என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • தருமபுரி மாவட்டத்தில் சிறுதானிய பயிர் சாகுபடி விழிப்புணர்வு பிரச்சாரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பிரசார வாகனங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள 5 நாட்களுக்கு ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஒரு உதவி வேளாண்மை அலுவலருடன் செல்லும்

    உலக சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் - ஊட்டமிகு சிறுதானியங்கள் திட்டத்தின் சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு பிரசார ஊர்தி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரத்திற்கும் சென்று பிரசாரம் செய்ய நான்கு பிரசார ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

    சிறுதானிய பயிர்சாகுபடி பிரச்சார ஊர்தியின் மூலம் தருமபுரி வட்டாரத்தில் 11-ம் தேதி முதல் 13 -ம் தேதி வரையிலும், நல்லம்பள்ளி வட்டாரத்தில் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையிலும், பென்னாகரம் வட்டாரத்தில் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையிலும், பாலக்கோடு வட்டாரத்தில் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையிலும், காரிமங்கலத்தில் வட்டாரத்தில் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும், மொரப்பூர் வட்டாரத்தில் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரையிலும், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டா ரத்தில் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலும், அரூர் வட்டாரத்தில் 8-ம்தேதி முதல் 10-ம் தேதி வரையிலும் சிறுதானிய பயிர்சாகுபடி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொ ள்ளப்பட உள்ளது.

    இந்த பிரசார வாகனங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள 5 நாட்களுக்கு ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஒரு உதவி வேளாண்மை அலுவலருடன் சென்று சிறுதானியம் சாகுபடி செய்யும் முறை, சிறுதானியத்தின் பயன்கள், அதில் உள்ள சத்துக்கள், ஊட்டச்சத்து மேலாண்மை, நோய் மேலாண்மை, அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி பற்றி விளக்கமாக விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் மேற்கொள்ளும். இந்நி கழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) குணசேகரன், வேளாண்மை துணை இயக்குநர் அருள்வடிவு, தருமபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் விவசா யிகள் கலந்துகொண்டனர்.

    • உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிலர் அரூரில் உள்ள சேலம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சூரம்பட்டியைச் சேர்ந்த அழகரசன் மகன் கிரி மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.

    அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரிகளின் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் சிலர் அரூரில் உள்ள சேலம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட கிரியின் உறவினர்களான சூரம்பட்டியைச் சேர்ந்த சம்பத், அரசு, அழகு, குமார், ரமேஷ், அழகேசன், கண்ணையன், வினோத் குமார், தாமோதரன், சீனிவாசன் மற்றும் ஜடையம்பட்டியைச் சேர்ந்த ரவி உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலை மறியலின் போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • தகவலறிந்த வட்டாட்சியர் பெருமாள் இறந்து போன கிரியின் தந்தை மற்றும் உறவினர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சூரப்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகரசன் மகன் கிரி (வயது22) என்பவர் கடந்த சிலதினங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை அவர் சிகிச்சைக்கு வந்தபோது உடல் நலிவுற்று இருந்ததை பார்த்து தனியார் மருத்துவமனை டாக்டர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தார்.

    உடனே கிரியை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, அங்கு கிரியை பரிசோதனை செய்த போது இறந்து விட்டதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து உறவினர்கள் கிரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியும் தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உடலை வாங்க மறுத்து அரூரில் உள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் ஆகாததால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சாலை மறியலின் போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்த வட்டாட்சியர் பெருமாள் இறந்து போன கிரியின் தந்தை மற்றும் உறவினர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தைக்கு பிறகு கிரியின் இறப்பிற்கு மருத்துவர்கள் தான் காரணம் என தெரிய வந்ததால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததார்.

    இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கிரியின் தந்தை அழகரசன் கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீசார் கிரிக்கு சிகிச்சை அளித்த 2 தனியார் மருத்துவமனையின் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வக்கீல்கள் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்–றத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இ பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    தருமபுரி,  

    தருமபுரி வழக்கறிஞர்கள் பார் அசோசியேஷன் சார்பில் இன்று வக்கீல்கள் ஒரு நாள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்–டத்தில் ஈடுபட்டனர். கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை கட்டாய–மாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்க கோரி தருமபுரி வழக்கிறஞர்கள் பார் அசோசியேஷன் சார்பில் வக்கீல்கள் இன்று ஒரு நாள் கோர்ட்டை புறக்கணித்தனர். இதைத்தொடர்ந்து தருமபுரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் வக்கீல்கள் தடங்கம் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்–றத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    இதேபோன்று பென்னா–கரம் வழக்கறி–ஞர்கள் சங்கம் சார்பில் கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை கட்டாய மாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பென்னாகரம் வழக்கறி–ஞர்கள் சங்கத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார், மூத்த வழக்க–றிஞர் அசோகன் முன்னிலை வகித்தார்.

