என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரங்கொத்தி பறவை இனங்களை காப்பாற்ற வலியுறுத்தல்"

    • கொடைக்கானலில் அரிய வகை தாவரங்கள், மூலிைக செடிகள், பறவை இனங்களும் உள்ளன. குறிப்பாக மரங்கொத்தி பறவை அதிக அளவில் காணப்பட்டது.
    • காகம் போல் திரும்பிய திசையெல்லாம் இருந்த பறவைகள் எண்ணிக்கை பல மடங்கு குறைந்து விட்டதால் இயற்கை ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே உள்ளது. இங்கு மான், யானை, சிறுத்தை, காட்டெருமை, முயல் உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் உள்ளன. மேலும் அரிய வகை தாவரங்கள், மூலிைக செடிகள், பறவை இனங்களும் உள்ளன. குறிப்பாக கொடைக்கானலில் மரங்கொத்தி பறவை அதிக அளவில் காணப்பட்டது.

    இங்கு நிலவும் இதமான சீதோஷ்ணம் மற்றும் அடர்ந்த வனப்பகுதி ஆகியவை பறவை மற்றும் விலங்கினங்களுக்கு சாதகமாக இருந்து வந்தது. ஆனால் வனப்பகுதியை ஒட்டி ஆக்கிரமிப்பு மற்றும் குடியிருப்புகள் அமைந்ததால் விலங்கினம் ஊருக்குள் வரத் தொடங்கியது.

    இதே போல பறவை இனங்களும் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று விட்டது. கொடைக்கானலில் அபூர்வமாக தென்பட்ட மரங்கொத்தி பறவைகள் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. காகம் போல் திரும்பிய திசையெல்லாம் இருந்த பறவைகள் எண்ணிக்கை பல மடங்கு குறைந்து விட்டதால் இயற்கை ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.

    வனப்பகுதியில் உணவு சங்கிலி சரியான முறையில் இருந்தால்தான் இயற்கை காப்பாற்றப்படும். எனவே அழிவின் விளிம்பில் உள்ள மரங்கொத்தி பறவைகளை மீட்டெடுக்க வேண்டும் என அவர்கள் வனத்துறையினருக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×