என் மலர்
திண்டுக்கல்
- மழைவளம் வேண்டியும், மக்கள்நலன் செழிக்கவும், விவசாயம் செழித்திடவும், கல்விநலன் மற்றும் வேலைவாய்ப்பு பெருகிடவும், அனைத்து சமுதாய மக்களும் மத நல்லிணக்கத்தோடு வாழவும் உலகெங்கும் சக்திநெறி ஓங்கவேண்டும்.
- பல்வேறு ஊர்களிலிருந்தும் செவ்வாடைத் தொண்டர்கள் தீச்சட்டி , முளைப்பாரி எடுத்தும், கஞ்சிக் கலயத்தை தலையில் சுமந்தவாறு மன்றத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மன்றத்தை வந்தடைந்தது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்தின் 18ம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சிக் கலய ஊர்வலம் நடைபெற்றது. மன்றத் தலைவர் பிரபாகரன் தலைமையில், வேடசந்தூர் வட்டத்தலைவர் பூவை நேருமாணிக்கம் முன்னிலையில், அரியபெத்தம்பட்டி தங்கவேல் மற்றும் மீனாட்சி நகைக்கடை சந்திரன் ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
மழைவளம் வேண்டியும், மக்கள்நலன் செழிக்கவும், விவசாயம் செழித்திடவும், கல்விநலன் மற்றும் வேலைவாய்ப்பு பெருகிடவும், அனைத்து சமுதாய மக்களும் மத நல்லிணக்கத்தோடு வாழவும் உலகெங்கும் சக்திநெறி ஓங்கவேண்டும் என்ற வேண்டுதலோடு, வேடசந்தூரை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் செவ்வாடைத் தொண்டர்கள் தீச்சட்டி , முளைப்பாரி எடுத்தும், கஞ்சிக் கலயத்தை தலையில் சுமந்தவாறு மன்றத்தில் தொடங்கி ஆர்.எச்.காலனி, வடமதுரை ரோடு, பஸ்நிலையம், ஆத்துமேடு, மார்க்கெட் ரோடு, கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மன்றத்தை வந்தடைந்தது.
இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்த கஞ்சிக் கலய ஊர்வலத்தை மன்றத்தின் நிர்வாகிகள் ராதாஅம்மாள், வெள்ளத்தாய், புவனேஸ்வரி, ராசாத்தி, ஜெயா, முனியம்மாள், திருமலைசாமி, மனோஜ், பாண்டி, மற்றும் மன்ற நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- ரெயிலை நிறுத்தி சோதனை யிட்ட போது என்ஜின் முன் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் சிக்கி இருந்தது.
- போலீசார் அந்த உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மைசூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்த ரெயில் என்ஜின் பகுதியில் ஒரு ஆணின் உடல் சிக்கிக் கொண்டு இருந்ததை பார்த்த கேட் கீப்பர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ரெயிலை நிறுத்தி சோதனை யிட்ட போது என்ஜின் முன் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் சிக்கி இருந்தது. போலீசார் அந்த உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? அவர் எவ்வாறு என்ஜினில் சிக்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இங்கு கடந்த 1973-ம் ஆண்டு 11-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- இதில் 50 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நத்தம்:
நத்தத்தில் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1973-ம் ஆண்டு 11-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் 50 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்ட முன்னாள் மாணவர்கள் பின்னர் புகைப்படம் எடுத்து கொண்டனர். இதில் பள்ளியின் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- தற்போது குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது இதனால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.
- இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை, பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை மகிழ்ச்சியோடு கிராம மக்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
நத்தம்:
நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டியில் சத்திரக்குளம் உள்ளது. இந்த குளம் கடந்த ஆண்டு பெய்த மழையால் முழுமையாக நிரம்பியது. தற்போது குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது இதனால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.
இதற்காக நத்தம்,கோட்டையூர், கருத்தலக்கம்பட்டி, கும்பச்சாலை, கோசுகுறிச்சி, அரவங்குறிச்சி, சேத்தூர், குரும்பபட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வந்த சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி மூங்கில்கூடை, வலை உள்ளிட்டவைகளை கொண்டு குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை, பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின. இவற்றை மகிழ்ச்சியோடு கிராம மக்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
- இந்த அலுவலகம் முன்பு பல ஆண்டுகளாக பழுதடைந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது அப்படியே பாம்புகள் வசிக்கும் கூடாரமாக மாறிப் போய்விட்டது.
