என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி
    X

    பழனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி

    • மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கிவீசப்பட்டனர்.
    • கோவிலுக்கு வந்தபோது விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    பழனி:

    சேலம் மாவட்டம் இடையபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ்கண்ணன்(35). இவரது நண்பர் பாலன்(35). இவர்கள் 2 பேரும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனத்தை காண்பதற்காக தாராபுரம் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.

    அதிகாலை 2 மணியளவில் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கிவீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியாகினர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களது உடல்களை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    கோவிலுக்கு வந்தபோது விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×