என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கொடைக்கானல் நகர் மற்றும் போக்குவரத்து நிறைந்த பிரதான சாலைகளில் வளர்ப்பு மாடுகள் அதிகளவு உலா வருகின்றன.
    • சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகர் மற்றும் போக்குவரத்து நிறைந்த பிரதான சாலைகளில் வளர்ப்பு மாடுகள் அதிகளவு உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

    ஏற்கனவே காட்டெருமைகள் நகருக்குள் உலா வந்து பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் வளர்ப்பு மாடுகளும் அடிக்கடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில் அந்த சாலைகளிலும் வளர்ப்பு மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் தவறிவிழுந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர்.

    சுற்றுலா வாகனங்களும், பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச்செல்லும் வாகனங்களும் அடிக்கடி சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் இதுபோல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

    தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடைபிடிக்கும் முறையை போல கால்நடைகளை பிடித்து நடவடிக்கை எடுத்து அதனை ஏலம் விட்டால் அதன் உரிமையாளர்களுக்கு ஓரளவு சமூகஅக்கறை ஏற்படும்.

    • வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.
    • ஆணைப்பள்ளி புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக ஆலாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த விஜய் ஆனந்த், விற்பனையாளராக குணசேகரன், உதவி விற்பனையாளராக கரியபெட்டன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த கடைக்கு நேற்று 3 பேர் வந்தனர். அவர்கள் விற்பனையாளர் குணசேகரன், உதவி விற்பனையாளர் கரியபெட்டன் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் மதுபாட்டிலை எடுத்து கீழே போட்டு உடைத்தனர்.

    பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசி அதில் தீப்பற்ற வைத்தனர். இதனால் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் எரிந்து நாசமானது. அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

    இதுபற்றி கடை ஊழியர்கள் சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேடினர்.

    இந்த சம்பவத்தில் ஆணைப்பள்ளி புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து தான் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தேடினர். இதில் கார்த்திக் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரிடம் கார்த்திக் கூறுகையில் எனக்கும், எனது மனைவிக்கும் தகராறு இருந்து வந்தது. எனது மனைவி என்னை பற்றி போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறினார். நீ என்ன புகார் செய்வது, நானே பெரிய வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு போகிறேன் என கூறி டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார்.

    கார்த்திக் கூறுவது உண்மை தானா என்று தெரியவில்லை. சமீபத்தில் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளரான விஜய்ஆனந்த், கடையில் வசூலான பணத்தை வங்கியில் செலுத்த சென்றபோது, மர்ம நபர்கள் அவரை தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இந்த சம்பவத்துக்கும், பெட்ரோல் குண்டுவீச்சுக்கும் தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே தப்பியோடிய 2 பேரை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 3 பேரையும் தனித்தனியாக விசாரிக்கும்பட்சத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் நம்புகிறார்கள்.

    • வடமதுரை போலீஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்.
    • ய்யலூர் அருகே திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள வண்டிகருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்து கிடாய்வெட்டி வழிபாடு நடத்தினர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் நிலையம் மிகப்பெரிய எல்லைகளை உள்ளடக்கிய பகுதியாகும். வடமதுரை, அய்யலூர், புத்தூர் உள்பட பல்வேறு மலைகிராமங்களும் இந்த போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் வருகிறது. மேலும் அதிகளவு குற்றச்சம்பவங்கள் நடக்கும் பகுதியாகவும் இது உள்ளது.

    குறிப்பாக கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்றவை அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் அதிகளவு நூற்பாலைகள் செயல்படுவதால் இங்கு பணிபுரியும் மைனர் பெண்கள் கடத்தப்படுவதும் நடந்து வருகிறது. பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் பெண்களை கடத்திச்செல்வதும் பின்னர் போலீசார் அவர்களை மீட்டு வருவதும் நடந்து வருகிறது.

