என் மலர்
திண்டுக்கல்
- கொடைக்கானலில் பகல் பொழுதில் இதமான வெயிலும் இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது.
- சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை காலம் மற்றும் ஆப் சீசனில் அதிக அளவு பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட இஸ்ரேல் நாட்டில் இருந்து பயணிகள் அதிக அளவில் வட்டக்கானல் பகுதிக்கு வருகை தருகின்றனர்.
தற்போது கொடைக்கானலில் பகல் பொழுதில் இதமான வெயிலும் இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இருந்தபோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளை புத்தாண்டு பிறப்பை வரவேற்க ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அலங்கார தோரணங்கள், வண்ண விளக்குகள் ஒளிர விடப்பட்டுள்ளன. முக்கிய சுற்றுலா இடங்களான வெள்ளி நீர் வீழ்ச்சி, ரோஜா தோட்டம், பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, தூண்பாறை, மோயர் பாயிண்ட், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களை கண்டு ரசித்தனர்.
மேலும் பிரையண்ட் பூங்காவில் குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள் வாலிபால், இறகுபந்து உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தனர். நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.
மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து உற்சாகமடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் தேக்கடி, குமுளி, மூணாறு, மறையூர் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக தேக்கடியில் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. உற்சாகமாக படகு சவாரி செய்து அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளை கண்டு ரசித்தனர். குளிர் அதிகமாக இருந்த போது அதிகளவில் வந்திருந்தனர்.
ஏற்கனவே தங்கும் விடுதிகள் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில் இன்று இரவு மேலும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புத்தாண்டு பண்டிகையையொட்டி திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் சட்டஒழுங்கு பிரச்சிைனகள் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேனி:
புத்தாண்டு பண்டிகையையொட்டி திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் சட்டஒழுங்கு பிரச்சிைனகள் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நாளை அதிகாலை ஒரு மணிக்குமேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. புத்தாண்டுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே கூறியிருப்பதாவது, தேனி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 82 இடங்களில் வாகன சோதனைகள், 77 இடங்களில் அதிரடிப்படை ேபாலீசார் ஆய்வு, 28 நான்கு சக்கர வாகனங்கள், 63 இரு சக்கர வாகங்களில் ரோந்து நடைபெற உள்ளன.
மேலும் இரவு ஒரு மணிக்குமேல் பொது இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபடகூடாது. மதுஅருந்தியும் அதிகவேகமாகவும் வாகனங்களை ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- அனைத்து ஊராட்சி பகுதியில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் இப்போட்டியில் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது பிரிவினர் பங்கேற்கும் வகையில் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இந்த போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு குழு 21 துறைகள் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது பிரிவினர் அதிக அளவில் பதிவு செய்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்கள் மற்றும் நகராட்சிகள், தேசிய நாட்டு நலப்பணிகள் மற்றும் நேருயுகவேந்திரா குழுக்கள் அமைத்து போட்டிகள் குறித்த விளம்பர பதாகைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஊராட்சி பகுதியில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் இப்போட்டியில் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அரசு அலுவலர்களும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் மற்றும் முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் போலீசார் பல வழக்குகள் பதிவு செய்தும் இதுவரை இந்த கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை.
- காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலேயே பயன்படுத்துகின்றனர்.
கொடைக்கானல்:
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருபுறம் இருந்தாலும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதற்காக சில இளைஞர்கள் வருவதும் வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக கொடைக்கானலில் இயற்கையாக இருக்கக்கூடிய போதைக் காளான் என்ற போதை பொருள் புல்வெளிகளிலும், காடுகளிலும் வளர்ந்து வருகிறது. பல வகையான காளான்கள் கொடைக்கானலில் விளைகிறது. கொடைக்கானலில் மட்டும் இதுவரை 400 வகைகளுக்கு மேலாக காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் போதைக்காளானும் ஒரு வகையாகும். இவை மட்டுமல்லாது உணவுக்காக எடுத்துக் கொள்ளக்கூடிய காளான் வகைகள் மற்றும் விஷத்தன்மை உடைய காளான்களும் இங்கு இயற்கையாகவே கிடைக்கிறது.
போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் போலீசார் பல வழக்குகள் பதிவு செய்தும் இதுவரை இந்த கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய இளைஞர்கள் மத்தியில் போதை காளான் பிரபலமடைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் இளைஞர்கள் பலர் வனப்பகுதிகளிலும், புல்வெளிகள் நிறைந்த பகுதிகளிலும் போதை காளான்களை தேடி சென்று அதனை பறிப்பது போன்று வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
அவ்வாறு பறிக்கப்படும் காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலேயே அவர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் இதுபோன்ற வீடியோக்கள் பல இளைஞர்களால் கவரப்பட்டு வருகிறது. இதற்கு சமூக வலைதள பக்கங்களும் உதவியாக உள்ளது.
இதனை சைபர் கிரைம் போலீசார் முழுவதுமாக கண்காணிக்க வேண்டும். தற்போது தொடர் விடுமுறையால் இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். இவர்களிடம் போதைக்காளான் குறித்த தகவல் வந்தால் அவர்களும் இதற்கு அடிமையாகும் நிலை ஏற்படும். எனவே போதைக் காளான் கலாச்சாரத்தை ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது உறைபனி சீசன் தொடங்கி உள்ளது.
- உறைபனி மேலும் அதிகரிக்கும் என வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கொடைக்கானல்:
கொடைக்கானலில் உறைபனி சீசன் தொடங்கியதால் காலை நேரங்களில் அறைகளிலேயே சுற்றுலாப்பயணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது உறைபனி சீசன் தொடங்கி உள்ளது. ஒவ்வொரு வருட குளிர் காலங்களிலும் நவம்பர் மாத இறுதியிலேயே உறைபனி சீசன் தொடங்குவது வழக்கம். இந்த வருடம் அவ்வப்போது தோன்றிய புயல் சின்னம் மற்றும் தொடர் மழை காரணமாக உறைபனி சீசன் தாமதமாக தொடங்கி உள்ளது. நேற்று மாலை வரை கடும் குளிர் நிலவி வந்த நிலையில் இன்று காலை நட்சத்திர ஏரியின் மேற்பரப்பிலும், ஏரிப்பகுதியை ஒட்டிய ஜிம்கானா மைதான புல்வெளிகளிலும், ஏரிச்சாலை பகுதியிலும் உறைபனி தென்பட்டது. அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மேற்பரப்பிலும் உறைபனி தென்பட்டது.
இனி வரும் காலங்களில் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் புல்வெளிகள் கருகும் சூழல் உருவாகும். இதன் காரணமாக பிரையண்ட் பூங்காவில் பூக்கள் கருகும் சூழல் ஏற்படாதவாறு வண்ண போர்வைகளால் போர்த்தி பாதுகாத்து வருகின்றனர். நட்சத்திர ஏரியிலும், ஏரியை ஒட்டிய ஜிம்கானா மைதான பகுதிகளிலும் வெண் கம்பளம் போர்த்தியது போல் உறைபனி தென்பட்டது. மேலும் காலை நேரங்களில் ஏரிச்சாலையை சுற்றி நடைபயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் உறைபனி மேலும் அதிகரிக்கும் என வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஆதி மனிதன் வாழ்ந்த குகைகள், புராதனக் கோயில்கள், கற் சிற்பங்களால் செதுக்க ப்பட்ட கடவுள்களின் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- புதுப்புது சுற்றுலாத்தல ங்களை கண்டு ரசிக்கும் விதமாக சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்கும்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி கொடைக்கானல் மிக முக்கிய சுற்றுலாத்தல ங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா ப்பயணிகள் 12 மைல் சுற்றளவில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மரச் சோலைகள், தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக் ஆகிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் ஆகிய இடங்களை மட்டுமே கண்டு ரசிக்கின்றனர்.