    இதில் கீழமை நீதிமன்றங் களில் இ-பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    இதில் பென்னாகரம் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் மாதையன், ஜானகிராமன், முன்னாள் துணை தலைவர் வேலு மற்றும் வழக்கறிஞர்கள், சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், சரவணன், தமிழரசன், நூலகர் வெங்கடேசன் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் வீராசாமி நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

    • தருமபுரி கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 6250 ஏக்கர் புன்செய் நிலங்கள் இந்நீர் திறப்பின் மூலம் பயனடைகின்றன.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டின் இடது மற்றும் வலது புற கால்வாயிகளில் பாசனத்திற்க்காக 6250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இன்று முதல் 120 நாட்கள் அல்லது ஆற்றில் தண்ணீர் வரத்து இருக்கும் வரை தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடது புற வாய்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

    ஈச்சம்பாடி அணை க்கட்டில் தற்போது உள்ள நீரின் அளவு, நீர் வரத்தை கருத்தில் கொண்டு வினாடிக்கு 70 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

     ஈச்சம்பாடி அணைக்கட்டின் இடதுபுற கால்வாய் மூலமாக 3250 ஏக்கர் நிலங்களும், வலதுபுற கால்வாய் மூலமாக 3000 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 6250 ஏக்கர் புன்செய் நிலங்கள் இந்நீர் திறப்பின் மூலம் பயனடைகின்றன. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள காரிமங்கலம், அரூர் மற்றும் ஊத்தங்கரை வட்டங்களில் உள்ள 32 கிராமங்கள் பயனடைகின்றன.

    ஈச்சம்பாடி அணைக்கட்டில் தற்போது உள்ள நீரின் அளவைக் கொண்டு விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் யசோதா, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் கு மார், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திரு.பிரபு, ஈச்சம்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி, விவசாய பெருமக்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மர்ம நபர்கள் 2 பேர் ராம ஜெயத்தை வழிமறித்து வாகனத்தை நிறுத்தினர்.
    • மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை முகத்தின் மீது தூவினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 67). விவசாயி. இவர் நேற்று மாலை அவரது நிலத்திலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சனத்குமார் ஆற்றின் அருகே சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் 2 பேர் ராம ஜெயத்தை வழிமறித்து வாகனத்தை நிறுத்தினர்.

    அப்போது துணிப்பை யில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை ராம ஜெயத்தின் முகத்தின் மீது தூவினர். பின்னர் அவர் எரிச்சலால் கத்தினார். பின்னர் பிளக்ஸ் பேஸ்டால் அவரது வாயை ஒட்டினர்.

    இதனையடுத்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு 2 பேரும் தப்பி ஓடினர்.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து ராமஜெயம் கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மகேஸ்வரி உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து உடனே ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    தருமபுரி,  

     தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்ைட அருகே உள்ள வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது58). விவசாயியான இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் நேற்று மாலை தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது ராஜா மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து அவர் மீதும், அவரது மனைவி மகேஸ்வரி மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து உடனே ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.

    அதன்பின்னர் ராஜா விடம் போலீசார் விசா ரணை நடத்தியதில், அவ ருக்கு சொந்தமான நிலத்தை உறவினர் ஒருவர் அபகரிக்க முயற்சி செய்கிறார் என்றும், இதுகுறித்து ராஜா போலீசாரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எநத வித நடவடிக்கையும் எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து ராஜா கொடுக்கும் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து ராஜா தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தனது சொத்தை அபகரிக்க முயற்சி செய்யும் உறவினர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நேரத்தில் கணவன்-மனைவி இரு வரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பள்ளி நிர்வாக இயக்குநர்கள் தபால் அலுவல கத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.
    • சாரதி மகாலிங்கம் மாணவர்களின் செயல்முறைகளைப் பாராட்டினார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் தேசிய தபால் தினம் அனுசரிக்கப்பட்டது. உண்மையான தபால் நிலையம் போல் ஒரு வகுப்பறை மாற்றப்பட்டு மாணவர்களை தபால் நிலைய ஊழியர்கள் போல் நியமித்து தபால் அலுவலகத்தின் செயல்பாடு கள் விளக்கப்பட்டது.

    இதில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஒரு அஞ்சல் அட்டை கொடுக்கப்பட்டு விருப்பம் உள்ளவர்களுக்கு கடிதம் எழுதி தபால் பெட்டியில் போடுமாறு அறிவுறுத்தப் பட்டது. இவ்விழாவினை பள்ளி யின் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் தலைமையேற்று தொடங்கி வைத்தனர்.

