கற்களை கடத்திய டிராக்டர் பறிமுதல்

ஒரு யூனிட் அளவுள்ள கற்களை கடத்தி வந்த வாகனத்தை மடக்கி பிடித்தார். 2 பேர் கற்களை திருடியது தெரிய வந்தது.
கற்களை கடத்திய டிராக்டர் பறிமுதல்
Published on

தருமபுரி, 

கனிம வள கொள்ளை நடப்பதாக தருமபுரி மாவட்ட கலெக்டருக்கு வந்த தகவலை அடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் நல்லம்பள்ளி தாசில்தார் நல்லம்பள்ளி அடுத்த கூலி கொட்டாய் பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அவ்வழியாக டிராக்டரில் ஒரு யூனிட் அளவுள்ள கற்களை கடத்திக் கொண்டு வருவதை கண்ட தாசில்தார் வாகனத்தை மடக்கி பிடித்தார்.

அப்போது ஓட்டுனர் வாகனத்தை விட்டு தப்பி ஓடி விட்டார், விசாரித்ததில் சோன அள்ளி அடுத்த மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (32) மற்றும் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி ஆகிய 2 பேர் கற்களை திருடியது தெரிய வந்தது.

இதனை அடுத்து ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள டிராக்டரை பறிமுதல் செய்தனர். இது குறித்து இண்டூர் காவல் நிலையத்தில் தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com