என் மலர்
தர்மபுரி
- பென்னாகரத்தில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய 6 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- 31 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் விற்பனைக்காக பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்த 6 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, 31 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்தனர்.
திடீர் ஆய்வு
பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் , கடைவீதி முள்ளுவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழக்கடைகள், காலணிகள் கடை, போக்கிரி கடை, உணவகம், பூக்கடை, மளிகை கடை , சாலையோரக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடை களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் நித்தியலட்சுமி தலைமையில் உதவி பொறியாளர் லாவண்யா, அதிகாரிகள் தங்கதுரை, வேதமூர்த்தி, பேரூராட்சி இளநிலை உதவியாளர் சின்னசாமி, துப்பு ரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அபராதம் விதிப்பு
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், நெகிழி கலந்த வாழை இலை, பிளாஸ்டிக் கத்திகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்திய கடை உரிமையாளர்கள் 6 பேருக்கு ரூ.1800 அபராதம் விதித்தும், 31 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விழிப்புணர்வு
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறறும் கடை உரிமையாளரிடம் நெகிழிப் பொருட்க ளின் பயன்பா டுகள் மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சள் பைகளை வழங்கினர்.
- பேளாரள்ளி அரசு பள்ளியில் புகையிலை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
- அயோடின் சத்து அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தருமபுரி கலெக்டர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா வழிகாட்டுதல் படி உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பேளாரள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி யில், மாணவ மாணவர்க ளிடையே உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பொருள் பாக்கெட்டுகள், தின்பண்டங்கள் உள்ளிட்ட வைகளின் லேபிள்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வுடன், புகையிலை பொருட்களால் ஏற்படும் நோய்கள் குறித்தும் அதனை தவிர்த்தல், தடுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பள்ளி ஆசிரியர்கள் முத்துசாமி, வேலுசாமி மற்றும் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தார். காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் , உணவு பொருள் பாக்கெட்டுகள் மற்றும் தின்பண்ட, குளிர்பான பாக்கெட்களில் காண வேண்டிய அம்சங்களான பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். என்று உணவு பொருள் பாக்கெட்டுகள் கொண்டு விழிப்புணர்வு செய்தார். அயோடின் உப்பு குறித்தும் அயோடின் சத்து அவசியம் குறித்து விளக்க உரையாற்றினார்.
மேலும் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் உபயோகிப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மாணவர்கள் அதனை கண்டிப்பாக தவிர்த்தல், தடுத்தல் அவசியம் என்றதுடன் விற்பனை செய்வதை கண்டால் ஆசிரியர்களுக்கு தகவல் அளித்தால், உணவு பாதுகாப்புத் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழிப்புணர்வு செய்தார் . புகையிலைப் பொருட்கள் தடுப்பு சார்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் பாபு சுந்தரம் மற்றும் ஆசிரியை யாழினி செய்திருந்தனர். பள்ளி தமிழ் ஆசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்.
- நல்லம்பள்ளியில் பட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
- ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்
தருமபுரி மாவட்டம், பாட்டாளி மக்கள் கட்சி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்தின் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் தலைமையில் பி.அக்ரகாரம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர் செல்வம், ஒன்றிய தேர்தல் பணிக்குழு தலைவர் மாதையன், ஒன்றிய தலைவர் பூ.விஜியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் ப.வீரமணி அனைவரையும் வரவேற்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.
மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாவட்ட தலைவர் மு.செல்வகுமார், நிர்வாகிகள் உள்ளிட்ட ஒன்றியத்தின் அணி, துணை, கிளை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தின் இறுதியில் ஒன்றிய பொருளாளர் சாந்தி வெங்கடேஷ் நன்றி கூறினார்.
ஒன்றியத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் கிளை கூட்டம், திண்ணைப் பரப்புரை மேற்கொள்ளுவது, தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டம் செயல்ப டுத்துதல், வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு விரைந்து வழங்குதல், அனைத்து கிராமங்களுக்கும் பாதுகா க்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு க்குடிநீர் வசதி ஏற்படுத்துதல், கோணங்கிஅள்ளி ஊராட்சி, பி.அக்ரகா ரத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவிலுக்கு பல்நோக்கு சமுதாய கூடம் அமைத்தல், எர்ரபை யனஅள்ளி ஊராட்சி, நெக்குந்தி கிரா மத்தில் மத்திய அரசின் இராணுவ ஆராய்ச்சி மையம் திட்டத்தை விரைந்து நிறைவேற்றுதல், எச்ச னஅள்ளி ஊராட்சி யில் கால்நடை மருத்துவ மனை அமைத்தல் போன்றவை குறித்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தருமபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் ரூ.12.36 லட்சத்துக்கு விற்பனை ஆனாது.
