என் மலர்
தர்மபுரி
- அரூர் அருகே இரும்பு கடையில் ரூ1.50 லட்சம் பணம் கொளையடித்த மர்ம நபருக்கு வலைவீச்சு.
- போலீசார் தீவிர விசாரணை
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த செல்லம்பட்டி அருகே உள்ள சங்கிலிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விமலநாதன் (வயது 38). இவர் ஹெச். ஈச்சம்பாடி கிராமம் பெட்ரோல் பங்க் அருகில் இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் கடையில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் வந்தார்.
அப்போது அந்த மர்ம நபர் இரும்பு கம்பிகள் வேண்டும் என்றும், தனக்கு கண்கள் தெரியாது நீங்களே எடுத்து வந்து காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து கடை உரிமையாளர் விமலநாதன் கடைக்குள் சென்று இரும்பு கம்பியை எடுத்து கொண்டு வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர் அங்கிருந்து மாயமானார்.
இதனை தொடர்ந்து விமலநாதன் கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் பணம் காணமால் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த அவர் அளித்த அரூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொம்மியில் மாயமான 2 சிறுவர்களை 36 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
- போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி ஓமலூர் சாலையில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பவர் சீனு (வயது 47) இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் அவரது மகன் நிஷாந்த் (13) வயது பொம்மிடி அருகே உள்ள நடூர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டில் அருகில் உள்ள இஸ்மாயில் மகன் சையது பாஷா (15). நண்பர்களான நிஷாந்தும், சையது பாஷாவும் கடந்த 15-ந் தேதி விளையாடச் சென்றனர்.
இந்த நிலையில் மாலை நீண்ட நேரமாகியும் விளை யாட சென்ற 2 சிறுவர்களும் வீடு திரும்பவில்லை. இரவு 10 மணி வரை சிறுவர்களை பெற்றோர்கள், உறவி னர்கள் எங்கு தேடியும் கிடைக்க வில்லை, இதனால் பதட்டம் அடைந்த சிறுவர்களின் பெற்றோர்கள் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லதா வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவர்களை தேடிவந்தனர். 2 சிறுவர்கள் பொம்மிடி பகுதியில் காணாமல் போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. இந்த நிலையில் காணாமல் போன 2 சிறு வர்களையும் மீட்கும் பணியில் பொம்மிடி போலீ சார் தீவிரம் காட்டினார்.
காணாமல் போனது பற்றிய தகவல் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், உதவி மையங்களுக்கும் அனுப்பப்பட்டது. இதன் பேரில் காணாமல் போன 2 சிறுவர்களும் திருச்சி ரயில் நிலைய காவலர்களால் ெரயில் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிறுவர் பாதுகாப்பு மையத்தில் விடப்பட்டுள்ளதாகவும் என்ற தகவல் பொம்மிடி போலீசாருக்கு கிடைத்தது வாட்ஸ் சப் மூலம் சிறுவர்கள் புகைப்படத்தினை அனுப்பி மாயமானது அவர்கள் தான் என உறுதி செய்தனர்.
அதன் பெயரில் காணா மல் போன 2 சிறுவர்களையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு போலீசார் திருச்சி விரைந்து உள்ளனர். போலீசார் விரைந்து செயல்பட்டு மாயமான 2 சிறுவர்களையும் மீட்டது குறித்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- தருமபுரியில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறி வைக்கும் கொள்ளை கும்பலால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- 5 கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் பொது மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கடந்த மாதம் 25 ந்தேதி பெங்களூரில் இருந்து கோவையை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் 5 கிலோ தங்கத்தை எடுத்து கொண்டு காரில் ஊழியர்களுடன் வந்தார்.
