என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • தருமபுரி மாவட்டத்தில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • குண்டுமல்லி கிலோ ரூ. 450க்கு விற்பனை

    தருமபுரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பாரம்ப ரியமாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். அதில் முக்கியமாக குண்டுமல்லி, ஜாதிமல்லி, சன்னமல்லி, சம்பங்கி, சாமந்தி, கோழிக்கொண்டை, அரளி,பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ், ஆகிய மலர்களை விவசாயிகள் விளைவிக்கின்றனர்.

    மாவட்டத்தில் விளையும் பூக்களுக்கென்று தனி மவுசு உள்ளதால் இங்கு விளையும் பூக்கள் மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தினசரி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பல மாவட்டங்களுக்கும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

    இந்த நிலையில் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாத முக்கிய சனிக்கிழமை பண்டிகை நாட்களில் கூட விலையேற்றம் இல்லாமல் மாலைகளுக்கு பயன்படுத்தும் சம்பங்கி, சாமந்தி, பூக்கள் படுவீழ்ச்சி அடைந்து கிலோ 5 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பூப்பறிக்கும் கூலி கிடைக்கவில்லை என விவசாய கூலியட்கள் வேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில் திடீரென பூக்கள் விலை உயர்ந்துள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ. 450, சன்னமல்லி ரூ. 350, ஜாதி மல்லி கிலோ ரூ. 260 காக்கட்டா கிலோ ரூ. 280 சம்பங்கி கிலோ ரூ. 50 சாமந்தி கிலோ ரூ. 60, அரளி கிலோ ரூ. 100, பன்னீர் ரோஸ் கிலோ ரூ. 50 என இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பென்னாகரம் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் சாலையோரம் கொட்டி அழித்தனர்.
    • கிலோ ஒன்று ரூ.14 வரை விற்பனையானது.

    நாடு முழுவதும் தக்காளி விலையின் உயர்வு அதிகரித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் ரூ.200 முதல் ரூ.300 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையானது. இதனை ெதாடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை சரிய தொடங்கி தற்போது கிலோ ஒன்று ரூ.15 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    தக்காளி விளைப்பதில் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், இருமத்தூர், கம்பைநல்லூர், நல்லம்பள்ளி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தக்காளியின் விலை உயர்வு மாற்றத்தை கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்ட விவசாயிகள் தக்காளி விளைச்சலில் அதிகளவில் ஈடுபட்டனர். இதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தக்காளி விதைகளை மான்ய விலையில் வேளாண் துறையில் வாங்கி பயிரிட்டு பராமரித்து வந்தனர்.

    கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம் ஆகிய பகுதி களில் விவசாயிகள் பயிரி டப்பட்ட தக்காளி நல்ல விளைச்சல் கொடுத்தது. அதனை விவசாயிகள் சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு விற்ப னைக்கு கொண்டு சென்ற னர். அங்கு பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளி ஒரே கூடை ரூ.200 வரை மொத்த வியாபாரிகள் விலை கேட்டதாக தெரிகிறது. மேலும், சில்லரை விற்பனைக்கு கிலோ ஒன்று ரூ.14 வரை விற்பனையானது.

    குறைவான விலைக்கு தக்காளிகளை கொடுப்ப தால், வண்டி வாடகைக்கு கூட கட்டுப்படியாகததால், பென்னாகரம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த தக்காளிகளை சாலையோரம் கொட்டி அழித்து வருகின்றனர். இதேபோன்று தருமபுரி-பென்னாகரம் சாலையில் உள்ள பிளியானூர் பகுதியில் விவசாயிகள் தக்காளிகளை அழுக்கும் படி செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    உரிய விலை கிடைக்கா ததால், விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்த தக்காளிகளை குறைந்த விலைக்கு கொடுக்க மன இல்லாமல் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அரூர் அருகே பழைய ரோட்டின் மீது புதிய ரோடு அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    தருமபுரி-திருவண்ணா மலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி-அரூர் (மொரப்பூர் வழி) சாலை வரை இருவழிப்பாதையிலிருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ரூ.96.50 கோடியில் அரூர் வழி தாணிப்பாடி-திருவண்ணாமலை சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    தருமபுரி-திருவண்ணா மலை 113 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரம் இந்த சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்காக ஏற்கெனவே தருமபுாி,கோபிநாதம்பட்டி, செம்மண்அள்ளி, மொரப்பூர் பகுதிகளில் மரங்கள் அகற்றப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இதில் தற்போது சாலையின் அகலம் 7 மீட்டராக உள்ளது. இது 16.20 மீட்டர் அகலமுள்ள 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு. இச்சாலையில் தருமபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலையில் 70 சிறுபாலங்கள் கட்டப்பட்டு சாலை அமைக்கும் முடி ஒரு முடிவு பெறும் நிலையில் உள்ளது.

