என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • குடிப்பழக்கத்தை கண்டித்ததால் விபரீத முடிவு
    • தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே பையர் நத்தம் கதிரிபுரத்தை சேர்ந்த வர் மணி. இவரது மகன் புகழேந்தி (வயது22). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.கூலி வேலைக்காக கடந்த 8 மாதங்க ளுக்கு முன்பு மயிலாடு துறைக்கு சென்ற புகழேந்தி அப்பகு தியை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.

    கடந்த சில ஆண்டுகளா கவே குடிப்பழக்கத்திற்கு அடிமையான புகழேந்தி திருமணத்திற்கு பிறகு திருந்தி வாழ வேண்டும் என குடும்பத்தினர் அடிக்கடி கண்டித்து வந்துள்ளனர். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி வேலைக்குச் சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். அப்போது புகழேந்தி குடிபோதையில் இருந்துள்ளார்.இதனால் கோபம் கொண்ட இவரது தந்தை மணி, தாயார் ,மனைவி ஆர்த்தி ஆகியோர் அவரை கண்டித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த ்புகழேந்தி வீட்டின் அறைக்குச் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அவரது பெற்றோர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது புகழேந்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து தந்தை மணி பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் திருமணமான சில மாதங்க ளிலேயே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்ப–வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீஸ், பிரஸ் என போலி ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    • பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது சிலர் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காகவும், குற்ற செயல்களில் செய்து விட்டு தப்பி செல்வதற்காவும் தங்களது இருசக்கர வாகனங்களில் போலீஸ் என்றும் பிரஸ் மற்றும் மீடியா போன்ற போலி ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து கொண்டு உலா வருகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது;- போலி ஸ்டிக்கர் ஒட்டியுள்ள நபர்கள் சில இடங்களில் அப்பாவி பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தும், சிலர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குடித்து விட்டும் வாகனம் ஓட்டுகின்றனர்.

    சிலர் அதனை செய்பவர்களுக்கும் உடந்தையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகி்றது. இது போன்ற நபர்களால் போலீசாருக்கும் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் பொதுமக்களிடத்தில் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இ்ந்த போலி ஸ்டிக்கர் ஒட்டிள்ள நபர்கள் நடந்து கொள்கிறார்கள். மேலும் தருமபுரி, அரூர், பென்னாகரம், உள்ளிட்ட பகுதிகளில் இதுக்கு தனியாக போலீசாரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஸ்டிக்கர் ஒட்டி வாகனம் ஓட்டி வரும் நபர்களை பிடித்து, அவர்கள் அடை யாள அட்டை மற்றும் அவர்களது முகவரியை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • அதிக பணம் தருவதாக கூறி பாலியல் ஈடுபட வைத்ததாக தெரிவித்தார்.
    • தலைமறைவாக உள்ள ராஜாமணியை தேடி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் பாலியல் தொழில் நடைப்பெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் கோகுல் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அண்ணா நகர் பகுதியில் சந்தேக படும்படியாக நின்று கொண்டி ருந்த வட மாநில பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் தான் கொல்கத்தா மாநிலம் மணிக்கபூரை சேர்ந்தவர் என்றும், கூலி வேலை தேடி வந்த தன்னை குப்பு என்பவரின் மகள் ராஜாமணி (வயது 65) கோவையை சேர்ந்த வீராசாமி (43) மற்றும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த செல்வகுமார் (56) ஆகியோர் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் ஈடுபட வைத்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த பெண்ணை தொப்பூர் பெண்கள் காப்பகத்திற்க்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வீராசாமி, செல்வகுமார் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ராஜாமணியை தேடி வருகின்றனர்.

    • 1141 மது பாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல்
    • 1081 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ராதாவை கைது செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 40). கூலித் தொழிலாளி. நேற்று அதிகாலை பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தில் உள்ள சந்து கடை நடத்தும் ராதா(55) என்பவரின் வீட்டிற்கு சென்று மது வாங்கி உள்ளார்.

    அப்போது மூடியை திறந்தவுடன் ஒரு விதமான நாற்றம் அடித்ததால் இதுகுறித்து ராதாவிடம், செல்வம் கேட்டுள்ளார். நன்றாக போதை ஏறும் குடி என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றவர் தலைசுற்றி, மயக்கம் அடைந்து வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் தலைமையிலான போலீசார் மாரியம்பட்டி கிராமத்திற்கு சென்று ராதாவின் வீட்டை சோதனையிட்டனர்.