    பள்ளி நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி மற்றும் பவானி தமிழ்மணி மாதிரி தபால் அலுவல கத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டனர். முதல்வர் சாரதி மகாலிங்கம் மாணவர்களின் செயல்முறைகளைப் பாராட்டினார். இவ்விழாவினை ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி மற்றும் பள்ளி ஆசிரியர்களாகிய சதீஸ், முத்துச்செல்வி, சேனு, விக்னேஷ், ஆகாஷ் ஆகியோரின் உதவியோடு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

    • பஸ்கள் மற்றும் வேன்கள் சம்பந்த ப்பட்ட கிராமத்திலேயே நிறுத்த படுகிறது.
    • வாகனங்களில் டீசல் திருட்டு தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    தருமபுரி,  

     தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி-கல்லூரி வாகனங்களில் இரவு நேரத்தில் டீசல் திருடும் மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

     தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்களின் மூலம் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பஸ்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க படுகிறது.

    பெரும்பாலான வாக னங்கள் அந்தந்த கல்வி நிறுவனங்களில் இருந்து காலை நேரத்தில் புறப்பட்டு மாணவ, மாணவிகளை அழைத்து வருகிறது. மீண்டும் மாலை நேரத்தில் மாணவ, மாணவிகளை அவரவர்களின் சொந்த ஊரில் விட்டு விட்டு மீண்டும் அந்தந்த கல்வி நிறுவ னங்களுக்கு வாகனங்கள் திரும்பி வந்து விடுகிறது. இந்தக் கல்வி நிறுவனங்களின் மூலம் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்காக ஒரு சில பஸ்கள் மற்றும் வேன்கள் சம்பந்த ப்பட்ட கிராமத்திலேயே நிறுத்த படுகிறது.

    காலை நேரத்தில் அந்த வாக னங்கள் கிராமப்பு றங்களில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு சென்று விட்டு மீண்டும் மாலை அதே கிராமங்களுக்கு திரும்பி சென்று இரவு நேரங்களில் அந்தந்த கிராமங்களில் வாக னங்கள் நிறுத்தப்படுகிறது.

     இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கிராமப்புறங்களில் நிறுத்தப்படும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் இருந்து இரவு நேரத்தில் ஒரு மர்ம கும்பல் டீசல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திருடு போவது குறித்து சம்பந்த ப்பட்ட வாக னங்களின் டிரைவர்கள் அந்தந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த 2 மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்துதான் டீசல் திருட்டு தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    பள்ளி, கல்லூரி வாகனங்களில் அடிக்கடி டீசல் திருட்டு போவதால் கிராமப்புறங்களில் இருந்து மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த தொடர் சம்ப வங்களால அதிர்ச்சிக்கு ள்ளான தனியார் பள்ளி-கல்லூரி நிர்வாகிகள் சம்பந்த ப்பட்ட வாகனங்களின் டிரை வர்கள் மூலம் அந்தந்த போலீஸ் நிலையங்களில் இரவு நேரங்களில் டீசல் திருட்டு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் டீசல் திருட்டு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் டீசல் திருட்டு குறித்து அந்தந்த போலீஸ் நிலையங்கள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்குகளில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்.
    • பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    தருமபுரி, 

     தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது, இதில் காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் இரு , நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் காவல் நிலையங்களில் பெண்க ளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் போலீசா ருக்கு வழங்கப்பட்ட வாக னங்களை தருமபுரி மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் பார்வையிட்டு, அந்த வானங்கள் சரியான முறையில் பராம ரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யும் குற்ற வழக்குகளின் தற்போதைய நிலை மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டரிந்தார்.

    கைது செய்யக்கூடிய வழக்குகளில் இன்னும் குற்றவாளிகளின் பிடிக்காத வழக்குகளை விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள் கைது செய்யவேண்டும். மேலும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கவனம் செலுத்தி விரைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    தருமபுரி மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றிட அனைவரும் அதற்கான முயற்சியில் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஏ.எஸ்பி இளங்கோவன், பாலசுப்பிரமணியம் மற்றும் டி.எஸ்.பிக்கள் ஜெயபால், மகாலட்சுமி, சிந்து, ரமேஷ், சத்தியமூர்த்தி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • கிரிக்கெட் வீரர்கள் கொண்ட பொம்மைகள் அனை வரையும் கவர்ந்துள்ளது.