அப்போது அவர் பெங்க ளூரு- தருமபுரி தேசிய நெடுஞ்சா லையில் பூலப்பட்டி அருகே வந்தார்.அப்போது அவரை வழிமறித்த கொள்ளை கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி 5 கிலோ தங்கத்தை சொகுசு காருடன் கடத்தி சென்றனர். அதே போல காரிமங்கலம் அருகேயுள்ள பெரியம்பட்டியில் உள்ள பெருமாள்- பச்சையம்மன் கோவில்களில் உண்டியல் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அன்றே அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் புகுந்து தலைமை யாசிரியர் அறையின் கதவின் பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய கணினியை திருடி சென்றனர். அதே போன்று பாப்பாரப்பட்டி போலீஸ ்நிலையத்துக்கு அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தூரத்து உறவினர் என்று சொல்லி நைசாக பேசிய ஒரு மர்ம பெண் ஒருவர் ஆப்பிள் பழத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து வீட்டில் பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளை யடித்து சென்றார். அதே போன்று பாப்பாரப்பட்டி அருகேயுள்ள ஆலம ரத்துப்பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் உறவினர் என்று வந்த மர்ம நபர் ஒருவர் அவர் வீட்டுக்கு சென்று அவருக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கலியை பறித்து சென்றார்.
அதே போன்று பிடமனேரி பகுதியில் மோகன்மேஸ்திரி காலனியில் கடந்த 14-ந்தேதி லோகநாதன் என்பவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் 15-ந்தேதி வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பிரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த நிலையில் நேற்று தருமபுரி- ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரில் சீனிவாசன் என்பவர் வீட்டில் அவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டதை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 24 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை திரு்டி சென்று உள்ளனார்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்;- கடந்த 2 மாதங்களில் தருமபுரியில் நடந்து வரும் தொடர் கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கொள்ளையர்கள் ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் உள்ள பூட்டிய வீடுகள் மற்றும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறி வைத்தே கைவரிசையை காட்டி வருகின்றனர்.
5 கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுவரை இதில் எவரும் கைது செய்யப்படவில்லை.
தருமபுரியில் தொடர்ந்து நடந்து வரும் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களால் பொது மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. வீட்டில் தனியாக இருக்கவும், வீடுகளை பூட்டிவிட்டு வெளியே செல்லவும் அஞ்சுகின்றனர். ஆகவே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கொள்ளை யர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அரூரில் விதை நெல் விற்ற கடைககளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- தரமற்ற விதைகள் விற்றால் நடவடிக்கை என்று எச்சரிக்கை
தருமபுரி மாவட்டம் அரூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஒரே கடையில் ஈஸ்வரி 22 ரக விதை நெல் வாங்கி பயிரிட்டுள்ளனர். ஆனால் பயிர் நடவு செய்த 20 முதல் 30 நாட்களில் நெல் பயிரில் கதிர் வைத்துள்ளது. இதனை கண்ட விவ சாயிகள் அதிர்ச்சிய டைந்துள்ளனர்.
இதுகுறித்து விதை வாங்கிய கடையில் புகார் தெரிவித்தபோது, விதை நிறுவனத்திற்கு புகார் தெரிவித்துள்ளதாகவும், நேரில் ஆய்வு செய்ய வருவார்கள் என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
இந்த நெல் வாங்கிய விவசாயிகளுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தி மாலைமலரில் வெளியானது. இதனை அறிந்த வேளாண்மை துறையினர் தருமபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனருக்கு புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து இன்று விதை விற்பனை செய்த குறிப்பிட்ட கடையில், துணை இயக்குநர் (விதை ஆய்வு) சங்கர், அரூர் வேளாண் உதவி அலுவலர் சரோஜா, உதவி விதை ஆய்வாளர்கள் சிங்காரவேலன், கண்ணன், கார்த்தி ஆகியோர் கடையில் ஆய்வு செய்து விசாரணை செய்தனர்.
மேலும் விற்பனை செய்தது, இருப்பு விவரம் உள்ளிட்டவை சரியாக இருக்கின்றனவா என ஆவணங்களையும் சரி பார்த்தனர். மேலும் எத்தனை விவசாயிகள் நெல் வாங்கி உள்ளனர்? எவ்வளவு நெல் விற்பனை யானது, விவசாயிகளுக்கு உரிய விலைக்கு வழங்கி யது குறித்த ரசீது வழங்கப் பட்டுள்ளதா? மொத்தம் நெல் கொள்முதல் செய்த தற்கான ஆவணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர் .
