என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூரில் கஞ்சிக்கலய ஊர்வலம்
    X

    ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்.

    வேடசந்தூரில் கஞ்சிக்கலய ஊர்வலம்

    • மழைவளம் வேண்டியும், மக்கள்நலன் செழிக்கவும், விவசாயம் செழித்திடவும், கல்விநலன் மற்றும் வேலைவாய்ப்பு பெருகிடவும், அனைத்து சமுதாய மக்களும் மத நல்லிணக்கத்தோடு வாழவும் உலகெங்கும் சக்திநெறி ஓங்கவேண்டும்.
    • பல்வேறு ஊர்களிலிருந்தும் செவ்வாடைத் தொண்டர்கள் தீச்சட்டி , முளைப்பாரி எடுத்தும், கஞ்சிக் கலயத்தை தலையில் சுமந்தவாறு மன்றத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மன்றத்தை வந்தடைந்தது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்தின் 18ம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சிக் கலய ஊர்வலம் நடைபெற்றது. மன்றத் தலைவர் பிரபாகரன் தலைமையில், வேடசந்தூர் வட்டத்தலைவர் பூவை நேருமாணிக்கம் முன்னிலையில், அரியபெத்தம்பட்டி தங்கவேல் மற்றும் மீனாட்சி நகைக்கடை சந்திரன் ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

    மழைவளம் வேண்டியும், மக்கள்நலன் செழிக்கவும், விவசாயம் செழித்திடவும், கல்விநலன் மற்றும் வேலைவாய்ப்பு பெருகிடவும், அனைத்து சமுதாய மக்களும் மத நல்லிணக்கத்தோடு வாழவும் உலகெங்கும் சக்திநெறி ஓங்கவேண்டும் என்ற வேண்டுதலோடு, வேடசந்தூரை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் செவ்வாடைத் தொண்டர்கள் தீச்சட்டி , முளைப்பாரி எடுத்தும், கஞ்சிக் கலயத்தை தலையில் சுமந்தவாறு மன்றத்தில் தொடங்கி ஆர்.எச்.காலனி, வடமதுரை ரோடு, பஸ்நிலையம், ஆத்துமேடு, மார்க்கெட் ரோடு, கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மன்றத்தை வந்தடைந்தது.

    இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்த கஞ்சிக் கலய ஊர்வலத்தை மன்றத்தின் நிர்வாகிகள் ராதாஅம்மாள், வெள்ளத்தாய், புவனேஸ்வரி, ராசாத்தி, ஜெயா, முனியம்மாள், திருமலைசாமி, மனோஜ், பாண்டி, மற்றும் மன்ற நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×