    நான்கு வழி சாலைகளை தரமான சாலையாக அமைக்க தமிழ்நாடு அரசு மூலமாக ஒப்பந்தங்கள் விடப்பட்டு எட்டு ஒப்பந்ததாரர்கள் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் பழைய தார்சாலையை அகற்றாமல் பழைய தார் சாலையின் மீது தார் கலவை கொட்டி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி சாலை அமைப்பதால் வரும் காலங்களில் அந்த சாலையை தரமான சாலையாக இல்லாமல் பழைய சாலையாக மாறும் நிலை ஏற்படும் என்று வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அரூர் அருகே உள்ள சேவா கிராம பகுதியில் பழைய சாலையை அகற்றாமல் பழைய சாலையின் மீது புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஈடுபட்டிருந்தனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பழைய தார் சாலையை அகற்றிவிட்டு புதிய தார் சாலையை அமைக்க வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

    தகவல் அறிந்து வந்த அரூர் வட்டாட்சியர் பெருமாள் வி.சி.க., கட்சினரிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாச்சியர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பழைய ரோட்டின் மேல புதிய ரோடு போடும் பணி நிறுத்தப்பட்டது.

    • தரும புரியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    • 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    தருமபுரியில் இன்று காலை போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். தருமபுரி எலைட் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்திய போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தருமபுரியில் இன்று காலை நடைபெற்றது.

    மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தனியாக நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டி களில் மாணவ, மாணவிகள், வீரர், வீராங்கனைகள் உள்பட 3ஆயிரம் பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உற்சாகமாக ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாற்றுத்திற னா–ளிகளுக்கும் குறிப்பிட்ட எல்லை வகுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டி.என்.சி. இளங்கோவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ரொக்க பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.4000, 3-ம் பரிசு ரூ.3000, கேடயம், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அதேபோல் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.1000, 20 இடங்களை பிடித்த வர்களுக்கு ரூ.500 என சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியை முன்னிட்டு தருமபுரி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • ஒகேனக்கிலில் நீர் வரத்து 8 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
    • பரிசல் இயக்க 4-வது நாளாக தடை.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் தமிழகத்திற்கு நேற்று 3 ஆயிரம் கனஅடி அளவில் திறந்து விடப்பட்டது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீராலும் தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை, 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த தால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இருந்தபோதிலும், அங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, ஐவர்பாணி ஆகிய அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகளின் பாது காப்பு கருதி, ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்கு கடந்த 12-ந் தேதி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடி அளவில் தண்ணீர் குறைந்து வந்தபோதிலும், இன்று 4-வது நாளாக பரிசல் இயக்க தடை நீடித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

    விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.பின்னர் சுற்றுலா பயணிகள் எண்ணை மசாஜ் செய்து கொண்டு அருவி களில் குளித்து மகிழ்ந்தனர்.

    பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டிருந்தால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் பரிசல் நிலையம், கடைவீதி, மீன் கடை ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

    கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து திறந்து விட படுவதால், பிலிக்குண்டு லுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்கா ணித்து வருகின்ற னர்.

    • சிறப்பு மக்கள் நீதி மன்றம் மூலம் 798 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • தருமபுரியில் மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் தாலுகா கோர்டுகளிலும் நடைபெற்றது.

    நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படியும், சிறப்பு மக்கள் நீதிமன்றம் தருமுபுரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.

    தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான சமரச தீர்வு காணும் நிகழ்வை மாவட்ட முதண்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி நீதிமன்ற வழக்கறிஞர்களும் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நீதிபதிகள் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதேபோல் அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்ற வழக்குகள் என மொத்தம் 1741 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணையின் முடிவில் 798 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 63 லட்சத்து 17 ஆயிரத்து 366 தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது. 

    • தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்தார்

     தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இல்லந்தோறும் தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் விவரம் பதிவு செய்யும் நிகழ்ச்சி தருமபுரி உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அசோக்குமார், செல்வராஜ், ராஜகோபால், கலைச்செல்வன், கார்த்திக், முத்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் சேர்க்கை முகாமை தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்து இளைஞர் அணி நிர்வாகிகளிடம் அதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் 2-வது இளைஞர் அணி மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் பெயர்களை பதிவு செய்யும் பணியையும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, தர்மபுரி ஒன்றிய செயலாளர் சேட்டு, ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தடங்கம் இளைய சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள், இளைஞரணி பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி உழவர் சந்தையில் 42 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையானது.
    • 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாங்கி சென்றனர்.

    புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தருமபுரி உழவர் சந்தையில் 42 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையானது.

    புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையல் இட்டு வழிபடுவார்கள். பின்னர் பல்வேறு காய்கறிகளுடன் செய்யப்பட்ட உணவை குடும்பத்துடன் அருந்தி விரதத்தை முடித்துக் கொள்வார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெறுவது வழக்கம். தருமபுரி உழவர் சந்தையில் நேற்று புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

    அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் உழவு சந்தைக்கு வரத் தொடங்கினர். நேற்று ஒரே நாளில் மட்டும் இங்கிலீஷ் காய்கறிகள் (அக்ரோ காய்கறிகள்) மற்றும் நாட்டு காய்கறிகள் என மொத்தம் 39 டன் காய்கறிகளும், 3 டன் பழங்களும் விற்பனையானது இதன் மொத்த மதிப்பு ரூ.12 லட்சத்து 76 ஆயிரம் ஆகும்.

