என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • ஒரு யூனிட் அளவுள்ள கற்களை கடத்தி வந்த வாகனத்தை மடக்கி பிடித்தார்.
    • 2 பேர் கற்களை திருடியது தெரிய வந்தது.

    தருமபுரி, 

    கனிம வள கொள்ளை நடப்பதாக தருமபுரி மாவட்ட கலெக்டருக்கு வந்த தகவலை அடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் நல்லம்பள்ளி தாசில்தார் நல்லம்பள்ளி அடுத்த கூலி கொட்டாய் பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அவ்வழியாக டிராக்டரில் ஒரு யூனிட் அளவுள்ள கற்களை கடத்திக் கொண்டு வருவதை கண்ட தாசில்தார் வாகனத்தை மடக்கி பிடித்தார்.

    அப்போது ஓட்டுனர் வாகனத்தை விட்டு தப்பி ஓடி விட்டார், விசாரித்ததில் சோன அள்ளி அடுத்த மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (32) மற்றும் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி ஆகிய 2 பேர் கற்களை திருடியது தெரிய வந்தது.

    இதனை அடுத்து ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள டிராக்டரை பறிமுதல் செய்தனர். இது குறித்து இண்டூர் காவல் நிலையத்தில் தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    • வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும் பொருட்களின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
    • தலையில் ஏற்படும் காயங்களுக்கு கட்டு போடுவது குறித்து செயல் வழி விளக்கம் செய்து காட்டினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், வடகிழக்கு பருவ மழை பேரிடர் கால முன்னெச்சரிக்கை தீ பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மாதிரி குறித்து ஒத்திகை பயிற்சி நடந்தது.

    தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கீதா ராணி தலைமையில் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

    பருவமழை காலங்களில் பொதுமக்களை காப்பாற்ற வும், வெள்ளத்தில் சிக்கிய வர்களை மீட்க ரப்பர் படகு, உயர் கோபுர விளக்கு, மிதவை மற்றும் உடை, விபத்து ஏற்படும் பொழுது இரும்பு பொருட்களை வெட்டுவதற்கான நவீன இயந்திரம், ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு. வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும் பொருட்களின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள், உயர் மாடி கட்டடங்களில் மாடிப்படி வழியாக வரமுடியாத சமயத்தில் கயிறு மற்றும் தார்பாலின் மூலமாக மீட்பது, கூட்ட நெரிசலில் விழுந்தால் தற்காத்துக் கொள்வது, ஆடைகள் தீப்பற்றி கொண்டால் தற்காத்து கொள்வது தலை மற்றும் கைகால் பகுதிகளில் ஏற்படும் காயங்களுக்கு எவ்வாறு கட்டு போடுவது என்ற செயல் வழி விளக்கம் செய்து தீயணைப்பு வீரர்கள் மூலமாக செயல் விளக்கங்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.

    • தாய்மார்கள் உயிரி ழப்புக்கான காரணம் குறித்து எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
    • பொது மக்களுக்கு நிறைவான சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவா்களிடம் அறிவுறுத்தினார்.

    தருமபுரி,

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்கு பிறகு கடந்த சில தினங்களில் மூன்று பெண்கள் உயிரிழப்பு தருமபுரி எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில தினங்களில் பிரசவித்த தாய்மார்கள் 3 பேர் பிரசவத்திற்கு பிறகு உயிரிழந்த சம்பவம் குறித்து தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுத வல்லி, டாக்டர்கள் உள்ளிட்டோரிடம் பிரச வித்த தாய்மார்கள் உயிரி ழப்புக்கான காரணம் குறித்து எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவர் பதில் சொல்ல முடியாமல் திணறி–னார். அவர்களது இறப்பு குறித்து விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களிடம், எம்.எல்.ஏ. கேட்டார்.

    மேலும், இனிவரும் காலங்களில் பிரசவித்த தாய்மார்கள் உயிரிழப்பு ஏற்படாத வகையில் சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும்.

    தருமபுரி அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற வருபவர்களை அலைக் கழிக்க கூடாது. கிராமத்திலிருந்து வருபவர்களை மீண்டும் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அனுப்பு கூடாது என்றும், அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற வரும் பொது மக்களுக்கு நிறைவான சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவா்க ளிடம் அறிவுறுத்தினார்.

    • மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது
    • மனுக்கள் மீதான தீர்வினை விரைந்து காண வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கி.சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில்பொது மக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, மாவட்ட கலெக்டர் தெரிவித்த தாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி யுள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு வாரம்திங்கட்கி ழமைகளில் நடைபெறும் மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து பல்வேறு கோரிக்கைமனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

    நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்ப டபல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு உதவித்தொ கைகள், உதவி உபகர ணங்கள் வேண்டியும் மொத்தம் 461 மனுக்கள்வரப்பெற்றன.

    பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள்அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பஸ்சை வழிமறித்து பஸ் டிரைவரை தாக்கினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அதியமானை சிறையில் அடைத்தனர்

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்தப் பாடி கே.அக்ர ஹாரம் பகுதி ணயைச் சேர்ந்தவர் வீரப்பன் (44). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணிக்கு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தை பென்னா கரத்துக்கு பயணிகளுடன் எடுத்துச் சென்றுள்ளார்.

    அப்போது தருமபுரி-பென்னாகரம் ரோடு தனியார் திருமண மண்டபம் அருகில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பஸ்சை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி பஸ் டிரைவரை கீழே தள்ளி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் பஸ் டிரைவர் மயக்கம் அடைந்ததால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தருமபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில் தருமபுரி சவுளுபட்டி பகுதியைச் சேர்ந்த தங்க துரை மகன் அதியமான் (30) என்பது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அதியமானை சிறையில் அடைத்தனர்.

    • நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமை வகித்தார்.
    • கட்சியினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு இன்று 52-வது ஆண்டு அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் அ.தி.மு.க.வினர் கட்சி கொடி ஏற்றியும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    பின்னர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அமைப்பு செயலாளர் கே.பி.அன்பழகன் இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் மற்றும் அ.தி.மு.க. மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • சம்பவத்தன்று சீனிவாசன் காலையில் தனது வீட்டில் இருந்து கிளம்பி பணி நிமித்தமாக வெளியில் சென்றுள்ளார்.
    • வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). இவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று சீனிவாசன் காலையில் தனது வீட்டில் இருந்து கிளம்பி பணி நிமித்தமாக வெளியில் சென்றுள்ளார்.

    பணிகளை முடித்து விட்டு மீண்டும் பிற்பகலில் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்து உள்ளார். அப்பொழுது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 24 1/2 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதனை கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கோவில் முன்பு பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
    • ஒரு தரப்பு மட்டும் திருவிழா நடத்தக்கூடாது என்று கூறி கோவில் உண்டியல் மற்றும் அன்னதான கூடம், அரிசி-பருப்பு இருப்பு அறை ஆகியவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட மலையூர் கிராமத்தில் மலை உச்சியில் பழமை வாய்ந்த கோபால்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். மேலும் நவராத்திரியின் போது சாமி திருக்கல்யாணம் நடைபெறும்.

    திருவிழா காலத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் இந்த கோவில் நிர்வாகிகள் கோவில் பொது பணத்தை கையாடல் செய்து மோசடி செய்ததாக கூறி ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்த ஜனவரி மாதம் ஒரு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். கோவில் பொதுபணத்தை நிர்வாகிகள் பேரில் வங்கியில் கூட்டாக கணக்கு துவக்கி வரவு செலவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு திருவிழா நடத்த ஆர்.டி.ஓ உத்தரவிட்டார். இந்த உத்தரவை மீறி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினர் தன்னிச்சையாக திருவிழா நடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ உத்தரவை அமுல்படுத்த கோரியும், ஒரு தரப்பினர் மட்டும் கோவில் திருவிழாவை நடத்தக்கூடாது என்று கூறி மலையூர் கிராமத்தில் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விட்டு மலை உச்சியில் உள்ள கோபால்சாமி கோவில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவில் முன்பு பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். தகவலறிந்து பென்னாகரம் தாசில்தார் (பொறுப்பு) அன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒரு தரப்பு மட்டும் திருவிழா நடத்தக்கூடாது என்று கூறி கோவில் உண்டியல் மற்றும் அன்னதான கூடம், அரிசி-பருப்பு இருப்பு அறை ஆகியவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மாவட்ட கலெக்டர் உத்தரவிடும் வரை திருவிழா நடத்த அனுமதிக்கப்படாது என்று உறுதியளித்தார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    • காரிமங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தொடங்கி வைத்தார்.