இதனை யடுத்து ஈஸ்வரி 22 ஆக நெல்லை அதிகாரிகள் தரமாக இருக்கின்ற னவா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து விதை நெல் கொடுத்த நிறுவனங்கள் நாளை விவசாய நிலங்களை பார்வையிட செல்லும்போது கண்டிப் பாக வரவேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என, விதை நெல் விற்பனை செய்த கடை உரிமையாளரிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளிடம் பயிரிட்ட முறை, எவ்வளவு நாட்களில் கதிர் வந்தது என்பது குறித்து கேட்டறிந்தனர். பின் அந்த வயலில் இருந்த நெல் பயிரை சோதனை செய்வதற்காக பிடிங்கி எடுத்துச் சென்றனர். மேலும் பையூர் மற்றும் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்திலிருந்து விதை ஆராய்ச்சியாளர்கள் நாளை பயிர்களை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
அதன் பிறகு விதை நெல் தரம் குறித்தும், பயிரி டப்பட்ட பயிர்கள் வளர்ச்சி குறித்தும் தெரியவரும் என தெரிவித்தனர். மேலும் வேளாண் அலுவலர்கள் குறிப்பிட்ட கடைக்கு ஆய்வு செய்த போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடை முன் குவிந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
- எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அ.தி.மு.க., கட்சியின் பொன்விழா நிறைவு மற்றும் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம் சார்பில், பெத்ததாளாப் பள்ளியில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூஜை செய்து, எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதில், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வேலன், சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலாளர் ஏஜாஸ் அகமது, துணைச் செயலாளர் கோவிந்தசாமி, ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கோவிந்தன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் தாபா வெங்கட்ராமன், கவுன்சி லர்கள் ஜெயராம், காசி, மாரியப்பன், ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- டி.என்.சி. இளங்கோவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- மோதிரம், , ஆரம், மற்றும் நெக்லஸ் வகைகள் புதிய டிசைன்களில் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது.
தருமபுரி நகரில் நேதாஜி பைபாஸ் ரோடு, ஸ்டேட் பேங்க் எதிரில் செல்வ மாளிகை புதிய நகைக்கடை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த நகைக்கடையை தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. இளங்கோவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வெங்கடேஞு் வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மீனா இளங்கோவன், உமாராணி ராஜசேகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் மற்றும் பரிசு பொருட்கள் என தனித்தனி பிரிவுகளுடன் இந்த புதிய நகை கடை அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவை முன்னிட்டு பி.ஐ.எஸ். 916 ஹால்மார்க் தங்கம் பவுனுக்கு ரூ.1,200 தள்ளுபடி, உலகத்தரம் வாய்ந்த ஐ.ஜி.ஐ. தரச் சான்றிதழ் பெற்ற வைர நகைகளுக்கு 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடி, ஹால்மார்க் வெள்ளி கொலுசுகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை மற்றும் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு தங்க நகைக்கும் நிச்சய பரிசு என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செல்வ மாளிகை நகைக்கடை நிர்வாக இயக்குனர் எஸ். ராஜசேகரன் கூறுகையில், சேலத்தில் 73 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க எங்களது செல்வ மாளிகை நகை கடை வாடிக்கையாளர் களின் வசதிக்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அரூரில் புதிய கிளை தொடங்கப்பட்டது. தற்போது தருமபுரி நகரில் புதிய கிளையை தொடங்கி உள்ளோம்.
இந்த புதிய நகைக்கடை யில் பிரத்யேக திருமண நகைகள், இன்றைய தலை முறைக்கு ஏற்ற அனைத்து வகையான பி.ஐ.எஸ் 916 ஹால்மார்க் தரத்துடன் கூடிய தங்க செயின்கள், வளையல்கள், மோதிரம், காதணி, ஆரம், மற்றும் நெக்லஸ் வகைகள் புத்தம் புதிய டிசைன்களில் விற்பனைக்காக காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது.
தங்கத்தின் தரத்தினை உங்கள் கண்முன்னே கேரட் மீட்டரில் பரிசோதனை செய்யும் வசதியுடன் தொடங்கப்பட்டுள்ள எங்களது புதிய நகை கடையில் நகைகளுக்கு இலவச வாழ்நாள் பராமரிப்பு மற்றும் சிறந்த எக்ஸ்சேஜ் மதிப்பு வழங்கப்படுகிறது. எங்களது நகைக்கடையில் லக்கி கோல்டு தங்க நகை சேமிப்பு திட்டம் மூலம் 11 மாதங்கள் பணம் செலுத்தி பல்வேறு சலுகைகள் மூலம் நகைகளை தேர்வு செய்யும் திட்டமும் அறிமுகப்படுத் தப்பட்டு உள்ளது என்று கூறினார்.