    சோதனையில் அரசு மதுபான கடையிலிருந்து 1081 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ராதாவை கைது செய்தனர். அதேபோன்று பாலக்கோடு அருகே உள்ள வெளங்காடு பகுதியில் மது பாட்டில் விற்கபடுவதாக வந்த தகவலின் பேரில் மாரண்ட அள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வைத்து ஒரு நபர் மது பாட்டில் விற்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த பொன்முடி (51) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவர் வைத்திருந்த மதுபாட்டில்கள் 31 மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    அதேபோன்று ஓகேனக்கல் சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மது விற்ற அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் மாதேஷ் (27) என்பவர் மது விற்று கொண்டிருந்தார் .அவரை கைது செய்து அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    • சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆறுமுகம் உயிரிழந்தார்.

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அறுமுகம் (வயது 73). இவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால், போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணை பிறகு ஆறுமுகத்திற்கு, கடந்த 2019-ம் ஆண்டு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    அதன்படி அவர் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். வயது முதுமை காரணமாக ஆறுமுகத்திற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஜெயில் மருத்துவமனை யிலேயே சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி உடல் நிலை மோசமானதால் அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆறுமுகம் உயிரிழந்தார். இது குறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்திக்கின் தந்தை பச்சமுத்தை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
    • பச்சமுத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    அரூர்:

    தருமபுரியில் இருந்து கோவைக்கு வெடிெபாருட்கள் ஏற்றி செல்வதாக சேலம் மாவட்டம் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி நேற்று கருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதனை ஓட்டி வந்த டிரைவர் இளையராஜா (33) என்பவர் 2 ஆயிரத்து 953 கிலோ வெடி பொருட்கள் இருந்தது. வெடி பொருட்களை தருமபுரியில் இருந்து கோவைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    இதில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த பச்சமுத்து மகன் கார்த்திக் (35) என்பவரும், அரூர் அருகே ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் ஆகிய 2 பேரும் கொடுத்த தகவலின்படி மினிலாரியில் 2 ஆயிரத்து 953 கிலோ வெடிபொருட்களை பென்னாகரத்தில் இருந்து ஏற்றி கொண்டு கோவைக்கு சென்றதாக கைதான இளையராஜா போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் ஏ.பள்ளிப்பட்டியில் உள்ள கார்த்திக்கை பிடிக்க வந்தனர். அப்போது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கார்த்திக்கின் தந்தை பச்சமுத்தை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

    அப்போது பச்சமுத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குமாரும் தலைமறைவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தலைமறைவாக உள்ள 2 பேரையும் இரு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், வெடிபொருட்கள் ஏற்றி சென்றதாக கூறப்படும் பென்னாகரத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும்

    வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

    தருமபுரி பகுதியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்ப டுத்தப்படும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் மூலம் மலைவேம்பு, தேக்கு, வேம்பு மற்றும் பூவரசு மரக்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் இலவசமாக விவசாயிகளுக்கு விநியோ கிக்கப்பட உள்ளது.

    தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் மூலம் கிடைக்கப்பெறும் நீரினை பயன்படுத்தி பயன் தரும் மரக்கன்றுகளை நட்டு சுலபமாக பராமரித்திடலாம். நூறு சதவீத மானியத்தில் மரக்கன்றுகளை பெற ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், கணினி சிட்டா மற்றும் அடங்கல் நகல் புகைப்படம் ஒன்று.

    இந்த ஆவணங்களை வழங்கி தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் பதிவு செய்து கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    • தருமபுரியில் தொடர்ந்து பூண்டு விலை உயர்ந்து வருகிறது
    • உழவர் சந்தையில் கிலோ பூண்டு ரூ.238-க்கும், வெளிமார்க்கெட்டில் ரூ.250 -க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகம் உள்பட தென்னிந்தியாவில், பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது.

    அந்த மாநிலங்களில் பூண்டு ஒரு பணப்பயிராகும். இதனால் அங்கு சாகுபடி செய்யப்படும் பூண்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    மேலும் வெளிநாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்யப்ப டுகிறது. பூண்டு மருந்தாகவும், வாசனை பொருளாகவும் பயன்படுகிறது. பூண்டில் ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. பூண்டில் அதிகப்படியான வைட்டமின் சத்துக்களும், தாதுக்களும் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால் சமையலுக்கு முக்கிய உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

    தருமபுரி காய்கறி மார்க்கெட்டிற்கு பூண்டு வரத்து குறைந்துள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு நாட்டு பூண்டு ரூ.180 க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரிய பூண்டு ரூ. 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. பல் பூண்டு ரூ 160 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இரண்டு மாதத்தி ற்கு மேலாக பூண்டு விலை உச்சத்தை தொட்டு வருகிறது.

