பழனி அருகே மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி சாவு

குதிரையாறு அணை அருகில் உள்ள புதுக்குளத்தில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.அப்போது வலையுடன் சகதியில் சிக்கி வாலிபர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பழனி:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகில் உள்ள கல்லாபுரத்ைத சேர்ந்தவர் மாரிமுத்து (வயது40). இவர் கடந்த சில நாட்களாக பழனி குதிரையாறு அணை அருகே வசித்து வந்தார். சம்பவத்தன்று குதிரையாறு அணை அருகில் உள்ள புதுக்குளத்தில் மீன் பிடிக்க சென்றார்.

ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தனது கணவர் மாயமானது கண்டு அவரது மனைவி மாரியம்மாள் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் தெய்வ வள்ளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

குதிரையாறு அணை அருகே அவர்கள் சென்று பார்த்தபோது கரையில் மாரிமுத்து அணிந்திருந்த ஆடைகள் மற்றும் செருப்பு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்து அணை ப்பகுதிக்குள் தேடினர். அப்போது வலையுடன் சகதியில் சிக்கி மாரிமுத்து இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குடிபோதையில் மீனுக்கு வலை வீசியபோது அதில் தான் சிக்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவி த்தனர். இறந்துபோன மாரிமுத்துவுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com