என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயமான 2 சிறுவர்களை 36 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
- பொம்மியில் மாயமான 2 சிறுவர்களை 36 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
- போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி ஓமலூர் சாலையில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பவர் சீனு (வயது 47) இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் அவரது மகன் நிஷாந்த் (13) வயது பொம்மிடி அருகே உள்ள நடூர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டில் அருகில் உள்ள இஸ்மாயில் மகன் சையது பாஷா (15). நண்பர்களான நிஷாந்தும், சையது பாஷாவும் கடந்த 15-ந் தேதி விளையாடச் சென்றனர்.
இந்த நிலையில் மாலை நீண்ட நேரமாகியும் விளை யாட சென்ற 2 சிறுவர்களும் வீடு திரும்பவில்லை. இரவு 10 மணி வரை சிறுவர்களை பெற்றோர்கள், உறவி னர்கள் எங்கு தேடியும் கிடைக்க வில்லை, இதனால் பதட்டம் அடைந்த சிறுவர்களின் பெற்றோர்கள் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லதா வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவர்களை தேடிவந்தனர். 2 சிறுவர்கள் பொம்மிடி பகுதியில் காணாமல் போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. இந்த நிலையில் காணாமல் போன 2 சிறு வர்களையும் மீட்கும் பணியில் பொம்மிடி போலீ சார் தீவிரம் காட்டினார்.
காணாமல் போனது பற்றிய தகவல் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், உதவி மையங்களுக்கும் அனுப்பப்பட்டது. இதன் பேரில் காணாமல் போன 2 சிறுவர்களும் திருச்சி ரயில் நிலைய காவலர்களால் ெரயில் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிறுவர் பாதுகாப்பு மையத்தில் விடப்பட்டுள்ளதாகவும் என்ற தகவல் பொம்மிடி போலீசாருக்கு கிடைத்தது வாட்ஸ் சப் மூலம் சிறுவர்கள் புகைப்படத்தினை அனுப்பி மாயமானது அவர்கள் தான் என உறுதி செய்தனர்.
அதன் பெயரில் காணா மல் போன 2 சிறுவர்களையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு போலீசார் திருச்சி விரைந்து உள்ளனர். போலீசார் விரைந்து செயல்பட்டு மாயமான 2 சிறுவர்களையும் மீட்டது குறித்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.