    வரத்து குறைவால் தருமபுரி உழவர் சந்தையில் கிலோ பூண்டு ரூ.238-க்கும், வெளிமார்க்கெட்டில் ரூ.250 -க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

    உச்சத்தைத் தொட்டு வரும் பூண்டு விலையை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், இல்ல த்தரசிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தருமபுரி அருகே வன விலங்களை வேட்டையாடியவர் சிறையில் அடைப்பு
    • வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கணவனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(50). விவசாயி. இவர் தேங்கல்மேடு, கரடு, எருது கூட அள்ளி, கணவன அள்ளியை ஒட்டியுள்ள வன பகுதிகளில் இரவு நேரங்களில் முயல் ,காட்டு பன்றி, காடை, கெளதாரி, கீரிபிள்ளை உள்ளிட்ட வன விலங்குகளை நாட்டு வெடி, கூண்டு, கம்பி வலை போன்றவற்றின் மூலம் வேட்டையாடி வந்துள்ளார்.

    நேற்று கணவனஅள்ளி அருகே உள்ள வனப் பகுதியில் வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி மற்றும் வலையுடன் நின்றிருந்தவர் வன காவலர்களை கண்டதும் ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரித்ததில் வன விலங்குகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தது தெரிய வந்தது.

    அவரை பிடித்து சென்று அவரது வீட்டை சோதனை மேற்கொண்டதில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய வலை, கம்பி, நாட்டு வெடி, மற்றும் உப்புக்கறி உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த வன துறையினர் ரங்கநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தருமபுரி அருகே போதிய கழிப்பறை வசதியின்றி பள்ளி மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மாணவிகள் பயன்ப டுத்தும் நாப்கின்கள் இல்லாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஜம்மண அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகும்பு வரை சுற்று பகுதிகளில் உள்ள 10-க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த சுமார் 260 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

    படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்த போதிய பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க படாததால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் மாணவ, மாணவிகள் கழிப்பிடம் செல்லும் பகுதியில் சுகாதார மற்ற முறையில் புதர் மண்டி இருக்கும் நிலையில் விஷ ஜந்துக்கள் கடிக்கும் அபாயம் உள்ளது. மாணவிகள் பயன்ப டுத்தும் நாப்கீன்கள் இல்லாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்.பள்ளியில் பல்வேறு பராமரிப்பு வேலைகள் செய்யபடாமல் உள்ளதால் பள்ளியில் படிக்கும் கிராமப் பகுதி மாணவ, மாணவியர் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.

    மாணவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் அலட்சியமாக இருக்கும் பள்ளி நிர்வாகம் மீது கல்வி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
    • உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் பஞ்சாயத்து ராஜா தோப்பு பகுதியில் அமைந்துள்ளது முனியப்பன் கோவில் அதன் அருகே காமாட்சி அம்மன் கோவிலும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள் பூட்டி இருந்த கோவில் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கோவில் பூசாரி மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி, குத்து விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவயிடம் வந்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமாரவை கைபற்றி அதில் இருந்த பதிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் கோவில் கதவின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே வரும் கொள்ளையன் சட்டை அணிந்திருக்கவில்லை. உண்டியலுக்கு வந்து அதனை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்கிறான். இதனையடுத்து அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலியை எடுத்து கொண்டு தப்பி செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.

    இது குறித்து அனுமந்தபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது;-

    இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த காரிமங்கலம் போலீசார் கொள்ளை நடந்த இடம் தங்களது எல்லைக்கு உட்பட்டது இல்லை. பாலக்கோடு் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர்.

    • தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சித்தார்.
    • நிலப்பிரச்சனையால் சம்பவம்

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஜ்ஜனள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் தனது குடும்பத்தினருடன் விவசாய நிலத்தில் வசித்து வருகிறார். ராஜகோபால் விவசாய நிலத்திற்கு அருகில் அரசு ஓடை புறம்போக்கு இருந்து வந்துள்ளது.

    இந்த ஓடை புறம்போக்கு வழியாக தனது விவசாய நிலத்திற்கு காலகாலமாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், குமார், சுரேஷ், பொன்முடி, மகேந்திரன் ஆகியோர் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதில் ராஜ கோபால் வயலுக்கு செல்ல வழி விடாமல் மிரட்டி வரு வதாக கூறப்படுகிறது.

    மேலும் விவசாய நிலத்தி ற்கு வழி விடாமலும், வயதான நிலையில் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் வழியில்லாமல் ராஜ கோபால் குடும்பத்தகனர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான, ராஜகோபால் தனது குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிப்பதற்காக வந்தி ருந்தார்.

    அப்பொழுது திடீ ரென மறைத்து வைத்திருந்த 5 லிட்டர் பெட்ரோல் கேனை எடுத்து, உடலின் மீது ஊற்றி தற்கொலை செய்வதற்கு முயற்சித்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×