    தருமபுரி,

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விஜயதசமி கல்வியின் வடிவமாக கருதும் கலைவாணியின் விழாவாக அதனை கொண்டாடி வருகிறோம். விஜயதசமியை முன்னிட்டு ஒன்பது நாள் வீட்டில் கொலு பொம்மை வைத்து பூஜை செய்வர். வீடுகளில் வைக்கப்படும் கொலு பொம்மை பூஜையில், விஷ்ணுவின் தசாவதார காட்சிகள், அஷ்டலட்சுமி, சீனிவாச கல்யாணம், குசேலர் பொம்மைகள், சீதா ராமர் கல்யாணம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவை இடம் பெற்றிருக்கும்.

    இந்தாண்டுக்கான நவராத்திரி சில தினங்களுக்குள் தொடங்க உள்ளது. அதை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக தருமபுரி அடுத்துள்ள அதியமான ்கோட்டையில் விநாயகர் சதூர்த்திக்கு பிறகு நவராத்திரி கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பல்வேறு வடிவங்களில், களி மண்ணை கொண்டு கொலு பொம்மைகளாக அச்சுகளில் வடிவமைத்து அதனை காய வைத்து பின் தீயில் சுட்டு அழகு படுத்தும் பணிகளில் இறங்கி விடுகின்றனர். குறிப்பிட்ட அளவிலான நவராத்திரி பொம்மை செட்களை செய்து முடித்து குடோன்களில் அடுக்கி வைத்துள்ளனர்.

    தற்போது பணியாளர்கள் 2-ம் கட்ட கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதியமான்கோட்டை பகுதியில் தயார் செய்யபடும் கொலு பொம்மைகளை வாங்குவதில், தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலமான கர்நாடக மாநில வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    குறிப்பாக தமிழகத்தில் ஈரோடு, சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் கொலு பொம்மைகளை சென்ற மாதமே ஆர்டர் செய்துள்ளனர். ஆர்டரின் பெயரில் தற்போது கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தற்போது உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதனை ஈர்க்கும் வகையில் வீரர்கள், அம்பையர்களை கொண்ட குழு கொண்ட கொலு பொம்மைகள் அனை வரையும் கவர்ந்துள்ளது.

    இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும் போது:-

    மண்பாண்ட தொழில் நாளுக்கு நாள் அழிந்து வரும் நிலையில் தங்கள் குலத்தொழிலை கைவிடாமல் இன்றும் இங்கு 50 குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலை செய்து வருகிறோம். களிமண் எடுக்க கடும் கட்டுபாடு விதிக்கப்பட்டி ருக்கும் நிலையில் அதிக பணம் கொடுத்து களிமண் வாங்கி வந்து சிலைகளை செய்கிறோம். இந்தாண்டு நவராத்திரியை முன்னிட்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இளைஞர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில் கிரிக்கெட் வீரர்கள் கொண்ட பொம்மைகள் அனை வரையும் கவர்ந்துள்ளது. ஆனால் தற்போது சீன பொம்மைகள், வடமாநி லத்தவர்கள் தமிழத்தில் வந்து மக்களை கவரும் வகையில் ரசாயணம் கலந்த சிலைகளை செய்கின்றனர். இது பொது மக்களை கவர்ந்தாலும் இது சுற்றுசூழலை கெடுக்கும் வகையில் உள்ளது.

    இது போன்று இறக்குமதி செய்யப்பட்ட சிலைகளால் தங்கள் தொழில் மேலும் நலிவடைந்து வருகிறது. இதனால் தமிழக அரசுக்கு சொந்தமான பூம்புகார் விற்பனை நிலையம், காதிகிராப்ட் மற்றும் அரசு விழாக்களில் நடைபெறும் பலத்துறை கண்காட்சி சிலைகளை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்பாண்ட தொழிலா ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
    • மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், ஒகேனக்கல், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.

    இதைத்தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, சித்தேரி, பள்ளிப்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2-வது நாளாக நேற்று மதியம் 2 மணி முதல் காற்றுடன் கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

    இதனால் பல்வேறு இடங்களில் வாழை, முருங்கை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் முறிந்தன. இந்த மழையால் சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீா் தேங்கியது.

    கனமழையால் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது.

    வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 5-வது வார்டு பகுதியில் உள்ள அண்ணா நகரில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். இதேபோன்று ஒகேனக்கல் பகுதிகளில் 2-வது நாளாக நேற்று பரவலாக மழை பெய்தது. தருமபுரி நகரில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்ததால், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை குளிர்ந்த காற்று வீச தொடங்கி யவுடன் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் மீண்டும் சாரல் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    மாவட்டத்தில் 2 தினங்களாக பரவலாக மழை பெய்ததால், ஆங்காங்கே உள்ள ஏரி, குளம், குட்டைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×