என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக சென்ற காட்சி.
பள்ளிக்கல்வி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி
- தருமபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் தருமபுரி நகராட்சி நடுநிலைப்பள்ளி சந்தைப்பேட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வரும் 1-ம் தேதி நகராட்சி தொடக்கப்பள்ளி டவுனில் நடைபெறும் மருத்துவ முகாமில், அனைத்து மாற்றுத் திறனாளி மாணவர்களும் கலந்து கொண்டு அடையாள அட்டை பெறுதல், உபகர ணங்களுக்கு அளவிடுதல், உதவித்தொகை பெறுதல், சிறப்பு பயிற்சிகள் அளித்தல் ஆகியன பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இதில் பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.பேரணியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கி ணைப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
இதில் அனைத்து சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் ரகுபதி, வனிதா, சாரதா, ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






