search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு விற்பனை நிலையங்கள்   அரசு விதிமுறைகளுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில்  கலெக்டர் தகவல்
    X

     ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பட்டாசு விற்பனை நிலையங்கள் அரசு விதிமுறைகளுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் தகவல்

    • துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • வெடிமருந்து குடோன்க ளை மாதம் இருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு உற்பத்தி நிலையங்கள், பட்டாசு சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வெடிமருந்து குடோன்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வது தொடர்பாக , காவல்துறை, தீயணைப்பு-மீட்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    வருவாய்த்துறையினர் வெடிமருந்து குடோன்க ளையும், பட்டாசு விற்பனை நிலையங்களையும், மாதம் இருமுறை ஆய்வு செய்யுமாறும், ஆய்வின் ்போது காவல்துறை யினருக்கும் தகவல் தெரிவித்து அவர்களுடன் இணைந்து தணிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் ஆய்வின்போது, இருப்புப் பதிவேட்டில் உள்ளவாறு இருப்பு உள்ளனவா என்பதையும், உரிமம் வழங்கப்பட்ட அளவுக்குட்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற னவா என்பதையும், பட்டாசுகள் மற்றும் வெடி மருந்துகளை பாதுகாப்பான முறையில் இருப்பு வைத்து உள்ளனரா என்பதையும், அரசு விதிமுறைகளுக்குட் பட்டு பாதுகாப்பு நடவடிக் கைகள் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றதா என்பதை உறுதிபடுத்திடவும் அறிவு றுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் டி.ஆர்.கீதாராணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொ) மகாலிங்க மூர்த்தி, வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×