இந்த விழாவில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழா வுக்கான ஏற்பாடுகளை செல்வ மாளிகை நகைக்கடை நிர்வாக இயக்குனர் எஸ்.ராஜ சேகரன், நிர்வாக பொறுப் பாளர் ஆர்.மணியன், தருமபுரி கிளை மேலாளர் எஸ்.வினோத், பர்சேஸ் மேலாளர் ஏ. இருசப்பன் மற்றும் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.
- பொதுமக்கள் நடக்க முடியாத அளவுக்கு சகதியாக மாறியுள்ளது.
- பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தருமபுரி மாவட்டம் உங்கரானஅள்ளி மற்றும் இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ராமன் நகர் செல்லும் சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது.
இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இச்சாலை வழியாக ஏமக்குட்டியூர், வத்தல்மலை, நூலஅள்ளி, மொடக்கேரி, எட்டிமரத்துபட்டி, உழவன் கொட்டாய் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலை தற்போது சேரும் சகதியுமாக மாறி காட்சியளிக்கிறது.
மேலும் மழைக்காலங் களில் சாலை சேரும் சகதியுமாக மாறிப்போன தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் அவதிபடுகின்றனர். இந்நிலையில் புதிய தார் சாலை அமைத்து தரக் கோரி ஊராட்சி மன்றம் சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சாலை சீரமைக்கப்படவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலையில் நடந்து செல்ல முடியாமல் மழை நீருடன் சேறும் கலந்ததால் நடக்க முடியாத அளவுக்கு சகதியாக மாறியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது;-
ராமன் நகர் மற்றும் அதியமான் நகர் பகுதிக்கு முறையான சாலை வசதி, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தருமபுரியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் சாதாரண மழைக்கே இந்த நிலைக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக சேறும் சகதியமாக உள்ளது.
இந்த வழியில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இரு சக்கரத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- காரிமங்கலம் அருகேயுள்ள கோவிலுர் ஊர்கவுண்டர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி.
- சிறுமியை மீட்டு காரிமங்கலத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் சமூக நலத்துறை அதிகாரி சாந்தி என்பவருக்கு காரிமங்கலம் ஊர்கவுண்டர் கொட்டாய் என்ற இடத்தில் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு விசாரணை மேற்கொண்ட பெண் அதிகாரி சம்பவம் உறுதியானதை அடுத்து அது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், காரிமங்கலம் அருகேயுள்ள கோவிலுர் ஊர்கவுண்டர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கும் தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை மாதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 27) என்பவருக்கும் பண்ணத்தூர் தேவிர அள்ளி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து மகளிர் சமூக நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்த மாதுப்பட்டியை சேர்ந்த ராஜா மகன் பிரகாஷ் சிறுமியின் தந்தை, சிறுமியின் தாய் மற்றும் மாதுப்பட்டியை சேர்ந்த ராஜா, நஞ்சம்மாள் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து சிறுமியை மீட்டு காரிமங்கலத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
- நெல் 3 மாத கால பயிர் என்பதால், 60 நாட்களுக்குப் பிறகே பயிரில் பூட்டை வைத்தால் மட்டுமே, நல்ல மகசூல் கிடைக்கும்.
- பயிர் நடவு செய்த 20 முதல் 30 நாட்களில் பூட்டை வைத்ததால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அரூர்:
தருமபுரி மாவட்டம் முழுவதும் வானம் பார்த்த பூமியாக மழையை நம்பியே, மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் பருவமழை கைகொடுக்கும் காலங்களில் விவசாயிகள் நெல் பயிர் நடவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்து வருவதால், விவசாயிகள் நெல் பயிர் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரூர் பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் குறிப்பிட்ட ஒரு அக்ரோ சர்வீஸ் கடையில் ஈஸ்வரி 22 என்ற ஆந்திர வகை விதை நெல்லை வாங்கி நாற்று வைத்து நெல் பயிர் நடவு செய்துள்ளனர்.
