என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து  10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
    • அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 7000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்றைய நிலவரப்படி 9500 கன அதிகரித்தது தொடர்ந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி, 8,500 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

    தற்போதைய நிலவரப்படி மீண்டும் பத்தாயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி ஆகிய இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

    Next Story
    ×