என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே சத்திரகுளத்தில் மீன் பிடி திருவிழா
    X

    மீன் பிடி திருவிழாவில் ஆர்வமுடன் பங்கேற்றவர்கள்.

    நத்தம் அருகே சத்திரகுளத்தில் மீன் பிடி திருவிழா

    • தற்போது குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது இதனால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.
    • இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை, பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை மகிழ்ச்சியோடு கிராம மக்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டியில் சத்திரக்குளம் உள்ளது. இந்த குளம் கடந்த ஆண்டு பெய்த மழையால் முழுமையாக நிரம்பியது. தற்போது குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது இதனால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.

    இதற்காக நத்தம்,கோட்டையூர், கருத்தலக்கம்பட்டி, கும்பச்சாலை, கோசுகுறிச்சி, அரவங்குறிச்சி, சேத்தூர், குரும்பபட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வந்த சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி மூங்கில்கூடை, வலை உள்ளிட்டவைகளை கொண்டு குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.

    இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை, பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின. இவற்றை மகிழ்ச்சியோடு கிராம மக்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

    Next Story
    ×