search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmapuri robbery"

    • நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    • கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி பாரதிபுரம் பகுதியில் உள்ள எல்.ஆர்.மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர் சிவராம கிருஷ்ணன். இவர் ஓய்வுபெற்ற விலங்கியல் நிபுணர் ஆவார். இவரது மனைவி சாய் சரோஜா. இவர் அரசு பள்ளியில் உதவி உடற்பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி சிவராமகிருஷ்ணன் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன் காரணமாக குடும்பத்துடன் அவர்கள் கர்நாடாக மாநிலம் மைசூருவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இன்று திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்த போது, சிவராமகிருஷ்ணன் வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நேற்று இரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், டிஎஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    இதேபோல் சிவராமகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியரான சிவக்குமார் என்பவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, சிவக்குமார் திருமணம் நிகழ்ச்சிக்காக மைசூருக்கு சென்று உள்ளதாலும், அவரது வீட்டில் இருந்து தங்க நகைகளை சிவக்குமார் குடும்பத்தினர் எடுத்து சென்றதாலும், கொள்ளையர்களுக்கு எதுவும் கிடைக்காததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது.

    மேலும், சிவக்குமார் மற்றும் சிவராமகிருஷ்ணன் ஆகியோரது வீடுகளில் நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி நகர் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • சம்பவத்தன்று சீனிவாசன் காலையில் தனது வீட்டில் இருந்து கிளம்பி பணி நிமித்தமாக வெளியில் சென்றுள்ளார்.
    • வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). இவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று சீனிவாசன் காலையில் தனது வீட்டில் இருந்து கிளம்பி பணி நிமித்தமாக வெளியில் சென்றுள்ளார்.

    பணிகளை முடித்து விட்டு மீண்டும் பிற்பகலில் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்து உள்ளார். அப்பொழுது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 24 1/2 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதனை கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சிந்து அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே முத்துகவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். லாரி டிரைவர். இவரது மனைவி சிந்து (வயது25). இந்த நிலையில் நேற்று முன்தினம் சிந்து தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த செயின், தோடு உள்பட 6¾ பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரம் திருடு போய் இருந்தது. இதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து சிந்து அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளிபுறமாக பூட்டிவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோவில் உடைத்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
    • ராஜா கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 47). விவசாயியான இவர் நேற்று வீட்டில் ஒரு அறையில் இரவு தூங்கி கொண்டிருந்தார். விடிந்தவுடன் எழுந்து பார்த்தபோது அறையின் கதவு பின்புறம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் கதவை திறக்க முடியாமல் அவதிப்பட்ட அவர் சத்தம்போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ராஜாவின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    மேலும் அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. உடனே அவர்கள் ராஜா இருந்த கதவை திறந்து விட்டனர். ராஜா வெளியே வந்து பார்த்தபோது அவர் தூங்க சென்றபிறகு அவரது வீட்டின் கதவை மர்மநபர் உடைத்து உள்ளே புகுந்து, ராஜா தூங்கி கொண்டிருந்த அறையையும் வெளிபுறமாக பூட்டிவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோவில் உடைத்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ராஜா கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து ராஜாவின் வீட்டை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து மோப்பநாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி அருகே அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சேசம்பட்டியில் பழனி நகரில் பிரசித்தி பெற்ற சித்திபுத்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழா முடிந்ததும் கோவிலின் உண்டியல் திறக்கவில்லை. விழாக்காலங்களில் மட்டுமே உண்டியலை கருவறையில் இருந்து வெளியே வைத்து விடுவார்கள். மற்ற நாட்களில் உண்டியலை கோவிலின் கருவறைக்குள் வைத்து பூட்டி செல்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று இரவு நடைசாத்தப்பட்டது. நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலின் உள்ளே புகுந்து கருவறையின் பூட்டை உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியலை பூட்டை உடைத்து பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.

    இன்று காலை கோவில் பூசாரி வழக்கமாக கோவிலை திறக்க வந்தபோது கருவறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போனது தெரியவந்தது. மர்ம நபர்கள் உண்டியலை உடைத்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து செல்லும்போது அதில் இருந்து 10 ரூபாயை விநாயகர் முன்பு உள்ள தட்டில் வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சிவாடி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஸ்ரீபெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் திருவிழா நடைபெற்றது. விழா முடிந்தும் இன்னும் உண்டியலை கோவில் நிர்வாகிகள் திறக்கவில்லை.

    மேலும் கோவிலின் முன்புறம் திருப்பணிகள் நடைபெறுவதால் அவ்வப்போது கோவில் திருப்பணிகளுக்கு தேவையான பணத்தை கோவில் உண்டியலில் இருந்து எடுத்து கொள்வார்கள். நேற்று இரவு வழக்கம்போல் கோவில் நடைசாத்தபட்டது.

    இன்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோவிலின் உள்ளே இருந்த உண்டியலை காணவில்லை. இந்த சம்பவம் குறித்து கோவில் பூசாரி ஊர் பொதுமக்களுக்கும், கோவில் நிர்வாகித்தினரிடம் தகவல் தெரிவித்தார்.

    இதுகுறித்து ஊர்பொது மக்கள் தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலின் 500 அடி தூரத்தில் உண்டியல் கிடந்தது.

    கோவிலை நேற்று இரவு மூடியிருப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளனர். உள்ளே புகுந்து அவர்கள் உண்டியல் பூட்டை உடைக்க முயன்று உள்ளனர். ஆனால் அவர்களால் பூட்டை உடைக்க முடியாததால் உண்டியலை அப்படியே சிறிது துரம் தூக்கி சென்று அதில் இருந்து பணத்தை கொள்யைடித்து விட்டு உண்டியலை அங்கேயே வீசி சென்றுள்ளனர்.

    அடுத்தடுத்து தருமபுரி சுற்று வட்டாரத்தில் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×