    தருமபுரி உழவர் சந்தைக்கு நேற்று 142 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் 59 வகையான காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. சுமார் 9000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்கறிகள் வாங்க உழவர் சந்தைக்கு வந்தனர். வழக்கமாக தருமபுரி உழவர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 25 டன் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். புரட்டாசி 4-வது சனிக்கிழமை என்பதால் கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு வந்தது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன், மூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

    தருமபுரி உழவர் சந்தை அமைந்துள்ள கிருஷ்ணகிரி சாலையில் நேற்று அதிகாலை முதலே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • தருமபுரி மாவட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பக்தர்கள் வரிசையில் சாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி மாத சனிக்கி–ழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துவது வழக்கமாகும். அதன்படி இந்தாண்டு புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய ஸ்ரீ பரவாசு தேவ பெருமாள் கோவிலில் சாமிக்கு, தருமபுரி குமாரசா–மிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமி மற்றும் கருடாழ்வாருக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், சோகத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராயப் பெருமாள் சாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள அபாய ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

     இதேபோன்று மணி யம்பாடி ஸ்ரீ வெங்கட் ரமண சாமி கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரா தனை வழிபாடுகள் நடந்தது.

    தருமபுரி அருகே புலிக்க ரையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் சாமி கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது.

    பழைய தருமபுரி அடுத்த வரதகுப்பத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோவிலில் கடந்த புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் சாமி கோவில், கம்பைநல்லூர் ஸ்ரீ லட்சுமி நாராயண சாமி கோவில், தென்க ரைக்கோட்டை பட்டாபி ராமர் சாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது.

    இதேபோன்று மூக்கனூர் அக்கமணஹள்ளி ஸ்ரீ ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு தங்கக்கவசம் சாத்நப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது.

    விழாவையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.இந்த வழிபாட்டில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தருமபுரி அருகே தோக்கம்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியில் அமைந்துள்ள 300 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ சுயம்பு சென்ராய பெருமாள் சாமி கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, காரி மங்கலம், பாப்பாரப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மாரண்டஅள்ளி, பொம்மிடி உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மகளாய அமாவாசையொட்டி தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் குவிந்தனர்.
    • நீர் வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையையொட்டி காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.

    இதைத்தொடர்ந்து புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையொட்டி இன்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஏரளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகம், ஆந்திரம், புதுவை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஒகேனக்கலில் குவிந்தனர்.

    இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு சுமார் 14,000 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருந்தது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் பயணத்திற்கு மட்டும் இன்று 3-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. மெயின் அருவி, சினி அருவி, பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் கரை யோரம் முன்னோர்களின் நினைவாக புனித நீராடி தர்ப்பணம் செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு பொதுமக்கள் புனித நீராடி தர்ப்பண செய்து வழிப்பட்டனர்.

    மேலும், அருவிகளில் குளிக்கும் சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர் காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்–தப்பட்டனர்.

    • பாலக்கோடு அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்க கோரி கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் தவிப்பு

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த காவாபட்டி, சுன்னாம்பட்டி, பெருமாள் கோயில்தெரு, பசுமைபுரம், செல்லியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட கிராம பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தனி மயானம் இல்லாததால் கிராமத்தில் யாராவது இறந்து விட்டால் ஆற்று பகுதியில் அடக்கம் செய்து வந்தனர்.

    கிராம மக்கள் தொகை அதிகரிப்பால் மயானத்திற்கு போதிய இடம் இல்லாததால் இறந்தவர்களை புதைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 3 ஏக்கர் உள்ளதாகவும், அந்த இடத்தின் ஒரு பகுதியினை சுடுகாடு, தகன மேடை உள்ளிட்டவைகள் அமைத்து தர பாலக்கோடு தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.

    இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கா ததால் மீண்டும் தாசில்தா ரிடம் மனு அளிக்க வந்தனர்.தாசில்தார் இல்லா ததால்ஆத்திர மடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்க வேண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். 

    • பொம்மிடி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
    • உணவு, மற்றும் தண்ணீர் தேடி அலைகின்றன

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வனப்பகுதிகள் அதிகமாக உள்ளது. மேலும் இக் காப்பு காட்டுப் பகுதிகளில் புள்ளிமான் இனங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன .

    வனப்பகுதியில் இருந்து அடிக்கடி புள்ளிமான்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி பொதுமக்கள் வாழக்கூடிய பகுதிக்குள் வந்து விடுகின்றன. இதனையடுத்து இன்று காலை 7 மணி அளவில் பொம்மிடி சினிமா தியேட்டர் அருகில் புள்ளிமான் ஒன்று முருகர் மலைப்பகுதியில் இருந்து அதிவேகமாக ஊருக்குள் ஓடி வந்தது.

    இதைக்கண்ட பொதுமக்கள் வெறி நாய்களிடம் சிக்காமல் இருக்க புள்ளிமானை பிடித்து கால்களைக் கட்டி வைத்துவிட்டு மொரப்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனவர் செல்வராஜ் தலைமையில் வந்த வனத்துறையினர் மானை மீட்டு குண்டலமடுவு காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது,

    ×