- கிலோ ரூ.240 க்கும், அதிகபட்சமாக ரூ.463-க்கும், சராசரியாக 384 ரூபாய் என ஏலம் போனது
தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநா தபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.
தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு வாரம் பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து ரூ.3 மற்றும் 5 லட்சத்திற்கு விற்பனையானது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், 40 விவசாயிகள் கொண்டு வந்த 3214 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.12.36 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் குறைந்தபட்சம் கிலோ ரூ.240 க்கும், அதிகபட்சமாக ரூ.463-க்கும், சராசரியாக 384 ரூபாய் என ஏலம் போனது. மேலும் கடந்த இரண்டு வாரத்தில் பட்டுக்கூடு வரத்தும், விலையும் குறைந்து 3 மற்றும் 5 லட்சத்திற்கு விற்பனையானது.
ஆனால் நேற்று பட்டுக்கூடு வரத்து அதிகரித்து 3214 கிலோ வெண் பட்டுக்கூடுகள் 12.36 இலட்சத்திற்கு விற்பனையானது. இதனால் பட்டுக்மேகூடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- பாலக்கோடு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
- பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்
பேளாரஅள்ளி ஊராட்சியில் எம்.ஜி.என்.ஆர். இ. ஜி. எஸ். திட்டத்தின் கீழ் ரூ.25.99 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.17.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உணவு தானிய கிடங்கி னையும், கணபதி ஊராட்சி கன்சால்பெயில் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.267.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் அமைக்கும் பணி, கேசர்குளி அணை இலங்கை வாழ் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.400 லட்சம் வீடுகள் கட்டும் பணி மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் மதிப்பீட்டில் 80 வீடுகள் பணிகளையும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் கட்டப்பாட்டின் கீழ் பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் முதன்மை பதப்படுத்தும் மையத்தை மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பணிகளை தர மாகவும், விரைந்து முடித்திட வேண்டு மெனவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து, கணபதி ஊராட்சி கரிகுட்டனூர் கிராமத்தில் இருளர் வாழும் பகுதிகளை பார்வையிட்டு அவர்களுக்கு வீடுகள் வழங்கிட தகுதியான இடத்தினை தேர்வு செய்து வழங்கிட வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பாலக்கோடு வட்டம் பெல்ரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயா ளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, பழங்குடியினர் நல அலுவலர்.பி.எஸ்.கண்ணன், பாலக்கோடு வட்டாட்சியர் ராஜா, பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் உட்பட தொடர்புடைய அலு வலர்கள் உடனிருந்தனர்.
- குடும்ப தகராறில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் விசாரணை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா வேப்பில அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் .இவரது மனைவி சீதா (வயது 42). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு 1 மகள் 3 மகன்கள் உள்ளனர்.
இவர் மகள் வித்யாவை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த கடவர அள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசாமி மகன் சக்திவேல் (26) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் சக்திவேல் மனைவி வித்யா பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார். இவர் மேலும் படிக்க வேண்டும் என்று கணவரிடம் கேட்டபோது அதற்கு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த வித்யா கடந்த மாதம் 20-ம் தேதி கோபித்துக் கொண்டு வேப்பில அள்ளியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இருந்து வந்த அவர் கடந்த 22-ம் தேதி விஷம் குடித்து விட்டதாக தன் தாய் சீதாவிடம் கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வித்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மகேந்தி ரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல் தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி தாலுகா கேத்தி ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி (46). இவருக்கு திருமணம் ஆகி 3 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது 2-வது மகள் முருகம்மாள் (22) என்பவருக்கு 10 மாதங்களுக்கு முன்பு நைனா கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் அசோக் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். அவ்வப்போது மாமியார்-மருமகள் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த முருகம்மாள் கடந்த 4-ம் தேதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மொரப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தருமபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் தருமபுரி நகராட்சி நடுநிலைப்பள்ளி சந்தைப்பேட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வரும் 1-ம் தேதி நகராட்சி தொடக்கப்பள்ளி டவுனில் நடைபெறும் மருத்துவ முகாமில், அனைத்து மாற்றுத் திறனாளி மாணவர்களும் கலந்து கொண்டு அடையாள அட்டை பெறுதல், உபகர ணங்களுக்கு அளவிடுதல், உதவித்தொகை பெறுதல், சிறப்பு பயிற்சிகள் அளித்தல் ஆகியன பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இதில் பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.பேரணியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கி ணைப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
இதில் அனைத்து சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் ரகுபதி, வனிதா, சாரதா, ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தரும்புரி அருகே மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை,பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார்.