இந்த ஈஸ்வரி 22 விதை நெல்லை வாங்கி சென்ற விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்து ஒரு மாதம் முடிவுறும் நிலையில் குறிப்பிட்ட கடையில் வாங்கிய ஈஸ்வரி 22 நெல் ரகம் நடவு செய்த 20 முதல் 30 நாட்களிலேயே பூட்டை(கதிர்) வைக்க தொடங்கியுள்ளது.
இந்த நெல் 3 மாத கால பயிர் என்பதால், 60 நாட்களுக்குப் பிறகே பயிரில் பூட்டை வைத்தால் மட்டுமே, நல்ல மகசூல் கிடைக்கும். ஆனால் பயிர் நடவு செய்த 20 முதல் 30 நாட்களில் பூட்டை வைத்ததால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடவு செய்த பயிர்கள் தெளிவடைந்து, வேரூன்றி, களை பறிப்பதற்குள்ளாகவே, தற்பொழுது பூட்டை வைத்துள்ளது. இந்த நெற்கதிர்கள், பால் பிடித்து மகசூல் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இதற்கு உரம் வைத்து, தண்ணீர் பாய்த்து, எவ்வளவு செலவு செய்தாலும், இந்த பூட்டை பால் பிடித்து கதிர் ஆகாமல் அப்படியே காய்ந்து விடும் சூழல் இருந்து வருகிறது.
இதனால் நெல் மணிகள் கிடைக்காமல் வெறும் கால்நடைகளுக்கான வைக்கப்புல் மட்டுமே கிடைக்கும். இதனையடுத்து விதை நெல் வாங்கிய குறிப்பிட்ட அக்ரோ சர்வீஸ் கடைக்கு சென்று புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த கடையில் ஈஸ்வரி 22 ஆக விதை நெல் சுமார் பத்து டன்னுக்கு மேல் விற்பனை செய்ததாகவும், விதை நெல்லை வாங்கி பயிரிட்ட விவசாயிகள் அனைவரும் இதுபோன்ற புகார் தெரிவித்து வருவதால், விதை நெல் வழங்கிய நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளோம்.
அந்த ஊழியர்கள் நேரில் வந்து, பயிரை ஆய்வு செய்வதாக உறுதி அளித்து இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரையிலும் இந்த நெற்பயிர்களை ஆய்வு செய்ய விதை நிறுவனத்தினர் வரவில்லை.
இதனால் அரூர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இந்த விதைகள் வாங்கியது, நாற்று வைத்தல், நடவு செய்தல் போன்ற பணிகளுக்காக ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளனர்.
மேலும் இந்த பயிரை அழித்துவிட்டு வேறு பயிர் செய்ய வேண்டும் என்றால், மேலும் ரூ. 20,000 முதல் ரூ.30,000 வரை செலவாகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றன.
அரசு அலுவலகத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதில்லை. அரசு வேளாண் துறை அலுவலகத்தில் ஆடு துறை-39 (ஏடிடி-39) என்ற ரகம் மட்டுமே விற்பனை செய்வதால், விவசாயிகள் வேறு ரகங்களை தேடி தனியார் நிறுவனங்களை நாட வேண்டிய தேவை உள்ளது. விவசாயிகளை மோசடி செய்த ஈஸ்வரி 22 ரக விதை நெல் விற்பனையாளர் மற்றும் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
வரும் காலங்களில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வகை நெல் ரகங்களையும் வேளாண் துறையினர் விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அரூர் வேளாண்துறை அலுவலர் குமாரிடம் கேட்டபோது:-
அரூர் பகுதியில் ஈஸ்வரி 22 ஆக விதை நெல் தரம் இல்லாமல், 20 நாட்களிலேயே பூட்டை வைத்ததாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து துணை இயக்குனர் விதை ஆய்வாளருக்கு, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதை குறித்து ஆய்வு செய்து சட்டரீதியாக நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் விதை நிறுவனத்திடமிருந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற முடியும். மேலும் அரசு வேளாண் அலுவலகம் மூலமாக விதை நெல் கிலோ ரூ.20-க்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் பாரம்பரிய நெல் ரகங்களை விட்டு சிறிய ரக நெல் வேண்டுமென்ற மோகத்தால் விவசாயிகள் தனியாரை நாடி சென்று, கிலோ ரூ.100 கொடுத்து வாங்கி வருகின்றனர். நமது விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை மறந்து சிறிய ரக நெல் கேட்கிறார்கள், அதனை அரசு மூலம் நம்மால் விற்பனை செய்ய முடியாது.
