என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
    • மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், ஒகேனக்கல், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.

    இதைத்தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, சித்தேரி, பள்ளிப்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2-வது நாளாக நேற்று மதியம் 2 மணி முதல் காற்றுடன் கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

    இதனால் பல்வேறு இடங்களில் வாழை, முருங்கை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் முறிந்தன. இந்த மழையால் சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீா் தேங்கியது.

    கனமழையால் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது.

    வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 5-வது வார்டு பகுதியில் உள்ள அண்ணா நகரில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். இதேபோன்று ஒகேனக்கல் பகுதிகளில் 2-வது நாளாக நேற்று பரவலாக மழை பெய்தது. தருமபுரி நகரில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்ததால், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை குளிர்ந்த காற்று வீச தொடங்கி யவுடன் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் மீண்டும் சாரல் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    மாவட்டத்தில் 2 தினங்களாக பரவலாக மழை பெய்ததால், ஆங்காங்கே உள்ள ஏரி, குளம், குட்டைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • ஒகேனக்கல்லுக்கு நேற்று 2000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக உயர்ந்து நிலவரப்படி 9500 கன அடியாக அதிகரித்துள்ளது.
    • நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது.

    ஒகேனக்கல்:

    காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 7 ஆயிரம் கன அடி உபரி நீர் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து நேற்று 5603 கன அடியாக குறைந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்டது.

    கடந்த சில தினங்களாக தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும் தமிழக-கர்நாடாக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று முதலே அதிகரிக்க தொடங்கியது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று 2000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக உயர்ந்து நிலவரப்படி 9500 கன அடியாக அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது.

    கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கணித பாடம் நடத்தி வருகிறார்.
    • ஒரு சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதி களுக்கும் தலா 1 அரசு மாதிரி பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஅள்ளி பகுதியில் அரசு மாதிரி பள்ளியை கடந்த 2013 -ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. இப்பள்ளி யில் சுமார் 630 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 21 இருபால் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் பாலகோடு அருகே உள்ள மல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாநவாஸ். இவர் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கணித பாடம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பள்ளியில் பயின்ற 8-ம் வகுப்பில் படிக்கும் ஒரு சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக சம்பந்தபட்ட மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரனிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்காமல் பாலக்கோடு அருகே உள்ள ஜக்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்த ஆசிரியை ஒருவரை கெரகோட அள்ளி அரசு மாதிரி பள்ளிக்கு பணி மாறுதல் செய்துவிட்டு பாலியல் தொந்தரவு செய்த ஷாநவாசை ஜக்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணி மாறுதல் செய்துள்ளார்.

    பாலியல் தொந்தரவு செய்த கணித ஆசிரியருக்கு எந்தவித தண்டனையும் வழங்காமல் பெயரளவுக்கு மட்டுமே பணி மாறுதல் செய்ததால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இதனால் மாவட்ட கலெக்டர் இது சம்மந்தமாக விசாரணை மேற்கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்த கணித ஆசிரியர் ஷாநவாஸ் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வட்டாட்சியர் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்
    • விரிவு படுத்தப்பட்ட சாலையாக அமைக்க கோரிக்கை வைத்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள நாகர்கூடல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மூசாகவுண்டன் கொட்டாய் பகுதியில் இருந்து மத்தாளபள்ளம் வழியாக நாகாவதி அணை வரை செல்லும் சாலை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. இப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே நடைபெற்று வருகிறது. இப்பகுதி போக்குவரத்து மற்றும் விளை பொருட்கள் சந்தைப்படுத்துவதற்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய அளவிலான சாலை அமைக்கப்பட்டது. தற்போது விரிவு படுத்தப்பட்ட சாலையாக அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் சாலை பகுதி அமைந்துள்ள இடங்கள் அனைத்தும் பட்டா நிலங்களாக உள்ளதால் சாலைக்கு தேவையான அகலமான பகுதியை பொதுமக்கள் அரசுக்கு வழங்கும் பட்சத்தில் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தனர்.

    இதற்கு அனைத்து பட்டா நில உரிமை தாரரும் ஒப்புக்கொண்ட நிலையில் ஒரு சிலர் மட்டும் ஏற்காததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் ஒட்டு மொத்தமாக கிராமத்திற்கு செல்லும் சாலையை பள்ளம் தோண்டி துண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த இண்டூர் போலிசார் பாதுகாப்பிற்காக வரவ ழைக்கப்பட்டிருந்தனர்.