பேத்துப்பாறை, அடுக்கம், வில்பட்டி கோவில்பட்டி, பூம்பாறை ஆகிய மலைக்கிராமங்களில் பண்டைய கால கலைச் சிற்பங்கள், நுழைவாயில் வளைவு, ஆதி மனிதன் வாழ்ந்த குகைகள், புராதனக் கோயில்கள், கற் சிற்பங்களால் செதுக்க ப்பட்ட கடவுள்களின் சிலைகள் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சி மூலம் தொல்லியல் துறையினர் அனைத்து கிராம பகுதிகளிலும் ஆய்வு செய்து வரலாற்று நினைவுகளை வெளிக்கொண்டுவரும் நிலையில் இருக்கும் கிராமப் பகுதிகளை புதிய சுற்றுலாத் தலங்களாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் புதுப்புது சுற்றுலாத்தல ங்களை கண்டு ரசிக்கும் விதமாக சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்கும்.
மேலும் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு புதிய சுற்றுலா இடங்களுக்கு பிரிந்து சென்றால் போக்குவரத்து நெரிசலும் குறையும். எனவே இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொடைக்கானலில் கடந்த 1 வாரமாகவே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- நிலவி வரும் கடும் குளிர், அவ்வப்போது பெய்து வந்த மிதமான மழை ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த ஆண்டு தளர்வுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கடந்த 1 வாரமாகவே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பள்ளி தொடர் விடுமுறையால் புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. தற்போது நிலவி வரும் கடும் குளிர், அவ்வப்போது பெய்து வந்த மிதமான மழை ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை தங்கள் குடும்பத்துடன் ரசித்து செல்பி எடுத்து அவர்கள் மகிழ்ந்து வருகின்றனர். நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் தனியார் விடுதிகள், ஓட்டல்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகள், மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பகல் நேரங்களிலும் இரவைப் போல் ஜொலித்து வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ரசித்து வருகின்றனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் தற்போது நிலவி வரும் இதமான கால சூழ்நிலை, கடும் குளிரும் தங்களை வெகுவாகவே ஈர்த்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி பாதுகாப்புடனும் நள்ளிரவு 1 மணி வரையிலும் அனுமதி அளித்து நடத்தப்படும் என்று விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரேனா ெதாற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர்.
- அரசு ஆஸ்பத்திரயில் உள்ள யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தில் 15 படுக்கைகளுடன் கொண்ட கொரோனா வார்டு தயார்நிலையில் உள்ளது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த 6 மாதத்திற்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகள் முன்கூட்டியே வாங்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே சீனாவில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகரை சேர்ந்த அவர்கள் 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுடன் விமானத்தில் வந்த 70 பேர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புத்தாண்டு கெர்ணடாட்த்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு 1 மணிக்குமேல் கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது. பொதுஇடங்களில் முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூகஇடைவெளியை கடைபிடிப்பதுடன் கிருமிநாசியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரேனா ெதாற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தன்ர. நேற்று மாலை ஒருவரும், இன்று காலை ஒருவரும் என குணமடைந்து வீடு திரும்பினர்.
ஒருவர் மட்டுமே தற்போது சிகிச்யசயில் உள்ளார். இந்நிலையில் அரசு ஆஸ்பத்திரயில் உள்ள யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தில் 15 படுக்கைகளுடன் கொண்ட கொரோனா வார்டு தயார்நிலையில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை கருவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களும் தயார்நிலையில் உள்ளனர்.
மருத்துவர்கள் , பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- தாண்டிக்குடி அருகே கடந்த 2 வாரங்களாக சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
- போக்குவரத்துக்கு இடையூறாக சூட்டிங் வாகனங்களை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பெரும்பாறை:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தொடர்விடுமுறை காரணமாக தற்போது அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் மட்டுமின்றி மேல்மலை கிராமங்கள் மற்றும் கீழ்மலை கிராமங்களிலும் அவர்கள் சென்று பல்வேறுசுற்றுலா இடங்களை பார்வையிட்டு வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் சுற்றுலா விடுதிகள் நிரம்பி வழிகின்றன.
