என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • 3-வது சனிக்கிழமை வரை பூக்க ளின் விலை படு வீழ்ச்சியை கண்டது.
    • வாங்குவதற்கு வியாபா ரிகள் இல்லாததால் பூக்களை மார்க்கெட் டிலேயே விட்டு சென்று விட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகி றது. முக்கியமாக மாவட் டத்தில் பல்லாயிரம் ஏக்கரில் விவசாயிகள் சாமந்தி, சம்பங்கி, செண்டு மல்லி, கோழி கொண்டை ,குண்டு மல்லி, சன்னமல்லி, ஜாதி மல்லி, அரளி, பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ், உள்ளிட்ட பலவகையான பூக்கள் சாகுபடி செய்கின்ற னர். இங்கு விளையும் பூக்கள் பல மாவட்டங்க ளுக்கும், மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும் மாவட்டத்தில் விளையும் பூக்கள் அனைத் தும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பூ மார்க்கெட்டிற்கு விவசா யிகள் கொண்டு வந்து தாங்கள் விளைவித்த பூக்க ளை வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் பூக்களின் வரத்து அதிகரிப்பால் புரட்டாசி முதல் சனிக்கிழ மையிலிருந்து 3-வது சனிக்கிழமை வரை பூக்க ளின் விலை படு வீழ்ச்சியை கண்டது.

    மேலும் பெருமாளுக்கு புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் விரதம் இருந்து விசேஷமாக கொண்டாடு வதால் மாவட்டத்தில் பூக்க ளின் தேவை அதிகரிக்கும். ஆனால் பூக்களின் வரத்து அதிகரிப்பால் விலை இன்றி படு வீழ்ச்சி அடைந்தது.

    பண்டிகை முடிந்த நிலையில் இன்று மேலும் பூக்களின் விலை குறைந்து சாமந்திப் பூ கிலோ ரூ.5 முதல் 10 ரூபாய்க்கு விற்ப னை செய்யப்பட்டா தாலும், வாங்குவதற்கு வியாபா ரிகள் இல்லாததா லும் பூக்களை பூ மார்க்கெட் டிலேயே விவசாயிகள் விட்டு விட்டு சென்று விட்டனர். அங்குள்ள பூ வியாபாரிகள் இந்த பூக்களை அள்ளி ஓரமாக போட்டு வைத்துள்ளனர்.

    இன்று பூ மார்க்கெட்டில் சாமந்தி கிலோ 5 ரூபாய் முதல் ரூபாய் 10 வரையும், சம்பங்கி கிலோ ரூபாய் 20 ரூபாய், கனகாம்பரம் கிலோ 300 ரூபாய், சன்னமல்லி கிலோ 200 ரூபாய், குண்டு மல்லி கிலோ 350 ரூபாய், காக்கட்டா கிலோ 180 ரூபாய், மூக்குத்தி கிலோ 120 ரூபாய், அரளி கிலோ ரூ. 20 முதல் 40 வரையும், பன்னீர் ரோஸ் 40 ரூபாய், நந்தியா வட்டம் கிலோ 40 ரூபாய், என விற்பனை செய்யப்பட்டது.

    • இறந்தவர்களின் உடல்கள் தனியார் மருத்து வமனையில் வைக்கப்பட்டு இருந்தது.
    • தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.பழனியப்பன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை தீ விபத்தில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 7 பேரும், நீப்பந்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 8 பேர் பலியானார்கள்.

    இறந்தவர்களின் உடல்கள் ஓசூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல்களுக்கு தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய அவர் இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் ராணிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மண்எண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
    • சமாதானம் பேசி மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் மண்எண்ணை கேன் எடுத்து வந்து திடீரென்று தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    இதில், அந்த பெண் தருமபுரி மாவட்டம், முத்தம் பட்டியை அடுத்த வே.மங்கள கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி பழனியம்மாள் என்பது தெரியவந்தது. இவர் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரிடம் நிலம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் வீட்டை அபகரிக்கும் எண்ணத்தில் தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்து வருவதா கவும், இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் எனக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சி செய்ப வர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    அங்கிருந்த போலீசார் அவரிடம் சமாதானம் பேசி மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் கோணங்கி நாயக்கன அள்ளியை சேர்ந்த சிவனேசன் என்பவர் மனு கொடுக்க இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைக்க முயன்றார். அவரையும் போலீசார் மீட்டு விசாரித்தனர்.

    இதில், சிவனேசனின் பக்கத்து நிலத்ைதச் சேர்ந்த வரான ஆறுமுகம் என்பவரின் மகன்கள் சிவசங்கர், சரவணன், ராஜ சேகர் ஆகிய 3 பேரும் அவருக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் செல்லும் பொது வழிப்பாதையை நீக்கி விட்டு விவசாய நிலமாக மாற்றி அபகரிக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து அவர் தட்டிகேட்டதற்கு 3 பேரும் தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவந்தது.