    .தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் நகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

    ஸ்ரீ பி.சி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த முகாமிற்கு நகர செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். விவசாய அணி மாநில துணை தலைவர் சூட்டப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் சிறப்பு மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை களை வழங்கி அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் சிவகுரு, துணை அமைப்பா ளர்கள் ஹரிபிரசாத், மகேஷ்குமார், கவுன்சிலர்கள் சக்திரமேஷ், மாதப்பன், கீதா முத்துசெல்வம், ரமேஷ், சதீஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் குட்டி, ஒன்றிய கவுன்சிலர் முருகன், பள்ளி முதல்வர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ் இலக்கிய திறன்றிவுத் தேர்வில் 5,590 மாணவ, மாணவிகள் எழுதினர்.
    • தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிக ளுக்கு இரண்டு ஆண்டுகள் மாதம் ரூ.1500 பெற உள்ளனர்.-

    தமிழ்நாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு அதிக அளவில் தயாராகி, பங்கு பெறும் நிலையில், அதேப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்தி கொள்ளும் வகையில், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழியில் இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து முதன்முதலாக கடந்த 2022-23ம் கல்வியாண்டில் அக்டோபர் 15ம் தேதி தமிழ் மொழி இலக்கியத் திறனறி வுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுதும் 2 லட்சத்து 67 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 1,500 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப் பட்டு வருகிற-து.

    அதன்படி, இந்த ஆண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 50 சதவீதம், அரசு மற்றும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. என பொது பிரிவு என 50 சதவீத மாணவ, மாணவிக ளுக்கு தேர்வு நடத்தப்பட்டு, இதில் தேர்ச்சி பெறும் 1500 மாண வ, மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஓசூர் கல்வி மாவட் டத்தில் 7 மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட் டத்தில் 12 மையங்களிலும் என மொத்தம் 19 மையங்க ளில் இந்த தேர்வு நடத்தப் பட்டது. இதில் விண்ணப் பித்த 6 ஆயிரத்து 24 பேரில், 5,590 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 434 மாணவ, மாணவிகள் எழுத வில்லை. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக் கப்படும் மாணவ, மாணவிக ளுக்கு இரண்டு ஆண்டுகள் மாதம் ரூ.1500 பெற உள்ளனர்.

    • கடத்தூர் பகுதியில் ரோஜா செடிகளில் நோய் தாக்குதல் ஏற்படுதவதால் அதனை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த கோரிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
    • பல ஏக்கரில் ரோஜா சாகுபடி

    தருமபுரி மாவட்டப் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பூச்செடிகள் பயிரிட்டு வருகின்றார். இந்த பூச் செடிகள் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க அந்த அந்த பகுதிகளில் உள்ள மருத்து கடைகளில் மருந்துகள் வாங்கி அடித்து வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு பூக்களுக்கு போதிய விலையில்லாத நிலையில் பெரும் நஷ்டத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் செடிகள் நோய், பூச்சிகள் புலுக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க மருந்துகள் தெளித்தும் பலனில்லாத நிலையில் மேலும் இழப்பிற்க்கு உள்ளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிராமங்களில் நேரடி ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நோய் தடுக்கும் தரமான மருந்துகள் பயன்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.

    • கடத்தூரில் கோவில் குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பழையான கோவில் குப்பை மேடாக மாறி வருகிறது.

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் பழமையான ஆதி வினாயகர், சுப்பரமணியர், கோதண்டராமசாமி கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களுக்கு பின்புறம் சிறப்பு மிக்க கோவில் குளம் உள்ளது. இந்த கோவில் குளத்தின் தண்ணீரை அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டாரப்பகுதி மக்களும் பல ஆண்டுக்கு முன்பு குடி தண்ணீராக பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சமீப காலங்களில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்த குளத்தை சீரமைக்க பல லட்சம் பணம் சில ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்டு பெயரளவில் மட்டுமே தூர்வாரி பணிகள் மேற்கொள்ளபட்டது.

    தமிழக அரசு மாநிலம் முழுவதும் நீர் நிலைகளை மேம்படுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கைகள்  எடுத்து வரும் நிலையில் அதிகாரிகள் மற்றும் அறநிலையதுறையின் அலட்சியத்தால் இந்த பழமையான கோவில் குளம் குப்பை குழியாக மாறிவருகின்றது. இதை தடுக்க சமூக ஆர்வலர்கள் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரு கின்றனர். 

    ×