search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிமங்கலத்தில் நகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாகண் சிகிச்சை முகாம்
    X

    காரிமங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கண் சிகிச்சை முகாமை மாவட்ட செயலாளர் பழனியப்பன் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

    காரிமங்கலத்தில் நகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாகண் சிகிச்சை முகாம்

    • காரிமங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தொடங்கி வைத்தார்.

    .தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் நகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

    ஸ்ரீ பி.சி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த முகாமிற்கு நகர செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். விவசாய அணி மாநில துணை தலைவர் சூட்டப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் சிறப்பு மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை களை வழங்கி அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் சிவகுரு, துணை அமைப்பா ளர்கள் ஹரிபிரசாத், மகேஷ்குமார், கவுன்சிலர்கள் சக்திரமேஷ், மாதப்பன், கீதா முத்துசெல்வம், ரமேஷ், சதீஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் குட்டி, ஒன்றிய கவுன்சிலர் முருகன், பள்ளி முதல்வர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×