search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ள பூக்களை படத்தில் காணலாம்

    தருமபுரி மாவட்டத்தில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • தருமபுரி மாவட்டத்தில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • குண்டுமல்லி கிலோ ரூ. 450க்கு விற்பனை

    தருமபுரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பாரம்ப ரியமாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். அதில் முக்கியமாக குண்டுமல்லி, ஜாதிமல்லி, சன்னமல்லி, சம்பங்கி, சாமந்தி, கோழிக்கொண்டை, அரளி,பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ், ஆகிய மலர்களை விவசாயிகள் விளைவிக்கின்றனர்.

    மாவட்டத்தில் விளையும் பூக்களுக்கென்று தனி மவுசு உள்ளதால் இங்கு விளையும் பூக்கள் மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தினசரி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பல மாவட்டங்களுக்கும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

    இந்த நிலையில் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாத முக்கிய சனிக்கிழமை பண்டிகை நாட்களில் கூட விலையேற்றம் இல்லாமல் மாலைகளுக்கு பயன்படுத்தும் சம்பங்கி, சாமந்தி, பூக்கள் படுவீழ்ச்சி அடைந்து கிலோ 5 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பூப்பறிக்கும் கூலி கிடைக்கவில்லை என விவசாய கூலியட்கள் வேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில் திடீரென பூக்கள் விலை உயர்ந்துள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ. 450, சன்னமல்லி ரூ. 350, ஜாதி மல்லி கிலோ ரூ. 260 காக்கட்டா கிலோ ரூ. 280 சம்பங்கி கிலோ ரூ. 50 சாமந்தி கிலோ ரூ. 60, அரளி கிலோ ரூ. 100, பன்னீர் ரோஸ் கிலோ ரூ. 50 என இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×