என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
- டிரைவருக்கு போலீசார் வலை வீச்சு
- கள்ளத்தனமாக டிப்பர் லாரியில் கிராவல் மண் கடத்துவது தெரிய வந்தது.
தருமபுரி,
பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராவல் மண் கடத்துவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தலைமை காவலர்கள் கோபாலகிருஷ்ணன், முருகன், தலைமையில் போலீசார் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 4 -வது மைல் கல் கிராமத்தில் கள்ளத்தனமாக டிப்பர் லாரியில் கிராவல் மண் கடத்துவது தெரிய வந்தது. இதனை அடுத்து ஓட்டுனர் வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்ட நிலையில் போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
அருகில் உள்ளவர்களை விசாரணை செய்ததில் பென்னாகரம் அடுத்த சத்யநாதபுரம் அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த அல்லி முத்து மகன் சிவா (35) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Next Story