    இது தொடர்பாக கடந்த மாதம் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தும் இது வரை எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. உடனே அங்கிருந்த போலீசார் சிவனேசனை சமாதானம் பேசி கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதித்தனர்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத் தீர்க்கும் முகாமில் மனு கொடுக்க வந்த பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாகாவதிஅனை பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • அரசு பேருந்து மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29), கூலி தொழிலாளி. இவர் நேற்று சொந்த வேலையாக சாமிசெட்டிப்பட்டியில் இருந்து நாகாவதிஅனை பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது ஏலகிரி அடுத்துள்ள எள்ளுகுழி என்ற இடத்தில் சென்றபோது, அவ்வழியாக அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது சசிகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அரசு பேருந்து மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த சசிகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் தக்காளி நாற்றுப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் ஒரு நாற்று ரூ.1.50-க்கு வாங்கி நடவு செய்தனர்.
    • ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளி விளைவிக்க ரூ.1 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளது.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வருடம் முழுவதும் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு உள்ள தக்காளி மார்க்கெட்டிருந்து உள்ளூர் தேவை போக சேலம், திண்டுக்கல், கோவை , மதுரை, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    தற்போது பல தனியார் நிறுவனங்கள் தரமில்லாத தக்காளி விதைகள் விற்பனை செய்ததால் தனியார் தக்காளி நாற்றுப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் ஒரு நாற்று ரூ.1.50-க்கு வாங்கி நடவு செய்தனர்.

    இந்த நிலையில் பி.கொல்லஹள்ளி, ரெட்டியூர், பொப்பிடி, பெல்ரம்பட்டி, கரகூர், சோமன அள்ளி உள்ளிட்ட கிராமத்தில் தக்காளி செடிகளில் வைரஸ் நோய் தாக்குதலால் புள்ளி அழுகல் நோய், ஊசிப்புள்ளி நோய், தண்டு இலைகள் நோய் மற்றும் பழங்களில் கோடுகள் உள்ளிட்டவை பாதிப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளி விளைவிக்க ரூ.1 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளதாகவும், பயிர்களில் வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை விவசாயிகள் சந்திக்கும் நிலையில் கிலோ தக்காளி ரூ.10 வரை மட்டுமே தற்போது விற்பனை ஆகிவருகிறது.

    இதனால் விரக்தி அடைந்த பி.கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி தனது விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • லோகேஷ் மற்றும் பீமாராவ் இருவரும் தப்பி வெளியில் வந்துள்ளனர்.
    • அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையை சேர்ந்த 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர் டி.அம்மாபேட்டை சேர்ந்த இளைஞர்கள் 25க்கும் மேற்பட்டோர், ஓசூர், கர்நாடக பகுதிகளில் உள்ள பட்டாசு குடோன்களில் வேலை செய்வதற்காக சென்று உள்ளனர். இதில் 15 இளைஞர்கள் ஒரு பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் 10 இளைஞர்கள் தமிழ்நாடு- கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பட்டாசு குடோனுக்கு தேவையான பட்டாசுகள் கன்டெய்னர் லாரி மூலம் வந்துள்ளது. இதனை இறக்கும் பணியில் குடோனில் வேலை செய்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ முழுவதுமாக பரவி குடோனில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதறியது.

    அப்போது வெளியில் வேலை செய்திருந்த லோகேஷ் மற்றும் பீமாராவ் இருவரும் தப்பி வெளியில் வந்துள்ளனர். ஆனால் குடோனுக்குள்ளாக இருந்த மற்றவர்கள் விபத்தில் சிக்கினர். இந்த நிலையில் இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையை சேர்ந்த 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ஒரே கிராமத்தைச் சார்ந்த வேடப்பன், இளம்பரிதி, ஆதிக்கேசவன், விஜயராகவன், ஆகாஷ், கிரி, முனிவேல் உள்ளிட்ட 7 வாலிபர்கள் உயிரிழந்தனர். இதனால் டி.அம்மாபேட்டை கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் இறந்தவர்களின் வீட்டு அருகே உறவினர்கள் சூழ்ந்து கதறி அழுதனர். இந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்கும் நிலையில் இருந்தது. மேலும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 இளைஞர்கள் பட்டாசு வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் இந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 10 நாட்களுக்கு முன்பு நிலத்தை உழுது நெல் பயிர் நடவு செய்துள்ளனர்.
    • விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அணை அருகே ஏராளமான விவசாயிகள் பல்வேறு வகையான விவசாயம் செய்து வருகின்றனர். இதில் சரவணன், பெருமாள் என்ற விவசாயிகள், தொடர் மழையால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிலத்தை உழுது நெல் பயிர் நடவு செய்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சரவணன், பெருமாள் விவசாயிகளின் ஒரு சில வயல்களில் தண்ணீர் இருந்தும், பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் பயிர்களை பிடுங்கி எடுத்து, உரக்கடைகளில் புகார் தெரிவித்துள்ளனர். அப்பொழுது அந்த பயிர்களை தண்ணீரில் வைத்து பார்த்த உரக்கடையினர், வேர் பிடிப்பதாகவும், அதற்கு மாற்று உரத்தினை வழங்கி உள்ளனர். இதனை தெளித்தால் பயிர்கள் உயிர்ப்பிக்கும் என தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அவர்கள் தெரிவித்தது போலவே விவசாயிகள் வயலில் உரத்தினை தெளித்து தண்ணீர் பாய்த்து உள்ளனர். ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், தொடர்ந்து பயிர்கள் முழுவதுமாக காய்ந்து கருகி வருகிறது. இது அனைத்து வயல்களும் இல்லாமல் குறிப்பிட்ட சில வயல்களில் கடந்த 5 ஆண்டுகளாக பயிரிடக்கூடிய பயிர்கள் பாதியிலேயே காய்ந்து கருகி வருகிறது.

