என் மலர்
தர்மபுரி
- பாலக்கோடு பா.ம.க. கட்சி ஒன்றிய அமைப்பு செயலாளர் பெரியம்மாள் செட்டியப்பன் தலைமையில் நடைப்பெற்றது.
- தலா 5 கிலோ அரிசி தொகுப்பு மற்றும் பார்வைய ற்றவர்களுக்கு படிக்க எழுத உதவும் எழுத்து பலகை மற்றும் எழுத்தாணி வழங்கப்பட்டது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பார்வையற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நூற்றாண்டு நினைவுப் பள்ளி வளாகத்தில் பாலக்கோடு பா.ம.க. கட்சி ஒன்றிய அமைப்பு செயலாளர் பெரியம்மாள் செட்டியப்பன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கண் தெரியாத பார்வையற்றவர்கள் 50 நபர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி தொகுப்பு மற்றும் பார்வையற்றவர்களுக்கு படிக்க எழுத உதவும் எழுத்து பலகை மற்றும் எழுத்தாணி வழங்கப்பட்டது.
அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோர் முன்னேற்ற நலசங்க நிர்வாகிகள், சேவா பாரத் அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
- தக்காளி சாகுபடி குறைந்ததே விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
- மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடவு செய்யப்பட்ட தக்காளி செடிகள் வெயிலின் தாக்கம் காரணமாக, விவசாய நிலங்களில் கருகியது.
தருமபுரி,
தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பெரும் அளவில் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
விவசாயிகளிடமிருந்து அறுபது ரூபாய்க்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, உழவர் சந்தையில் கிலோ 80 ரூபாய்க்கும், வெளிச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.100 முதல் 130 வரை விற்பனையாகிறது.
தக்காளி சாகுபடி குறைந்ததே விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பேகாரஅள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்டப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்வது வழக்கம்.
இப்பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளி பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள பிரத்யேக தக்காளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.
இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தக்காளி பழங்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
தக்காளி விலை உயர்வுக்கான காரணம் குறித்து தருமபுரி மாவட்டம், மத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி சேகர் என்பவரிடம் கேட்டபோது, தக்காளி விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், செடிகளில் போதுமான அளவு காய்ப்பு திறன் இல்லாததால் குறைந்த அளவிலேயே தக்காளி மகசூல் கிடைக்கின்றது.
இந்த ஆண்டு கோடை வெயில் பிப்ரவரி மாதத்தில் தொடங்கியதால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடவு செய்யப்பட்ட தக்காளி செடிகள் வெயிலின் தாக்கம் காரணமாக, விவசாய நிலங்களில் கருகியது.
இதனால் தக்காளி நடவு செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதன் காரணமாகத் தான் தக்காளி நடவு செய்ய விவசாயிகள் முன் வர வில்லை. சாகுபடி பரப்பு குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்து உள்ளது என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது வெயிலில் இருந்து தக்காளி செடிகளை காப்பாற்ற மாற்று யோசனை செய்து தற்போது தக்காளியை அறுவடை செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் கடந்த மார்ச் மாதத்தில் தக்காளி நடவு செய்தபோது வெயில் காரணமாக வயலில் கருகியது.
அதன் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியிலிருந்து 12,000 எண்ணிக்கையிலான தக்காளி செடிகளை வாங்கி வந்து நடவு செய்தேன்.
வெயிலின் காரணமாக தக்காளிச் செடிகள் காய தொடங்கியதை அடுத்து கால்நடைத் தீவனத்திற்கு பயன்படுத்தப்படும் மக்காச்சோள பயிர்களை விதைத்ததால் வேகமாக வளர்ந்து தக்காளி செடிகளுக்கு நிழல் ஏற்படுத்தும் என எண்ணி மக்காசோள பயிர்களை இடையிடையே விதைத்ததால் அது குறுகிய காலத்தில் வளர்ந்து நிழல் கொடுத்ததால் அருகில் இருந்த தக்காளிச் செடிகள் காயாமல் நன்றாக வளர்ந்து என தெரிவித்தார்.
மேலும், தற்போது செடிகளில் பழங்கள் பழுக்கத் தொடங்கியதை அடுத்து நிழலுக்காக நடப்பட்ட சோள தட்டுகளை அறுத்து அகற்றியதாகவும் கூறினார்.
தக்காளி விலை இன்னும் இரண்டு மாதத்திற்கு குறையாது என்றும், தற்பொழுது மழைக்காலம் தொடங்கியதால் விவசாயிகள் இனி வரும் காலங்களில் தக்காளி நடவு செய்து அதன் மூலம் கிடைக்கும் பழங்களால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். ஆனால் அவருடைய தனி திறமையால் தக்காளி செடிகளை காப்பாற்றிய சேகர், தற்போது லாபத்தை அள்ளி வருகிறார்.
- மருத்துவர்கள், குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் உணவு முறைகள் பற்றியும் எடுத்து கூறினர்.
