என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • 2,707 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,115 கிலோவாக அதிகரித்தது.
    • மொத்தம் ரூ.11 லட்சத்து 45 ஆயிரத்து 339-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு க்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2,707 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,115 கிலோவாக அதிகரித்தது. இதேபோல் பட்டுக்கூட்டின் விலையும் அதிகரித்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.437-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.55 விலை அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிக பட்சமாக ரூ.492 -க்கும், குறைந்தபட்சமாக ரூ.241- க்கும், சராசரியாக ரூ.367.62-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 45 ஆயிரத்து 339-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    • கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி

    தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று வைகாசி மாத 2-வது பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி முதலில் நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை யொட்டி நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்திலிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில் உள்பட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தை யொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 2 கிலோ எடையுள்ள உடும்பு ஒன்றை வாலிபர்கள் சிலர் பிடித்து, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.
    • 3 பேருக்கும் வனத்துறையினர் தலா 1 லட்சம் அபராதம் விதித்து கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

    பென்னாகரம், 

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே பதனவாடி காப்புக்காடு உள்ளது. இங்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள காவிரி கரையோரத்தில் இருந்த சுமார் 2 கிலோ எடையுள்ள உடும்பு ஒன்றை வாலிபர்கள் சிலர் பிடித்து, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.

    இதையறிந்த மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், பென்னாகரம் வனச்சரகர் செந்தில் குமார் தலைமையிலான வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டதில், வீடியோவை பதிவேற்றியது, பென்னாகரம் வட்டம் நெருப்பூரைச் சேர்ந்த அல்லிமுத்து மகன் எழிலரசன் (35), காத்தவராயன் மகன் செந்தில்குமார் (34), காமராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேருக்கும் வனத்துறையினர் தலா 1 லட்சம் அபராதம் விதித்து கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

    • தி.மு.க அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது.
    • தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் , தலைமை கழக பேச்சாளர் இலயோலா ராஜசேகர் கழக அரசின் இரண்டாண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

    பாப்பிரெட்டிப்பட்டி

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போதக்காடு ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவிலூர் கிராமத்தில் தி.மு.க அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது .

    தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் , தலைமை கழக பேச்சாளர் இலயோலா ராஜசேகர் கழக அரசின் இரண்டாண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றியும் ஏழை எளிய மக்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் நலதிட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

    பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் ஏற்பாடு ெசய்திருந்தார். இந்நிகழ்வில் மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கீரை எஸ்விசுவநாதன், மாவட்ட அவைத் தலைவர் மனோகரன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், அரங்காவல் குழு தலைவர் கெளதமன், ஒன்றிய அவைத்தலைவர் கார்மேகம், துணை செயலாளர்கள் ஜாகிதா செரீப், செல்வன், ஊராட்சிமன்ற தலைவர் திருமலாதினேஷ் , ஈஸ்வரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தாமோதிரன், கண்ணன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பிரபுராஜசேரகரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், வழக்கறிஞர் சக்திவேல், தண்டபானி, கிளை செயலாளர்கள் சுகந்திரம், குமார், வெள்ளி, தங்கராஜ், ஸ்ரீராமுலு, மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் கிளை செயலாளர் மாரப்பன் நன்றி தெரிவித்தார்.

    • திருவருட்பா போட்டி தருமபுரி குமாரசாமிப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் திருவருட்பா போட்டி தருமபுரி குமாரசாமிப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்தப் போட்டிகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் உதயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சன்மார்க்க சங்க மாநில பொருளாளர் நஞ்சுண்டன், மாவட்ட பொறுப்பாளர் சிவகுமார், நிர்வாகி மல்லிகா சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள் சிவானந்தன், ராஜகோபால், ராதாமணி, பிரபு, ஆய்வாளர்கள் சங்கர், துரை, மணிகண்டன், சங்கர் கணேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 1989 -ம் ஆண்டில் பணியில் சேர்ந்த இவர் 33 ஆண்டுகள் பணியாற்றினார்.
    • அவரது வீடு வரை பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்களுடன் நடன மாடி ஊர்வலமாக அழைத்து பட்டு கவுரவிக்கப்பட்டார்.

    பென்னாகரம், 

    தருமபுரி மாவட்டம் பென்னா கரம் பேரூராட்சி யில் தூய்மை பணியாளராக பணியாற்றியவர் ராணி (வயது 60). நேற்று முன்தினம் ஜூன் 30-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். கடந்த 1989-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த இவர் 33 ஆண்டுகள் பணியாற்றினார்.

    இவர் பணி ஓய்வு பெற்றதை அடுத்து பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா தலைமையில் தூய்மை பணியாளர் ராணிக்கு மாலை அணிவிக்கப்பட்டு பேரூராட்சி அலுவலகம் முதல் வட்டாட்சியர் அலுவலகம், கடைவீதி, பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவழியாக அவரது வீடு வரை பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்களுடன் நடனமாடி ஊர்வலமாக அழைத்து பட்டு கவுரவிக்கப்பட்டார்.