    இந்த வயல்களில் பயிரிடப்படுகின்ற கருப்பு, நெல் இது போன்ற பயிர்கள் காய்ந்து கருகி விடுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் என்ன காரணம் என்று தெரியாமல், பயிர்கள் காய்ந்து வருவதால், ஆண்டுதோறும் இந்த வயல்களில் பயிர்களை விவசாயம் செய்யும் நிலையில், ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே வேளாண் துறை அதிகாரிகள் இந்த வயல்களை நேரில் ஆய்வு செய்து மண்ணை பரிசோதனைக்கு உட்படுத்தி, பயிர்கள் காய்வதற்கான காரணத்தை தெரியப்படுத்தினால், அதனை சரி செய்வதற்கு வசதியாக இருக்கும். அதேபோல் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு வகையில் நஷ்டம் அடைந்து வரும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றனர்.
    • போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (38), இவரது மனைவி மகாலட்சுமி (33), இவர்களுக்கு குருமூர்த்தி(16), குருபிரசாந்த் (15) என்ற இரு மகன்களும், மற்றும் ரிஷபஸ்ரீ (13) என்ற ஒரு மகளும் உள்ளனர். பூபதி தனது சொந்த கிராமத்தி லேயே சொந்தமாக டைலர் கடை வைத்து வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் பூபதி தீபாவளி சீட்டு நடத்தி நஷ்டமடைந்ததால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சுமார் ரூ.25 இலட்சம் ரூபாய் வரை கடன் பெற்று அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் மற்றும் சீட்டு கட்டியவர்கள் பணம் கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் தனது தந்தை கிருஷ்ணமூர்த்தியிடம் தங்களுக்கு சொந்தமான காலி இடத்தை விற்று பணம் கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளார். அதற்கு கிருஷ்ண மூர்த்தி மறுப்பு தெரி வித்துள்ளார்.

    இந்நி லையில் மனமுடைந்த பூபதி தனது மனைவி, மகன்கள் மற்றும் மகளையும் சேர்த்து அழைத்து கொண்டு தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த செல்லன ஹள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை யோரம் உள்ள மாந்தோப்பில் குடும்பத்துடன் அமர்ந்து பூச்சி மருந்து குடித்து உள்ளனர்.

    பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் மயங்கிய நிலையில் இருந்தவர்களை கண்டு காரிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு மயங்கிய நிலையில் இருந்த 5 பேரையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க வட்டாட்சியர் அலுவல கத்திற்கு வந்து செல்கின்ற னர்.
    • மழை காலங்களில் பாம்பு, விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் சுற்று சுவர் மற்றும் பல்வேறு வகையான மரங்களுடன் இயற்கையாக அமைந் துள்ளது.

    இங்கு மாரண்டஹள்ளி, புலிக்கரை, பாலக்கோடு, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட 4 வருவாய் பிர்காகளிலிருந்து தினந்தோறும் ஆதார் அட்டை, பட்டா பெறுதல், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை களுக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க வட்டாட்சியர் அலுவல கத்திற்கு வந்து செல்கின்ற னர்.

