என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு
    X

    பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் சாந்தி ஆய்வு செய்த போது எடுத்த படம்

    வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு

    • பாலக்கோடு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்

    பேளாரஅள்ளி ஊராட்சியில் எம்.ஜி.என்.ஆர். இ. ஜி. எஸ். திட்டத்தின் கீழ் ரூ.25.99 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.17.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உணவு தானிய கிடங்கி னையும், கணபதி ஊராட்சி கன்சால்பெயில் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.267.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் அமைக்கும் பணி, கேசர்குளி அணை இலங்கை வாழ் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.400 லட்சம் வீடுகள் கட்டும் பணி மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் மதிப்பீட்டில் 80 வீடுகள் பணிகளையும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் கட்டப்பாட்டின் கீழ் பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் முதன்மை பதப்படுத்தும் மையத்தை மாவட்ட கலெக்டர் சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இப்பணிகளை தர மாகவும், விரைந்து முடித்திட வேண்டு மெனவும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து, கணபதி ஊராட்சி கரிகுட்டனூர் கிராமத்தில் இருளர் வாழும் பகுதிகளை பார்வையிட்டு அவர்களுக்கு வீடுகள் வழங்கிட தகுதியான இடத்தினை தேர்வு செய்து வழங்கிட வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், பாலக்கோடு வட்டம் பெல்ரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயா ளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது, பழங்குடியினர் நல அலுவலர்.பி.எஸ்.கண்ணன், பாலக்கோடு வட்டாட்சியர் ராஜா, பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் உட்பட தொடர்புடைய அலு வலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×