கோபிநாதம்பட்டி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

வெளிபுறமாக பூட்டிவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோவில் உடைத்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.ராஜா கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
கோபிநாதம்பட்டி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 47). விவசாயியான இவர் நேற்று வீட்டில் ஒரு அறையில் இரவு தூங்கி கொண்டிருந்தார். விடிந்தவுடன் எழுந்து பார்த்தபோது அறையின் கதவு பின்புறம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் கதவை திறக்க முடியாமல் அவதிப்பட்ட அவர் சத்தம்போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ராஜாவின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

மேலும் அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. உடனே அவர்கள் ராஜா இருந்த கதவை திறந்து விட்டனர். ராஜா வெளியே வந்து பார்த்தபோது அவர் தூங்க சென்றபிறகு அவரது வீட்டின் கதவை மர்மநபர் உடைத்து உள்ளே புகுந்து, ராஜா தூங்கி கொண்டிருந்த அறையையும் வெளிபுறமாக பூட்டிவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோவில் உடைத்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து ராஜா கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து ராஜாவின் வீட்டை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து மோப்பநாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com