    வட்டாட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் குப்பைகள், முட்புதர்கள், புல் செடிகள் மரங்கள் இருக்கும் பகுதியில் அடர்ந்த சீமை கருவேலம் மரங்கள் உள்ளிட்டவை இருப்பதால் மழை காலங்களில் பாம்பு, விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் வந்து செல்கின்றனர்,

    மேலும் மாற்றுத்தி றனாளிகள் பொதுமக்கள் பொதுக் கழிவறை சுகாதாரமற்றிருப்பதாலும் புதர் மண்டி இருப்பதாலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் அடிப்படை வசதி கூட இல்லாமல் இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு முட்புதர்கள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மன நோயாளிகளின் நடமாட்டம் அதிகரித்து கொண்டு செல்கிறது.
    • ஆதரவின்றி அழுக்கு ஆடையுடன் சுற்றி திரிகிறார்கள்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி பகுதியில் சமீப காலமாக ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மன நோயாளிகளின் நடமாட்டம் அதிகரித்து கொண்டு செல்கிறது.

    வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மனநோயாளிகளை ஈவு இரக்க மில்லாமல் அவர்களது உறவினர்கள் வாகனத்தில் அழைத்து வந்து தருமபுரி மாவட்ட நெடுஞ்சாலை பகுதிகளில் இறக்கி விட்டு செல்கிறார்கள்.

    பின்னர் அவர்கள் கால் போன போக்கில் நடந்து பஸ் ஸ்டேன்ட் பகுதிகளில் அடைக்கலமாகி ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு ஆதரவின்றி அழுக்கு ஆடையுடன் சுற்றி திருகிறார்கள்.

    இதேபோன்று குழந்தை களை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய முதியவர்களும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் வேதனையான நிகழ்வுகளும் நடக்கின்றன.

    இது போன்ற சாலை ஓரங்களில் ஆதரவு இல்லாமல் சுற்றித் திரியும் மன நோயாளிகள் மற்றும் முதியவர்கள் மழை வெயில் மற்றும் கடும் குளிரில் உணவின்றி, மருத்துவ வாய்ப்பின்றி, உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • பாலக்கோடு பேரூராட்சியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீருடன் சுத்தகரிக்கப்படாத குடிநீர் கலந்து வினியோகம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
    • குடிநீருடன் பஞ்சபள்ளி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கலந்து விநியோகம் செய்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றிக்கு 6 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது சமீப காலமாக ஒகேனக்கல் சுத்திகரிக்கப்பட்ட குடி நீருடன் பஞ்சப்பள்ளி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்படாத நீரையும் கலந்து முறைகேடாக பாலக்கோடு பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கும் குடிநீர் சுத்தமாக இல்லாமல் மண்கலந்த நிறமாக வருவதாகவும், பிளீச்சிங் பவுடர் அதிகம் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஒகேனக்கல் குடிநீரில், பஞ்சப்பள்ளி நிலத்தடி நீர் கலக்கப்படுவதால் அதிக புளோரைடு காரணமாக பொதுமக்களுக்கு பற்கள், மற்றும் எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.மேலும் சிறுநீரகம், மூளை, தைராய்டு, கல்லீரல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் பாதைகள் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள நிலத்தடி நீரில் புளோரைடு அதிக அளவில் உள்ளது, இதை குடிப்பதால் பற்கள் எலும்புகளில் ஆஸ்டியோ போராசிஸ் நோய் தாக்கம் ஏற்பபட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி பாதிக்கபடுவதுடன் எலும்புகள் விரைவில் பலவீனமடைய காரண மாவதால், இதனை தடுக்க பல கோடி ரூபாய் செலவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தபட்டு வரும் நிலையில், பாலக்கோடு பேரூராட்சியில் முறை கேடாக ஓகேனக்கல் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீருடன் பஞ்சபள்ளி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கலந்து விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் சமீப காலமாக இப்பகுதி மக்கள் பல்வேறு உடல் நல கோளாறுகளுக்கும், நோய் தொற்றிற்க்கும் ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அறிஞர் அண்ணா நெடுந்துர ஒட்டப்பந்தயம் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொதுமக்களி டையே உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட பந்தயம் ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவித்தார்கள். இந்த அறிவிப்பினை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டப் பிரிவு மூலமாக தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட பந்தயம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவி கள் கலந்து கொண்ட அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட பந்தயத்தை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இப்போட்டியில் கலந்து கொண்ட 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் அரசு கலைக்கல்லூரியில் இருந்து , தேவரசம்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 25 வயதிற்கு மேற்பட்ட அதியமான் கோட்டம் வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடைந்தனர்.

    17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, ஒட்டப்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக் கல்லூரிக்கு வந்தடையு மாறும் இரண்டு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.

    ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5000-மும், 2-ம் பரிசாக ரூ.3000-மும், 3-ம் பரிசாக ரூ.2000-மும், 4 முதல் 10 இடங்களைப் பெறுபவர்க ளுக்கு தலா ரூ.1000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்க ளையும் மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் டி.ஆர்.கீதாராணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா உட்பட தொடர்பு டைய அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்கள், வீரர், வீராங்கனைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×