- இவ்விழாவில் மருத்து வர்கள் சந்தோஷ், முத்தமிழ் மற்றும் புனிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மருத்து வர்கள் தினம் கொண்டா டப்பட்டது.
இவர்களின் சேவைகளைப் பாராட்டி பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
மருத்துவர்கள், குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் உணவு முறைகள் பற்றியும் எடுத்து கூறினர்.
இவ்விழாவை முன்னிட்டு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
இதில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குனர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகி யோர் தலைமை தாங்கினர்.
இவ்விழாவில் மருத்து வர்கள் சந்தோஷ், முத்தமிழ் மற்றும் புனிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணை ப்பாளர் புவனேஸ்வரி முன்நின்று கவனித்துக் கொண்டார்.
மேலும் ஒருங்கிணை ப்பாளர்கள் குருமூர்த்தி, மணிமேகலை, பிரவீணா மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
- பள்ளி, கல்லூரிகளின் அருகாமையில் உள்ள மதுபானக் கடைகளை அரசு அகற்ற வேண்டும்.
- கல்விக்கூடங்களில் போதைப்பொருட்கள் நடமாட்ட த்தை கண்காணித்து, போதைப் பொருட்களை கட்டுப்ப டுத்த தருமபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மேற்கு மாவட்ட மாணவர் சங்க பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தருமபுரி ஒட்டப்பட்டியில் அமைந்துள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் பா.ம.க. கவுரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, பா.ம.க. மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செந்தில், பாரிமோகன், மாநில துணைத் தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட தலைவர் செல்வகுமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சரியான விதிகளை பின்பற்றி சமூக நீதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற தருமபுரி மாவட்ட மாணவர் சங்க பொதுக்குழு வலியுறுத்துகிறது.
நடப்பு கல்வி ஆண்டிலேயே வன்னியர்களுக்கு 10.5 உள்ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற இப்பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
பள்ளி, கல்லூரிகளின் அருகாமையில் உள்ள மதுபானக் கடைகளை அரசு அகற்ற வேண்டும்.
தவறினால் பாட்டாளி மாணவர் சங்கம் சார்பாக விரைவில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதென தீர்மானிக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரின் நீண்ட நாள் கனவான அருகாமை பள்ளி திட்டத்தினை மத்திய அரசு நடைமுறைப்படுத்த இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
கல்விக்கூடங்களில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து, போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தருமபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூட்டம் முடிவில் மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் தமிழரசு நன்றி கூறினார்.
- போக்குவரத்து டிக்கெட் பரிசோதகரின் உடன் இருந்த ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
- எனக்கு நடந்தது போல் மற்றவர்களுக்கு நடக்கக்கூடாது என்பதற்காகவே பேருந்துக்கு முன்பு தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பண்ட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவம். இவர் பாண்டிச்சேரியில் ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.
விடுமுறை முடிந்து நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்தில் பயணிக்க திருவண்ணாமலை பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார்.
அப்போது அரசு ஊழியர்கள் இந்த பேருந்து செல்லாது என கூறி பேருந்தில் இருந்து பயணிகளை இறக்கி உள்ளனர். மீண்டும் பேருந்தில் ஏறுமாறு அழைத்துள்ளனர்.
இதேபோல் மூன்று முறை போக்குவரத்து ஊழியர்கள் ஏற்றி இறக்கி விட்டனர். கோபம் அடைந்த சிவம் போக்குவரத்து ஊழியரிடம் இது குறித்து கேட்டபோது அங்கு வந்த போக்குவரத்து டிக்கெட் பரிசோதகரின் உடன் இருந்த ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிவம் திருவண்ணாமலை பேருந்துக்கு முன் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனை கண்ட சக பயணிகள் அங்கு சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரை மணி நேரத்திற்கு மேல் தர்ணா போராட்டம் தொடர்ந்ததை அடுத்து போக்குவரத்து பரிசோதகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சிவம்மிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் சாப்ட்வேர் என்ஜினியர் சிவம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிவம் கூறும்போது தருமபுரி பஸ் நிலையத்தில் எங்களைப் போன்ற படித்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பயணிகளின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக உள்ளது.
தருமபுரி பஸ் நிலையம் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத பஸ் நிலையமாக மாறி வருகிறது. எனக்கு நடந்தது போல் மற்றவர்களுக்கு நடக்கக்கூடாது என்பதற்காகவே பேருந்துக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகளும், அரசு ஊழியர்களும் தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் செய்ய சென்னை செல்வதற்கு சிறப்பு பேருந்துகளை இயக்கிய போக்குவரத்து நிர்வாகம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், மதுரை, திருச்சி போன்ற நகரங்களை இணைக்கும் சேலம் பேருந்துகள் இல்லாமல் போக்குவரத்து வசியின்றி பெரிதும் தவித்தனர் என்றார்.
- நிலத்தடி நீர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வரும் நிலையில் உள்ள இந்த ஏரியில் ஆகாய த்தாமரையின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் மாசடைந்து உள்ளது.
