என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்ககூட்டம்
- தி.மு.க அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது.
- தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் , தலைமை கழக பேச்சாளர் இலயோலா ராஜசேகர் கழக அரசின் இரண்டாண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
பாப்பிரெட்டிப்பட்டி
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போதக்காடு ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவிலூர் கிராமத்தில் தி.மு.க அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது .
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் , தலைமை கழக பேச்சாளர் இலயோலா ராஜசேகர் கழக அரசின் இரண்டாண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றியும் ஏழை எளிய மக்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் நலதிட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் ஏற்பாடு ெசய்திருந்தார். இந்நிகழ்வில் மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கீரை எஸ்விசுவநாதன், மாவட்ட அவைத் தலைவர் மனோகரன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், அரங்காவல் குழு தலைவர் கெளதமன், ஒன்றிய அவைத்தலைவர் கார்மேகம், துணை செயலாளர்கள் ஜாகிதா செரீப், செல்வன், ஊராட்சிமன்ற தலைவர் திருமலாதினேஷ் , ஈஸ்வரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தாமோதிரன், கண்ணன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பிரபுராஜசேரகரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், வழக்கறிஞர் சக்திவேல், தண்டபானி, கிளை செயலாளர்கள் சுகந்திரம், குமார், வெள்ளி, தங்கராஜ், ஸ்ரீராமுலு, மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் கிளை செயலாளர் மாரப்பன் நன்றி தெரிவித்தார்.






