அரூரில் மர்ம காய்ச்சலுக்கு மாணவர் பலி- மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மீதும் வழக்கு பதிவு

உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிலர் அரூரில் உள்ள சேலம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூரில் மர்ம காய்ச்சலுக்கு மாணவர் பலி-  மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மீதும் வழக்கு பதிவு
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சூரம்பட்டியைச் சேர்ந்த அழகரசன் மகன் கிரி மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.

அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரிகளின் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் சிலர் அரூரில் உள்ள சேலம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கிரியின் உறவினர்களான சூரம்பட்டியைச் சேர்ந்த சம்பத், அரசு, அழகு, குமார், ரமேஷ், அழகேசன், கண்ணையன், வினோத் குமார், தாமோதரன், சீனிவாசன் மற்றும் ஜடையம்பட்டியைச் சேர்ந்த ரவி உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com