    இதனால் வடமதுரை போலீஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். எனவே வடமதுரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் சார்பாக அய்யலூர் அருகே திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள வண்டிகருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்து கிடாய்வெட்டி வழிபாடு நடத்தினர்.

    புதுவருடத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் சம்பந்தமான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும். குற்றசம்பவங்களும் குறைய வேண்டும் என கிடாய்வெட்டி வழிபாடு செய்து விருந்து நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிகழ்விற்கு வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவி, வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த கிடாவிருந்தில் வடமதுரை காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீசார், அவர்களது குடும்பத்தினர் மற்றும் வேடசந்தூர் காவல்நிலைய போலீசார், எரியோடு காவல்நிலைய போலீசார், வேடசந்தூர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    போலீஸ் நிலையத்தில் குற்றசம்பவங்களை தடுக்க காவலர்களே கிடாய்வெட்டி வழிபாடு நடத்தியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
    • மேலும் தோல் சம்பந்தமான நோய் பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அதனை த்தொடர்ந்து புத்தாண்டு பிறப்பு என கடந்த ஒரு வாரமாக களைகட்டியது. வெப்பநிலை 5டிகிரி செல்சியசாக பதிவானதால் கடும் உறைபனி ஏற்பட்டது.

    மேலும் புத்தாண்டு கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் விடுமுறை முடிந்து நேற்று ஊர் திரும்பினர். பொது மக்களும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். கடும் குளிரை சமாளிக்க முடியாமல் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் சிர மமடைந்து வருகின்றனர். சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படு கிறது. கடும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க ப்பட்டுள்ளது.

    உறைபனியை தாங்கமுடியாமல் பகலிலேயே தீமூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். மேலும் தோல் சம்பந்தமான நோய் பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது.

    இதனால் ஆஸ்பத்திரி களுக்கு பொதுமக்கள் படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதத்தில் குளிர் காலமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அதிக அளவு பனிப்பொழிவு ஏற்பட்டு ள்ளதால் அனைத்து தரப்பினரும் அவதி அடைந்துள்ளனர்.

    • ஒட்டன்சத்திரத்தில் திங்க ள்தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.
    • கட்டணமாக ரூ.20 நிர்ணயம் செய்யப்பட்டி ருந்தது. கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு திடீரென ரூ.200 வசூலிக்க தொடங்கினர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திங்க ள்தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. ஈரோடு, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், நத்தம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவ சாயிகள் கால்நடைகளை இங்கு கொண்டு வருகின்ற னர்.

    கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநி லங்களில் இருந்து வியாபாரி கள் மாடுகளை வாங்கு வதற்காக வருகின்றனர். இதற்கு கட்டணமாக ரூ.20 நிர்ணயம் செய்யப்பட்டி ருந்தது. கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு திடீரென ரூ.200 வசூலிக்க தொடங்கி னர். அதாவது ஒரு மாடு விற்பனை செய்யவும், வாங்கவும் என தனித்தனியாக ரூ.200 செலுத்த வேண்டும். இதன்மூலம் ரூ.400 வருமானம் கிடை த்தது.

    தற்போது ஈேராட்டில் இருந்த மாட்டுச்சந்தை திருப்பூருக்கு மாற்றப்பட்டது. அங்கு ரூ.20 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயி கள், வியாபாரிகள் அங்கு சென்று வருகின்றனர்.

    இதனால் கலகலப்பாக காணப்படும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் களையிழந்து உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,

    ஒரு மாட்டிற்கு ரூ.200 வசூல் செய்கின்றனர். அதுவும் வாங்குபவரிடம் ரூ.200, விற்பனை செய்பவரி டம் ரூ.200 என்பதால் பெரும்பாலான வியாபாரி கள் , விவசாயிகள் சந்தைக்கு வர தயங்குகின்றனர். கடந்த பொங்கல் பண்டிகை யின்போது அதிகளவு வியாபாரிகள் வந்தனர். தற்போது குறைந்த அளவே வந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு ரூ.1½ லட்சத்துக்கு விற்கப்பட்ட காளை தற்போது ரூ.90 ஆயிரம் முதல் விலைகே ட்கப்படுகிறது.