நம்மிடம் பாரம்பரிய நெல் ரகங்கள் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
- தலைமை கணக்கர் சம்பத் வரவு-செலவு குறித்த அறிக்கையை வாசித்தார்.
- 4 ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான சத்திரத்தை மீட்பது உள்ளிட்டவை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தார். தலைமை கணக்கர் சம்பத் வரவு-செலவு குறித்த அறிக்கையை வாசித்தார்.
அதனை தெடர்ந்து வடிகால் வசதி, தெருவிளக்கு, குடிநீர் பராமரிப்பு, விளையாட்டு மைதானம், ஆடு அடிக்கும் தொட்டி, சுற்று சுவர், நீரேற்றும் மின் மோட்டார், சமுதாய கூட கட்டிடம் பராமரிப்பு, 4 ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான சத்திரத்தை மீட்பது உள்ளிட்டவை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
இதில் அரசு சத்திரம் மீட்பு மற்றும் துரோயதனன் படுகள இடத்தில் சமுதாய கூடம் கட்டும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர் செல்வம் தலைமையில் சத்யா சிவகுமார், அபிராமி காந்தி, அனிதா ரமேஷ் ஆகியோர் கூட்டத்தை வெளிநடப்பு செய்து பேரூராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுங்கட்சியை சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட 5 பேர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இரு சக்கர வாகனத்தில் மணலூர்- கொப்பகரை சாலையில் சென்றுள்ளனர்.
- மருத்துவர்கள் சக்திவேல் என்பவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி அருகே உள்ள ஆலமரத்து கொட்டாய் பகுதியை சார்ந்த குழந்தை சாமி மகன் சக்திவேல் (வயது22). இவரது நண்பர் நல்லம்பள்ளி அருகே உள்ள பூதனஅள்ளியைச் சேர்ந்த அனுமந்தன் மகன் மூர்த்தி (22). நண்பர்களான இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை நல்லம்பள்ளியை சேர்ந்த மூர்த்தி தனது நண்பனை பார்ப்பதற்கு பொம்மிடி அருகே உள்ள மணலூர் பகுதிக்கு வந்துள்ளார், பின்னர் இருவரும் இரவு இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக மணலூர்- கொப்பகரை சாலையில் சென்றுள்ளனர்.
அப்போது வளைவான பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலை ஓரத்தில் இருந்த முட்டு கல்லில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சக்திவேல் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் இவர்களது நண்பன் பூவரசன் என்பவர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சக்திவேல் என்பவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
அவரது நண்பர் மூர்த்தி தருமபுரி அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (ெபாறுப்பு) லதா உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயிர்கள் மழையின்றி காய்ந்து வாடியது.
- பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
தருமபுரி,
மாதம் தொடங்கியதில் இருந்து மாவட்டம் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வந்தது. தமிழகத்தில் தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் நேற்று மாலை தருமபுரி, நல்லம்பள்ளி, தீர்த்தமலை, நரிபள்ளி, வேட்ரபட்டி, பி.பள்ளிபட்டி, கீரைபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கோடை வெயி–லுக்கு இணையாக மாவட் டத்தில் சுமார் 90 டிகிரி வெயில் பதிவாகி வந்த நிலையில், பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மேலும் மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள் சோளம், சாமை, கேழ்வரகு, உள்ளிட்ட பயிர்கள் மழையின்றி காய்ந்து வாடியது.
மேலும் மாவட்ட முழுவதும் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நேரத்தில் நிலத்தில் ஈரம் இல்லாததால் நிலக்கடலையை பயிரிட்ட விவசாயிகள் பறிக்க முடியாமல் தவித்து வந்தநிலையில் இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் சிறுதானிய பயிர்களுக்கு நல்ல மழையாக அமைந்துள்ளது.