- கடந்த 10 தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் அலுவலகத்திற்குள் 2 பாம்புகள் வந்ததைப் பார்த்து அங்கு இருந்த பொதுமக்கள், அதிகாரிகள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சார்நிலை கருவூலம் செயல்பட்டு வருகிறது. இந்த சார்நிலை கருவூல அலுவ லகம் அருகே மருதாநதி, மஞ்சளாறு உள்ளிட்ட ஆறுகளை கண்காணி ப்பதற்கான பொதுப்பணி த்துறை அலுவலகமும் உள்ளது.
இந்த அலுவலகம் முன்பு பல ஆண்டுகளாக பழுதடைந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது அப்படியே பாம்புகள் வசிக்கும் கூடாரமாக மாறிப் போய்விட்டது.
கடந்த 10 தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் அலுவலகத்திற்குள் 2 பாம்புகள் வந்ததைப் பார்த்து அங்கு இருந்த பொதுமக்கள், அதிகாரிகள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் நிலக்கோட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து பாம்பை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அங்கு லாரிகள் மற்றும் புதர்கள் இருந்ததால் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதனால் அதிகாரிகள் எந்த நேரமும் அச்சத்தில் பணி செய்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீ சார் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மிகுந்த அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர்.
எனவே லாரிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏலம் விட வேண்டும். இல்லையெனில் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொது மக்களும், அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சி மந்தகுளத்துபட்டியில் பெண்களுக்கான சமத்துவ பயிற்சி முகாம் நடந்தது.
- இதில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
நத்தம்:
நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சி மந்தகுளத்துபட்டியில் பெண்களுக்கான சமத்துவ பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு சீட்ஸ் அறக்கட்டளை இயக்குநர் பிரியா தலைமை தாங்கினார்.மாலை நேர பள்ளி ஆசிரியை முருகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
இதில் வக்கீல் நாகநந்தினி கலந்துகொண்டு பாலின சமத்துவதிற்கான மகளிர் உரிமைகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தேவாங்கு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாண்டி நன்றி கூறினார்.
- நேற்று இரவு ராபிக் குழந்தைகளுக்கு பால் கலந்து கொடுத்துள்ளார்.
- கால், மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றுக்கு சுடுநீரில் மெக்னீசியம் சல்பேட்டை கலந்து ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கி வந்துள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராபிக் (வயது 23). இவர்களுக்கு இனாமல் ஸசன் (4) மற்றும் 10 மாத கைக்குழந்தை பாத்திமா ஆகியோர் உள்ளனர். இவர்களது உறவினரான நத்தம் அம்மா பட்டியைச் சேர்ந்த புரோஸ்கான் குழந்தைகளான முகமது சுகைல் (11), முகமது சுனைல் (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
தற்போது விடுமுறை என்பதால் அவர்கள் இருவரும் ஷேக் அப்துல்லா வீட்டுக்கு வந்தனர். நேற்று இரவு ராபிக் குழந்தைகளுக்கு பால் கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த 4 குழந்தைகளும் அடுத்தடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாலை சோதனை செய்துள்ளார். அப்போது சர்க்கரைக்கு பதிலாக மெக்சீனியம் சல்பேட் என்ற வேதிப்பொருளை கலந்து கொடுத்தது தெரிய வந்தது.
கால், மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றுக்கு சுடுநீரில் மெக்னீசியம் சல்பேட்டை கலந்து ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கி வந்துள்ளது. இதற்காக கற்கண்டு போன்ற வடிவம் கொண்ட மெக்னீசியம் சல்பேட்டை சமையல் அறையில் சேக் அப்துல்லா வைத்துள்ளார். அதனை கவனிக்காமல் பாலில் கலந்து கொடுத்ததால் குழந்தைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
4 குழந்தைகளுக்கும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- மலைக்கோவிலில் உள்ள தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
பழனி:
நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளை போலீசார் மெட்டல் டிடக்டர் கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர். தண்டவாள பகுதிகளில் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ரெயில் நிலையங்களுக்கு வரும் பார்சல்கள் அனைத்தும் கடுமையான பரிசோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டு வருகின்றன. இதேபோல் ரெயில் பெட்டிகளிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வருகின்றனரா? என ஆய்வு நடத்தி வருகின்றனர். மலைக்கோவிலில் உள்ள தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மசூதி, தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சீருடை அணியாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். லாட்ஜூகள், தங்கும் விடுதிகளில் எவ்வித காரணமும் இன்றி வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த சாலை அதன் பின்னர் பராமரிக்கப்படவில்லை. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி ன்றனர்.
- இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பல முறை புகார் அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சி க்குட்பட்ட தாசமநாய க்கன்பட்டி, வைரபெருமாள் பிள்ளையூர், மணல்காட்டூர் ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. சின்னழகுநாயக்க னூர் அருகே மணல் காட்டூர் - தாசமநாயக்கன்பட்டி செல்லும் சாலை சுமார் 1 கி.மீ தொலைவுக்கு உருக்குலைந்து போக்கு வரத்துக்கு பயன்பாடற்ற நிலையில் மிகவும் மோசமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த சாலை அதன் பின்னர் பராமரிக்கப்படவில்லை. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி ன்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பல முறை புகார் அளிக்க ப்பட்டது. ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மணல்காட்டூர், வைரபெருமாள் பிள்ளை யூர், தாசமநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு எந்த வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்த ப்படவில்லை. எனவே விரைவில் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும். உரிய நட வடிக்கை எடுக்காதபட்ச த்தில் பொதுமக்களுடன் சேர்ந்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை முற்றுகையிடுவோம் என அவர்கள் தெரி வித்தனர்.
- பஸ் நிலையம் கிழக்கு பகுதியில் உள்ள 2 நுழைவாயில் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது.
- அந்த சாலையில் 24 மணி நேரமும் ஓடும் கழிவுநீரை, குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பயணிகள் மிதித்து செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது காமராஜர் பஸ் நிலையம். திருச்சி, மதுரை, திருப்பூர், கரூர் ஆகிய முக்கிய தொழில் மாநகரங்களை இணைக்க கூடிய சந்திப்பாக திண்டுக்கல் இருந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களும் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சுகாதாரம் என்பது இங்கு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மாநகராட்சி சார்பில் கட்டண கழிப்பறைகள் மற்றும் இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. சிறுநீர் கழிப்பிடங்களை சுத்தப்படுத்துவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அச்சத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
பஸ் நிலையம் கிழக்கு பகுதியில் உள்ள 2 நுழைவாயில் பகுதியிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி அந்த பகுதியை கடந்து வருகின்றனர். சாலையில் 24 மணி நேரமும் ஓடும் கழிவுநீரை, குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பயணிகள் மிதித்து செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயத்தில் தவித்து வருவதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர்.
பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்த வெளி கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்வதற்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
- அவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
குள்ளனம்பட்டி:
கோவை மாவட்டம் பொ ள்ளாச்சியை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 35).கூலி த்தொழிலாளி. இவர் கடந்த 8ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லை அடுத்த கூவன த்துவில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்தார். அப்போது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
பின்னர் அவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை போ லீசாருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன் மே ற்பார்வையில், நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெ க்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு, தலைமை காவலர்கள் முகம்மது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து பல்வேறு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மருதுபாண்டியின் மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் எடுத்துச் செல்வது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த காட்சியில் பதிவான வாலிபரின் புகைப்படம் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் அவர் பொன்மாந்துறை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த அரவிந்த் குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அரவிந்த் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து திண்டுக்கல், வடமதுரை பகுதிகளில் திருடிய 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வாரவிடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
- கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாகவும் முருகபெருமானின் 3ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமு கூர்த்தம், பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில் வாரவிடுமு றையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் சிலர் பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர்.
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கிடவும், தொழிலில் முன்னேற்றம் காணவும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மலை க்கோவிலுக்கு முருகனை தரிசிக்க அதிகாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்தனர். இதனால் அடிவாரம் ரோடு, பூங்காேராடு, கிரி வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாமி தரிசனம் செய்தபின்பு ஊருக்கு திரும்புவதற்காக பக்தர்கள் பழனி பஸ் நிலை யத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.