முக்கிய சாலைகள் அனைத்தும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாண்டிக்குடி அருகே கடந்த 2 வாரங்களாக சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வத்தலக்குண்டு-தாண்டிக்குடி சாலையில் சூட்டிங் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மலை சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த சாலையில் ஒருபுறம் வாகனம் வந்தால் எதிர்திசையில் வரும் வாகனங்கள் மிகுந்த சிரமத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சூட்டிங் வாகனங்களை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அனுமதிபெற்று நடக்கிறதா அல்லது அனுமதி இல்லாமல் நடக்கிறதா என்றும் தெரியவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சூட்டிங் நடத்தவேண்டும் என்றுதான் அதிகாரிகள் அனுமதி அளிப்பார்கள். ஆனால் இப்பகுதியில் நடத்தப்படும் படப்பிடிப்பால் உள்ளூர் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பள்ளிகள் தொடங்கிய பிறகு மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- சுற்றுலா பஸ்சை குறிப்பிட்ட அனுப்பாததால் கோவிலுக்கு செல்லமுடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
- சுற்றுலா பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் அப்பகுதியினர் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் உருவானது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகில் உள்ள பொம்மனாங்கோட்டை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்ேடார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
கடந்த 20-ந்தேதி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான 2 சுற்றுலா பஸ்களை வாடகைக்கு பேசிஇருந்தனர். இதற்காக பாதி பணத்தை அட்வான்சாக பெற்றுக்கொண்ட சுற்றுலா நிறுவனம் சம்பவத்தன்று குறிப்பிட்ட நேரத்தில் பஸ்சை அனுப்பாமல் இருந்துள்ளனர்.
மேலும் மற்றொரு சுற்றுலா பஸ்சை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பி உள்ளனர். இதனால் கோவிலுக்கு செல்லமுடியாமல் அவர்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் இன்று அவ்வழியாக வந்த அதேசுற்றுலா பஸ்சை அப்பகுதி பெண்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பஸ் உரிமையாளர் இங்கு வந்தால்தான் இந்த பஸ்சை விடுவிப்போம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டடது. போலீசார் பலமுறை தெரிவித்தும் அவர்களுடன் வாக்குவாதத்தில் அப்பகுதியினர் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் உருவானது.
- பைக்கில் வந்தவர்கள் தகராறில் ஈடுபட்டு பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கசெயினையும் பறித்துவிட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
- புகாரின் பேரில் போலீசார் 3 பேரை கைது செய்து மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதிைய சேர்ந்தவர் ஆசிக்அகமது(46). இவர் உடல்நலம் சரியில்லாத தனது மனைவியை காரில் அழைத்துக்கொண்டு பெர்ன்ஹில்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காருக்குமுன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்கள் வழி விடாமல் சென்றனர்.
இதுகுறித்து ஆசிக்அகமது அவர்களிடம் தான் ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டும் என்பதால் தனக்கு வழிவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் பைக்கில் வந்தவர்கள் அதனை கேட்காமல் அவருடன் தகராறு செய்தனர். அப்போது தகராறை தடுக்க வந்த ஆசிக் மனைவியின் கழுத்தில் இருந்த தங்கசெயினையும் பறித்துவிட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் ஆசிக்அகமது புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி தகராறில் ஈடுபட்ட ஆனந்தகிரி 4-வது தெருவை சேர்ந்த காளி(30), பிரபு, நவீன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்ட மேலும் 5 பேரையும் தேடி வருகின்றனர்.
- ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் சிறுத்தை ஒன்று அடிக்கடி நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
- வனசரக அலுவலர் தலைமையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிப்பதற்காக சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே காமராஜர் அணை மேற்குபகுதியில் மேற்குதொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு, காட்டு பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் சிறுத்தை ஒன்று அடிக்கடி நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதைதொடர்ந்து சடையாண்டி கோவில் அருகே ஒரு மானை சிறுத்தை அடித்து கொன்றதாக தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
இதுவரை மான், ஆடு, நாய் ஆகியவற்றை அடித்து கொன்று இழுத்துச்சென்றுள்ளதால் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இதனால் சிறுத்ைதயை விரட்டுவதற்காக இரவு நேரங்களில் வனத்துறையினர் வெடிபோட்டு வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறை சார்பில் , மாவட்ட வனஅலுவலர் பிரபு உத்தரவின்பேரில் கன்னிவாடி வனசரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிப்பதற்காக சிசிடிவி காமிராக்கள் அதேபகுதிைய சேர்ந்த வேல்முருகன் என்பவரது தோட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
சில நாட்களாக இருந்துவரும் சிறுத்தைநடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.