    எனவே கட்டணத்தை குறைத்தால் மட்டுமே அதிகளவில் வியாபாரிகள் வருவார்கள். பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் வேளையில் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கிவீசப்பட்டனர்.
    • கோவிலுக்கு வந்தபோது விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    பழனி:

    சேலம் மாவட்டம் இடையபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ்கண்ணன்(35). இவரது நண்பர் பாலன்(35). இவர்கள் 2 பேரும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனத்தை காண்பதற்காக தாராபுரம் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.

    அதிகாலை 2 மணியளவில் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கிவீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியாகினர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களது உடல்களை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    கோவிலுக்கு வந்தபோது விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    • புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • ஒரே நேரத்தில் அதிகளவு சுற்றுலா வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இஸ்ரேல் நாட்டிலிருந்து சுற்றுலா பயணிகள் வட்டக்கானலுக்கு வந்தனர்.

    கடந்த ஒரு வாரமாக இங்கு தங்கிய அவர்கள் சிறப்பு பிரார்த்தணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் ஓட்டல்கள், மற்றும் தங்கும் விடுதிகளில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சுற்றுலா பயணிகள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒன்றுகூடி கொண்டாட்டங்களில் ஈடுபட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இன்று புத்தாண்டையொட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்ததால் 6 டிகிரி செல்சியஸ் குளிரிலும் மோயர்பாயிண்ட், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பைன்பாரஸ்ட், கோக்கர்ஸ்வாக், பிரையண்ட்பூங்கா, நட்சத்திர ஏரி, உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    ஒரே நேரத்தில் அதிகளவு சுற்றுலா வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். தொடர்ந்து வாகனங்கள் அதிகரித்ததால் அவர்கள் சோர்வடைந்து காணப்பட்டனர்.

    எனவே வருங்காலங்களில் பண்டிகை கொண்டாட்டங்களின்போது கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆத்தூர் யூனியன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் வேம்பு, புங்கை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன.
    • சில காகம் மற்றும் மைனாக்கள் உயிரிழந்தன. இதைபார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்

    செம்பட்டி:

    செம்பட்டியில் ஆத்தூர் யூனியன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் வேம்பு, புங்கை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இங்கிருந்த வேப்பமரத்தில் இருந்து திடீரென காகம் மற்றும் மைனாக்கள் அடுத்தடுத்து மயங்கி கீழே விழுந்தது.

    இதில் சில காகம் மற்றும் மைனாக்கள் உயிரிழந்தன. இதைபார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால் பறவைகள் இறந்தனவா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேங்காய்களுக்கு போதிய அளவு விலை கிடைக்காததால் சிலர் நிலங்களை விற்றுவிட்டு வேறு வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்
    • போதிய தண்ணீர் கிடைக்காததால் வேறுவழியின்றி தென்னை மரங்களை வெட்டி வேறு ஊர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இங்கு தக்காளி, வெண்டைக்காய், கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக ெதன்னை சாகுபடி நடைபெற்று வருகிறது.

    பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை பாதுகாக்க போராடியும் வருகின்றனர். பயிரிடப்படும் காய்கறிகள், தேங்காய்களுக்கு போதிய அளவு விலை கிடைக்காததால் சிலர் நிலங்களை விற்றுவிட்டு வேறு வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். பெரும்பாலான தென்னந்ேதாப்புகள் பிளாட்டுகளாக மாறிவிட்டன.

    மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்தாலும் இப்பகுதியில் வறட்சியான சூழலே நிலவுகிறது. மேலும் தென்னை மரங்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் சிறியஅளவு தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் வேறுவழியின்றி தென்னை மரங்களை வெட்டி வேறு ஊர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதைபார்க்கும் போது விவசாயிகளின் நிலைமை கண்ணீர் வரவழைக்கும் சூழ்நிலையில் உள்ளது தெரியவருகிறது.