    இதனையடுத்து நல்லம் பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், நாகர்கூடல் ஊராட்சி மன்ற தலைவர் குமார்,நிர்வாக பொறி யாளர், வருவாய் அலுவலர் திலகவதி, விஏஓ சிவா, பொதுமக்களிடம் தொடர் பேச்சு வார்த்தை நடத்தி நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிலத்தை கொடுக்கும் பட்சத்தில் தான் அரசு உடனடியாக உங்களுக்கு சாலை அமைக்கும் பணியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

    இந்த பல மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின் அனைத்து பட்டா நில உரிமை யாளர்களும் நிலத்தை அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டனர்.

    இதனால் பல மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்து சுமூக தீர்வு ஏற்பட்டது. 

    • துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • வெடிமருந்து குடோன்க ளை மாதம் இருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு உற்பத்தி நிலையங்கள், பட்டாசு சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வெடிமருந்து குடோன்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வது தொடர்பாக , காவல்துறை, தீயணைப்பு-மீட்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    வருவாய்த்துறையினர் வெடிமருந்து குடோன்க ளையும், பட்டாசு விற்பனை நிலையங்களையும், மாதம் இருமுறை ஆய்வு செய்யுமாறும், ஆய்வின் ்போது காவல்துறை யினருக்கும் தகவல் தெரிவித்து அவர்களுடன் இணைந்து தணிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் ஆய்வின்போது, இருப்புப் பதிவேட்டில் உள்ளவாறு இருப்பு உள்ளனவா என்பதையும், உரிமம் வழங்கப்பட்ட அளவுக்குட்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற னவா என்பதையும், பட்டாசுகள் மற்றும் வெடி மருந்துகளை பாதுகாப்பான முறையில் இருப்பு வைத்து உள்ளனரா என்பதையும், அரசு விதிமுறைகளுக்குட் பட்டு பாதுகாப்பு நடவடிக் கைகள் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றதா என்பதை உறுதிபடுத்திடவும் அறிவு றுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் டி.ஆர்.கீதாராணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொ) மகாலிங்க மூர்த்தி, வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • டிரைவருக்கு போலீசார் வலை வீச்சு
    • கள்ளத்தனமாக டிப்பர் லாரியில் கிராவல் மண் கடத்துவது தெரிய வந்தது.

    தருமபுரி, 

     பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராவல் மண் கடத்துவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தலைமை காவலர்கள் கோபாலகிருஷ்ணன், முருகன், தலைமையில் போலீசார் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 4 -வது மைல் கல் கிராமத்தில் கள்ளத்தனமாக டிப்பர் லாரியில் கிராவல் மண் கடத்துவது தெரிய வந்தது. இதனை அடுத்து ஓட்டுனர் வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்ட நிலையில் போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

    அருகில் உள்ளவர்களை விசாரணை செய்ததில் பென்னாகரம் அடுத்த சத்யநாதபுரம் அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த அல்லி முத்து மகன் சிவா (35) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    • உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது பரிதாபம்
    • கணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

     தருமபுரி,  

     தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, அதிகாரப்பட்டி அருகே உள்ள செங்காட்டு புதூர், கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மனைவி தீர்த்தம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இவர் நேற்று காலை கல்லாத்து காடு கிராமத்தில் உறவினரின் இறப்பு சடங்கிற்கு செல்வதற்காக மனைவி யுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது அரூர்-சேலம் மெயின் ரோட்டில் உள்ள அதிகாரப்பட்டி பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் பள்ளிப்பட்டி செல்வதற்கு நின்று கொண்டிருந்தபோது திருப்பத்தூர் வரை செல்லும் தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக சிவராஜ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தீர்த்தம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சிவராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாப்பி ரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது.
    • கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 2000 கனஅடியாக உயர்ந்தது.

    பென்னாகரம்:

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளான கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் இன்று 5603 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணைக்கு இன்று நீர்வரத்து 4479 கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 100.72 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து இன்று 3603 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதேபோன்று கபினி அணைக்கும் நீர்வரத்து வரதொடங்கியதால், இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1008 கனஅடியாக அதிகரித்தது. 2284 அடி உயரம் கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2276.35 அடியாக காணப்பட்டது. அணையில் இருந்து இன்று 2000 கன அடி அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 5603 கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் தமிழக-கர்நாடாக மாநில எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக குறைவான அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த 2 தினங்களாக 1500 கனஅடியாக நீடித்து வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 2000 கனஅடியாக உயர்ந்தது.

