என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் சேதமடைந்த பஸ்சையும், இருசக்கர வாகனத்தையும் படத்தில் காணலாம்.
அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்
- நாகாவதிஅனை பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- அரசு பேருந்து மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29), கூலி தொழிலாளி. இவர் நேற்று சொந்த வேலையாக சாமிசெட்டிப்பட்டியில் இருந்து நாகாவதிஅனை பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது ஏலகிரி அடுத்துள்ள எள்ளுகுழி என்ற இடத்தில் சென்றபோது, அவ்வழியாக அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது சசிகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அரசு பேருந்து மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த சசிகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






