என் மலர்
நீங்கள் தேடியது "காட்சி பொருளான கழிப்பறைகள்"
- ஆனந்தகிரி பகுதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தங்கள் கோரிக்கைகளுக்கு மனு கொடுக்க பொதுமக்கள் வருகின்றனர்.
- அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கழிப்பறைகள் சிதிலம் அடைந்து காட்சி பொருளாக உள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்..
கொடைக்கானல்:
கொடைக்கானல் பஸ் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் ஆனந்தகிரி பகுதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தங்கள் கோரிக்கைகளுக்கு மனு கொடுக்க பொதுமக்கள் வருகின்றனர்.
கிராம பகுதிகளில் இருந்து பஸ் நிலையம் வந்து இறங்கி நடை பயணமாக இங்கு வரும் கிராம மக்களும் தாங்கள் அளிக்க வேண்டிய மனுக்களை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்தநிலையில் இயற்கை உபாதைகளை கழிக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கழிப்பறைகள் சிதிலம் அடைந்து காட்சி பொருளாக உள்ளது.கோட்டாட்சியர் அலுவலகத்தை ஒட்டி சுகாதார மையம், கோட்டாட்சியர் அலுவலக குடியிருப்பு, பொதுமக்கள் குடியிருப்பு என உள்ளதால் மனு அளிக்க வரும் உள்ளூர் பொது மக்களும், கிராமப் பகுதியில் இருந்து வரும் பொது மக்களும் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே கோட்டாட்சியர் இதற்கு தீர்வு ஏற்படும் வகையில் அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறையை சீர் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






