என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல் கூட்டுகுடிநீருடன் சுத்திகரிக்கப்படாத குடிநீர் கலந்து விநியோகம்
    X

    பாலக்கோடு பகுதியில் சுத்திகரிக்கப்படாமல் விநியோகம் செய்யப்படும் குடிநீரை படத்தில் காணலாம்.

    ஒகேனக்கல் கூட்டுகுடிநீருடன் சுத்திகரிக்கப்படாத குடிநீர் கலந்து விநியோகம்

    • பாலக்கோடு பேரூராட்சியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீருடன் சுத்தகரிக்கப்படாத குடிநீர் கலந்து வினியோகம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
    • குடிநீருடன் பஞ்சபள்ளி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கலந்து விநியோகம் செய்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றிக்கு 6 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது சமீப காலமாக ஒகேனக்கல் சுத்திகரிக்கப்பட்ட குடி நீருடன் பஞ்சப்பள்ளி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்படாத நீரையும் கலந்து முறைகேடாக பாலக்கோடு பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கும் குடிநீர் சுத்தமாக இல்லாமல் மண்கலந்த நிறமாக வருவதாகவும், பிளீச்சிங் பவுடர் அதிகம் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஒகேனக்கல் குடிநீரில், பஞ்சப்பள்ளி நிலத்தடி நீர் கலக்கப்படுவதால் அதிக புளோரைடு காரணமாக பொதுமக்களுக்கு பற்கள், மற்றும் எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.மேலும் சிறுநீரகம், மூளை, தைராய்டு, கல்லீரல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் பாதைகள் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள நிலத்தடி நீரில் புளோரைடு அதிக அளவில் உள்ளது, இதை குடிப்பதால் பற்கள் எலும்புகளில் ஆஸ்டியோ போராசிஸ் நோய் தாக்கம் ஏற்பபட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி பாதிக்கபடுவதுடன் எலும்புகள் விரைவில் பலவீனமடைய காரண மாவதால், இதனை தடுக்க பல கோடி ரூபாய் செலவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தபட்டு வரும் நிலையில், பாலக்கோடு பேரூராட்சியில் முறை கேடாக ஓகேனக்கல் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீருடன் பஞ்சபள்ளி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கலந்து விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் சமீப காலமாக இப்பகுதி மக்கள் பல்வேறு உடல் நல கோளாறுகளுக்கும், நோய் தொற்றிற்க்கும் ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×