பலியான 8 பேரின் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

இறந்தவர்களின் உடல்கள் தனியார் மருத்து வமனையில் வைக்கப்பட்டு இருந்தது.தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.பழனியப்பன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
விபத்தில் பலியானவர்களின் உடல்களுக்கு தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.பழனியப்பன் அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய போது எடுத்த படம்.
விபத்தில் பலியானவர்களின் உடல்களுக்கு தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.பழனியப்பன் அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய போது எடுத்த படம்.
Published on

தருமபுரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை தீ விபத்தில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 7 பேரும், நீப்பந்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 8 பேர் பலியானார்கள்.

இறந்தவர்களின் உடல்கள் ஓசூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல்களுக்கு தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய அவர் இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் ராணிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com