என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் டிரைவரை தாக்கிய  வாலிபர் சிறையில் அடைப்பு
    X

    அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு

    • இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பஸ்சை வழிமறித்து பஸ் டிரைவரை தாக்கினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அதியமானை சிறையில் அடைத்தனர்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்தப் பாடி கே.அக்ர ஹாரம் பகுதி ணயைச் சேர்ந்தவர் வீரப்பன் (44). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணிக்கு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தை பென்னா கரத்துக்கு பயணிகளுடன் எடுத்துச் சென்றுள்ளார்.

    அப்போது தருமபுரி-பென்னாகரம் ரோடு தனியார் திருமண மண்டபம் அருகில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பஸ்சை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி பஸ் டிரைவரை கீழே தள்ளி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் பஸ் டிரைவர் மயக்கம் அடைந்ததால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தருமபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில் தருமபுரி சவுளுபட்டி பகுதியைச் சேர்ந்த தங்க துரை மகன் அதியமான் (30) என்பது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அதியமானை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×