என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரசவத்திற்கு பிறகு 3 பெண்கள் மரணம்:  அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    பிரசவத்திற்கு பிறகு 3 பெண்கள் மரணம்: அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

    • தாய்மார்கள் உயிரி ழப்புக்கான காரணம் குறித்து எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
    • பொது மக்களுக்கு நிறைவான சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவா்களிடம் அறிவுறுத்தினார்.

    தருமபுரி,

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்கு பிறகு கடந்த சில தினங்களில் மூன்று பெண்கள் உயிரிழப்பு தருமபுரி எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில தினங்களில் பிரசவித்த தாய்மார்கள் 3 பேர் பிரசவத்திற்கு பிறகு உயிரிழந்த சம்பவம் குறித்து தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுத வல்லி, டாக்டர்கள் உள்ளிட்டோரிடம் பிரச வித்த தாய்மார்கள் உயிரி ழப்புக்கான காரணம் குறித்து எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவர் பதில் சொல்ல முடியாமல் திணறி–னார். அவர்களது இறப்பு குறித்து விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களிடம், எம்.எல்.ஏ. கேட்டார்.

    மேலும், இனிவரும் காலங்களில் பிரசவித்த தாய்மார்கள் உயிரிழப்பு ஏற்படாத வகையில் சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும்.

    தருமபுரி அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற வருபவர்களை அலைக் கழிக்க கூடாது. கிராமத்திலிருந்து வருபவர்களை மீண்டும் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அனுப்பு கூடாது என்றும், அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற வரும் பொது மக்களுக்கு நிறைவான சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவா்க ளிடம் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×