றும் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர் முரளி தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி., இந்து நாடார்கள் உறவின்முறை சங்க துணைத்தலைவர் பிரசன்னா, செயலர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலர் நிர்மல்ராஜீவ் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி பங்கேற்று என் எஸ்.வி.வி. அரசு உதவி பெறும் ஆண்கள் பள்ளி மற்றும் பெண்கள் பள்ளிகளில் படிக்கும் 393 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா ைசக்கிள்கள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ரேசன் விலைக்கடைகளில் நகர்புறங்களில் வழங்கப்பட்ட 5 கிலோ சிலிண்டர்கள் கிராமபுறங்களிலிலும் வழங்கப்படும். நிலக்கோட்டை பகுதியில் விரைவில் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து கலைக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