- தொடரும் சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி சின்னகண்ணு(70) இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் வேறு வேறு இடங்களில் தனித்தனியே இருந்து வருகின்றனர். கணவன் இல்லாத நிலையில் மூதாட்டி மட்டும் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு 9 ந்தேதி ரேசன் கடைக்கு சென்றிருந்த மூதாட்டி சின்னகண்ணுவை சந்தித்த மர்ம நபர் ஒருவர் உறவினர் என கூறிக்கொண்டு மூதாட்டியிடம், நிலம் சம்மந்தமான வேலையாக ஊருக்கு வந்திருப்பதாகவும், பசிக்கிறது சாப்பிட எதாவது கொடுங்கள் என கூறியுள்ளார். இதனை நம்பி ரேசன் கடையிலிருந்து மூதாட்டி சின்னகண்ணு தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அந்த நபர் மூதாட்டியிடம் நைசாக பேசி மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதனை வாங்கி குடித்த மூதாட்டி மயக்கம் அடைந்துள்ளார்.. இதனையடுத்து மூதாட்டி அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்க நகைகள், வீட்டிலிருந்த பணத்தையும் சுருட்டி கொண்டு மயங்கி கிடந்த மூதாட்டியை வீட்டிற்குள்ளயே படுக்க வைத்து விட்டு வீட்டின் கதவினை வெளிபக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு அங்கிருந்து அந்த நபர் சென்று விட்டார். அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது மயங்கி கிடப்பதை அறிந்து உறவினர்களுக்கு தகவல் அளித்து அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
இது குறித்து சின்னகண்ணுவின் மகன் ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில், பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பாப்பாரப்பட்டியில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரது வீட்டில், தனியாக இருந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த ஆப்பிள் பழத்தை சாப்பிட வைத்து, 40 பவுன் நகைகளை காரில் வந்த பெண் ஒருவர் கொள்ளையடித்து சென்றார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,தனியாக வசித்து வரும் மூதாட்டியியை நோட்டமிட்டு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்து நகை, பணத்தை கொள்ளையடித்திருக்கின்ற சம்பவம் பாப்பாரப்பட்டி பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தருமபுரி அருகே மார்க்சிஸட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
- பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிக்கிலி பஞ்சாயத்தில் 100 நாள் வேலை மற்றும் இலவச வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றில் நடந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கொல்லப்பட்டியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் சின்னசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராதிகா அன்பரசு முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விசுவநாதன், பகுதி குழு செயலாளர் சின்னசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பஞ்சாயத்தில் நடைபெறும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் நிதி முறைகேடு, நூறுநாள் வேலைத்திட்ட பெண் தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துவது , பிரதமர் இலவச வீடு திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஈடுபடுவது, வெட்டாத பண்ணைக்குட்டைக்கு பணம் எடுத்தது உள்ளிட்டவை குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, அங்கன்வாடி கட்டிடம், வெள்ளத்தால் சேதமடைந்த ஆற்றுப் பாலத்தை சீரமைத்தல் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பகுதி குழு உறுப்பினர்கள் சின்னராஜ், சிலம்பரசன், செல்வராஜ், வேலாயுதம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சண்முகம் நன்றி கூறினார்.
- கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
- பாக்குத் தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு முள்ளிக்காடு பகுதியில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோட்டம் உள்ளது. இங்கு கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் பாக்குதோட்டத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போது பாக்கு தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை துரத்தி சென்று விரட்டி மடிக்கி பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முள்ளிக்காடு பகுதியை சேர்ந்த மாதையன் (44), சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள சின்னமாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (38), ஏற்காடு அடுத்த மாரமங்கலம் அருகே உள்ள குட்டமாத்திக்காடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (23), என்பது தெரியவந்தது.
இதனையடுத்து கிணற்றின் அருகே இருந்த 300 லிட்டர் சாரய ஊறல் மற்றும் காய்ச்சி விற்பனைக்கு வைத்திருந்த 15 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கீழே ஊற்றி அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 3 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது.
- சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழ்நாடு முழுவதும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது.
நேற்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், மாலை தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, அரூர், தீர்த்தமலை, பொய்யப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து திடீரென மழை பொழிந்ததால், விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
- அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 7000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்றைய நிலவரப்படி 9500 கன அதிகரித்தது தொடர்ந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி, 8,500 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.
தற்போதைய நிலவரப்படி மீண்டும் பத்தாயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி ஆகிய இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.