    எனவே அரசு இவர்களுக்கு உதவவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரப்பலாறு அணை ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.
    • பரப்பலாறு அணையில் வனத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை இணைந்து பூங்கா அமைத்து படகுசவாரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 90 அடியாகும். அணையின் 197.95 மி.கனஅடி தண்ணீர் தேக்கலாம். 266 அடி நீலம் கொண்டதாகும். பாச்சலூர், வடகாடு, சிறுவாட்டுக்காடு, உள்ளிட்ட மலைகிராமங்களில் பெய்யும் மழைநீர் பரப்பலாறு அணைக்கு வருகிறது.

    ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் 6 குளங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு நங்காஞ்சியாறு படுகையில் விருப்பாச்சி முதல் ஜவ்வாதுபட்டி வரை தடுப்பணைகள், ஆழ்துளைகிணறுகளுக்கு நீர்மட்டம் உயர வழிவகை செய்கிறது. மேலும் இடையகோட்டை, நங்காஞ்சியாறு அணை வழியாக கரூர் அமராவதியாற்றில் கலக்கிறது.

    ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் பயனுள்ளதாக உள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் இந்த பகுதிகள் வெளிஉலகுக்கு தெரியவில்லை.

    பரப்பலாறு அணையில் வனத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை இணைந்து பூங்கா அமைத்து படகுசவாரி ெதாடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுமுறை காலங்களில் கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    அதுபோன்ற சமயங்களில் இங்குவரவும் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் அரசுக்கு வருவாயும் கிடைக்கும். மேலும் இப்பகுதி வியாபாரிகளுக்கும் உதவியாக இருக்கும். எனவே பரப்பலாறு அணையில் பூங்கா மற்றும் படகுசவாரி தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கஞ்சா வியாபாரிகளை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    • கஞ்சா வியாபாரிகளுக்கு சிறைதண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கன்னிவாடி குரும்பபட்டி பிரிவு பகுதியில் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த திவாகர் என்பவர் 22 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தார். அவரை கைது செய்து விசாரித்தில் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சுகப்பிரியா என்பவர் மொத்த வியாபாரியாக செயல்பட்டது தெரியவந்தது.

    அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்குபதிவு செய்து மதுரை கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

    இதனை விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன் திவாகருக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.1லட்சம் அபராதமும், சுகப்பிரியாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1லட்சத்து 10 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    கஞ்சா வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

    • பொங்கல் பண்டிகையின்போது மண்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து நமது முன்னோர்கள் கொண்டாடி வந்தனர்.
    • குறைந்த அளவு பொதுமக்களே மண்பானைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை மந்தமாகவே உள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுைர, அய்யலூர், வேல்வார்கோட்டை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாரம்பரியமாக மண்பானை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குலத்தொழிலான மண்பானை செய்தல், கோவில்களுக்கு விளக்குகள் மற்றும் அக்னிசட்டிகள், தெய்வங்களின் சிலைகளை வடிவமைத்தல் உள்ளிட்ட தொழில்களில் காலம் காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகையின்போது மண்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து நமது முன்னோர்கள் கொண்டாடி வந்தனர். நவீனகால மாற்றத்தால் இந்த நடைமுறை குறைந்து வருகிறது. இதனால் மண்பானை தயாரிக்கும் பணியும் தொய்வடைந்துள்ளது.

    குறைந்த அளவு பொதுமக்களே மண்பானைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை மந்தமாகவே உள்ளது. தற்போது பல வண்ணங்களில் மண்பானைகள் தயாரித்து வருகின்றனர். இந்த தொழிலை விட்டு பலர் வெளியூர்களுக்கு வேலைதேடி சென்றனர். இருந்தபோதும் சிலர் தொடர்ந்து தங்கள் குலத்தொழிலை செய்து வருகின்றனர். எனவே அரசு தங்களுக்கு உதவவேண்டும் என அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    ×