என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய 6 கடைகளுக்கு அபராதம் விதிப்பு
    X

    அதிகாரிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்ச பைகளை வழங்கிய காட்சி.

    பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய 6 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

    • பென்னாகரத்தில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய 6 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • 31 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் விற்பனைக்காக பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்த 6 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, 31 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்தனர்.

    திடீர் ஆய்வு

    பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் , கடைவீதி முள்ளுவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழக்கடைகள், காலணிகள் கடை, போக்கிரி கடை, உணவகம், பூக்கடை, மளிகை கடை , சாலையோரக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடை களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் நித்தியலட்சுமி தலைமையில் உதவி பொறியாளர் லாவண்யா, அதிகாரிகள் தங்கதுரை, வேதமூர்த்தி, பேரூராட்சி இளநிலை உதவியாளர் சின்னசாமி, துப்பு ரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அபராதம் விதிப்பு

    அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், நெகிழி கலந்த வாழை இலை, பிளாஸ்டிக் கத்திகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்திய கடை உரிமையாளர்கள் 6 பேருக்கு ரூ.1800 அபராதம் விதித்தும், 31 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    விழிப்புணர்வு

    அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறறும் கடை உரிமையாளரிடம் நெகிழிப் பொருட்க ளின் பயன்பா டுகள் மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சள் பைகளை வழங்கினர்.

    Next Story
    ×