சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் 798 வழக்குகளுக்கு தீர்வு

சிறப்பு மக்கள் நீதி மன்றம் மூலம் 798 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.தருமபுரியில் மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.
சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் 798 வழக்குகளுக்கு தீர்வு
Published on

தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் தாலுகா கோர்டுகளிலும் நடைபெற்றது.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படியும், சிறப்பு மக்கள் நீதிமன்றம் தருமுபுரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.

தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான சமரச தீர்வு காணும் நிகழ்வை மாவட்ட முதண்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.

தருமபுரி நீதிமன்ற வழக்கறிஞர்களும் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நீதிபதிகள் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதேபோல் அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்ற வழக்குகள் என மொத்தம் 1741 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணையின் முடிவில் 798 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 63 லட்சத்து 17 ஆயிரத்து 366 தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com