    இதில் பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், தள்ளுவண்டி தூய்மை பணியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர் ராணிக்கு பணி ஓய்வு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

    இதில் பேரூராட்சி தலைவர் வீரமணி, துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி கீதா, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நினைவு பரிசுகள் வழங்கி அவரது பணியை பாராட்டி பேசினர்.

    • திப்பட்டி அருகே செல்லும் போது பெட்ரோல் போடுவதற்காக சாலையின் ஓரம் மெதுவாக சென்றார்.
    • அந்த வழியாக வந்த டாட்டா ஏசி சின்னபையன் மீது மோதியது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கேட்டிரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன் (வயது 57).லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தருமபுரி பென்னாகரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திப்பட்டி அருகே செல்லும் போது பெட்ரோல் போடுவதற்காக சாலையின் ஓரம் மெதுவாக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி சின்னபையன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னபையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியிடையே குடும்பதகராறு ஏற்பட்டுள்ளது.
    • மோனிசா வீட்டில் சாணிபவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நீர்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் பரபு. இவரது மனைவி மோனிசா (வயது 24). இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    சம்பவத்தன்று கணவன்-மனைவியிடையே குடும்பதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் மனமுடைந்து காணப்பட்ட மோனிசா வீட்டில் சாணிபவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலக்கியம்பட்டி பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீடுகளின் கதவுகளை தட்டுகின்றனர்.
    • இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஒன்று திருடுபோய் உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி அருகே இலக்கியம்பட்டி கீழ் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி அருகே இலக்கியம்பட்டி பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீடுகளின் கதவுகளை தட்டுகின்றனர். இதனால் அந்த நேரத்தில் வீடுகளை யாரும் திறப்பதில்லை.

    ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஒன்று திருடுபோய் உள்ளது.

    இதனை தொடர்ந்து எங்கள் குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினோம். அப்போது வீட்டில் இருந்த என்னுடைய வளர்ப்பு நாயை காணவில்லை. இதனால் பல இடங்களில் தேடி பார்த்தேன்.

    ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இந்த பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இளைஞர் தன் பாசமுள்ள வளர்ப்பு நாயின் புகைப்படத்தை போஸ்டர் பிரிண்ட் செய்து இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள காமவுண்டு சுவர்களில் ஒட்டி விளம்பரப்படுத்தி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர்.
    • மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த கல்லூரி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ள நிலையில் திரும்பி செலுத்தாததால் நீதிமன்றத்தில் தனியார் வங்கியின் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி தனியார் வங்கி அலுவலர்கள், பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி தலைமையிலான வருவாய்த்துறையினர் அடங்கிய குழுவினர் நேற்றுமாலை நிர்வாக அலுவலகம், கல்லூரி வகுப்பறைகள், உணவகம், ஆய்வகம், நூலகம், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் இந்த ஆண்டில் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாற்றாக தருமபுரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளதாக மாணவர்களிடம் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

    மேலும் கல்லூரி பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

    • சபரிநாயகனுக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட அஜிதா மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள குருபரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அம்பேத். இவருடைய மகள் அஜிதா (வயது29). இவர் எம்.எஸ்.சி, பி.எட் முடித்து ள்ளார்.

    இந்நிலையில் கடந்த 6-வருடங்களுக்கு முன்பு கடத்தூர் பகுதியை சேர்ந்த சபரிநாயகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சபரிநாயகன் டீக்கடை யில் கூலி வேலை செய்து வந்தார். மேலும் இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழ க்கம் இருந்து வந்துள்ளது.

    கடந்த 25-ம் தேதி சபரி நாயகன் குடிபோதையில் இருந்ததால் கணவன்-மனைவி இருவரிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்ட அஜிதா மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் அஜிதாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஜிதா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணமாகி 6- வருடங்கள் ஆகியுள்ள தால் இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளது.

    • கழிவுநீர் கால்வாய், குடிநீர் பைப் லைன அமைத்தல், மினி டேங்க் அமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
    • 30 ஆண்டு காலம் பணிபுரிந்து நேற்று ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் வெங்கட லட்சுமி, கலா ஆகியோருக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி அவர்களது பணிக்கு பாரா ட்டு தெரிவிக்கப்பட்டது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் பி.சி.ஆர். மனோகரன் தலைமையில் நடந்தது.

    செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு வார்டுகளில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் பைப் லைன அமைத்தல், மினி டேங்க் அமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து காரிமங்கலம் பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் விரிவாக்க பணி, சந்தை மேம்படுத்தும் பணி ஆகியவற்றிற்காக 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரி வித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து 30 ஆண்டு காலம் பணிபுரிந்து நேற்று ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் வெங்கட லட்சுமி, கலா ஆகியோருக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி அவர்களது பணிக்கு பாரா ட்டு தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் மாதப்பன், ரமேஷ், சுரேந்திரன், கீதா, சக்தி, பிரியா, இந்திராணி, நாகம்மாள், செவத்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×