    இதன் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது. கர்நாடகா அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை காலை தமிழகத்திற்கு வந்தடையும். அப்போது ஒகேனக்கல்லின் நீர்வரத்து மேலும் அதிரிக்க வாய்ப்புள்ளது.

    எனவே, கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.ஆர்.பி டேம் பகுதியில் கனமழை பெய்தது.
    • மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை மாறியதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து மாவட்டம் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வந்தது. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    அதனடிப்படையில் நேற்று மாலை தருமபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், அதியமான்கோட்டை, ஜருகு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாகவும், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்தது.

    கோடை வெயிலுக்கு இணையாக மாவட்டத்தில் 90 டிகிரி வெயில் பதிவாகி வந்த நிலையில், நேற்று தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தருமபுரி-1மி.மீ, பாலக்கோடு-8, மாரண்டஅள்ளி-8, பென்னாகரம்-3, ஒகேனக்கல்-2 என மாவட்டத்தில் மொத்தம் 22. 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மேலும் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை மாறியதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    மேலும் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்துள்ள விவசாயிகள் மழை இன்றி தவித்து நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்ததால் விவசாயிகளும் தங்களது விவசாய பணிகளை தொடங்குவதற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் குளிர்ந்த காற்று வீச மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக பெய்ய தொடங்கிய இந்த விடிய விடிய பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணகிரியில் உள்ள பஸ் நிலையம், லண்டன் பேட்டை, முல்லை நகர், சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.

    இதேபோன்று கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.ஆர்.பி டேம் பகுதியிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி, பாரூர், தேன்கனிக்கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை, சூளகிரி, தளி, சின்னார் அணை, கெலவரப்பள்ளி அணை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் வருமாறு:

    அஞ்செட்டி-3, பாரூர்-6.8, தேன்கனிக்கோட்டை-5.0, ஓசூர்-30.1, கிருஷ்ணகிரி-44, ராயக்கோட்டை-13, சூளகிரி-18, தளி-10, சின்னார் அணை-16, கெலவரப்பள்ளி அணை-37, கே.ஆர்.பி அணை-62.4 என மாவட்டம் முழுவதும் மொத்தம்-245.3 மிமீ பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து வர தொடங்கியது. மேலும், கனமழை காரணமாக கே.ஆர்.பி. அணை மற்றும் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிரிக்க தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலுக்காக அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிரி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் கிரி எந்தவிதமான உணர்வு இல்லாமல் இருந்ததால் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சூரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகரசன். இவரது மகன் கிரி (22). இவர் அரசு ஐ.டி.ஐ முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

    இவர் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலுக்காக அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து நேற்று காலை வீடு திரும்பியுள்ளார். மீண்டும் அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இன்று மாலை ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த போது இளைஞர் கிரிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

    சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் இளைஞர் கிரி எந்தவிதமான உணர்வு இல்லாமல் இருந்ததால் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

    பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் அளித்துள்ளனர். மர்ம காய்ச்சலால் ஐடிஐ மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது .
    • மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து மதுபா னங்களை பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்–டத்தில் உள்ள தருமபுரி, அரூர், பென்னாகரம், உள்ளிட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் போலீசார் சோதனை செய்ததில் 13 பேர் அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது .

    இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • மின் வாரிய அலுவலகத்திற்கு செல்வதற்காக -கடத்தூர் சாலையில் சென்றனர்.
    • முன் பக்க டயர் திடீரென வெடித்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரைகோட்டை பாத்திமா நகரை சேர்ந்த வர்கள் பிண்டோ (வயது 50), ஆரோக்கிய தாஸ் (60), அந்தோணி(60 ) இவர்கள் 3 பேரும் கூலி வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் இவர்கள் கடத்தூர் மின் வாரிய அலுவலகத்திற்கு செல்வதற்காக அந்தோணி க்கு சொந்தமான பைக்கில் தென்கரைகோட்ட்டை -கடத்தூர் சாலையில் சென்றனர். பிண்டோ, அந் தோணி பைக்கில் பின்னால் உட்கார்ந்து கொள்ள, ஆரோக்கியதாஸ் பைக்கை ஓட்டி சென்றார்.

    இருசக்கர வாகனம் புட்டிரெட்டிப்பட்டி ரோட்டில் செல்லும் போது பைக்கின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் பைக்கில் இருந்தவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    ×