- ஏரிக்கரையின் மீது நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் தினமும் மூக்கை பிடித்தவாறு செல்கின்றனர்.
தருமபுரி,
தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்டது இலக்கியம்பட்டி பஞ்சாயத்து. 15 வார்டுகள் உடைய இந்த பஞ்சாயத்தில் நீர் ஆதாரமாக இலக்கியம்பட்டி ஏரி மற்றும் பிடமனேரி ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளது.
இதில் பிமனேரி ஏரி 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தருமபுரி ஒன்றியத்திற்கு இந்த ஏரியின் மூலம் மீன் பாசி ஏலத்தில் வருடத்திற்கு 28 லட்சத்திற்கு வருவாயை ஈட்டி வருகிறது.
மேலும் பெருமளவு நிலத்தடி நீர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வரும் நிலையில் உள்ள இந்த ஏரியில் ஆகாய த்தாமரையின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் மாசடைந்து உள்ளது.
இதனால் மீன் பாசி ஏலம் எடுத்தவர்கள் மீன் குஞ்சுகள் விட்டு பராமரித்து வந்த நிலையில் தண்ணீர் மாசுபட்டதால் ஒரு மாதமாக ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை உள்ள மீன்கள் செத்து அழுகி மிதந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
ஏரியை சுற்றி குடியிருக்கும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், முதியவர்கள் என நோய் தொற்றில் பாதிப்படைந்துள்ளனர்.
ஏரிக்கரையின் மீது நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் தினமும் மூக்கை பிடித்தவாறு செல்கின்றனர்.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு நாளிதழில் செய்தி வெளியிட்டும் இதுவரை பஞ்சாயத்து நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இதனால் நோய் தொற்று பரவலால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வ லர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொல்லியல் சின்னங்களின் இருப்பு அவசியமாக உள்ளது.
- வரலாற்றுச் சுவடுகளை அதன் பூர்வ இடங்களில் பராமரிப்பதே பொருத்தமாக இருக்கும்.
தருமபுரி,
தருமபுரி-அரூர் நெடுஞ்சாலையையொட்டி ராஜாப்பேட்டை பகுதியில் கல் மண்டபம் ஒன்று அமைந்திருந்தது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தருமபுரி-அரூர்-திருவண்ணாமலை சாலை விரிவாக்கப் பணிக்காக இந்த கல் மண்டபம் கடந்த ஜனவரி மாதத்தில் இடித்துத் தள்ளப்பட்டது.
அப்பகுதியில் சாலைப் பணிகள் நடந்தபோது வரலாற்றுச் சின்னமான அந்த கல் மண்டபத்தை காக்க வேண்டுமென தருமபுரி அரசு கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரசேகரன் கோரிக்கை வைத்திருந்தார்.
இருப்பினும், அந்த மண்டபம் இடிக்கப்பட்டு அப்பகுதியில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இடிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமான கல் மண்டபத்தை மீட்டு அருங்காட்சியகம் அல்லது அரசுக் கல்லூரியில் நிறுவி பாதுகாக்க வேண்டும் என பேராசிரியர் சந்திரசேகரன் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் ராஜாப்பேட்டை பகுதியில் சாலையோரம் அமைந்திருந்தது பாண லிங்க வகை கல் மண்டபம். ஜாமீன் நடைமுறை காலத்தில் ராஜாப்பேட்டை பகுதியை ஆட்சி செய்த அரசர் ஒருவரின் நினைவாக இந்த கல் மண்டபம் கட்டப்பட்டிருக்கலாம் என ஆய்வில் தெரிய வருகிறது.
சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, நாற்கோண வடிவிலான இந்த மண்டபம் நாயக்கர் கால வடிவமைப்பைக் கொண்டது.
மன்னராட்சி காலத்திலேயே இந்த மண்டபத்தையொட்டி பிரதான சாலை அமைந்திருந்ததற்கான சாட்சியாக இந்த மண்டபம் இருந்து வந்தது. நெடுந்தூர பயணம் செல்வோர் ஓய்வெடுக்கவும், இரவில் தங்கிச் செல்லவும் இந்த மண்டபம் பயன்பட்டு வந்துள்ளது. இந்த மண்டபத்திலோ, அருகிலோ கல்வெட்டு எதுவும் கிடைக்காததால் மண்டபம் தொடர்பான ஆழமான தகவல்களை அறிய முடியவில்லை.
ஆனாலும், பெருவழியையொட்டி அன்றைய நாளில் இதுபோன்ற மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்ற தகவலின் மூலம், ராஜாப்பேட்டை கல் மண்டபம் அன்றைய வணிக வழியை கணிக்க உதவும் சாட்சியாக நின்றிருந்தது.
இவ்வாறான ஆய்வுகளை காலம் தோறும் மேற்கொள்பவர்களுக்கு இது போன்ற வரலாற்று சுவடுகள் பேருதவியாக அமையும். தொடர் ஆய்வுகளின் பலனாக என்றேனும் இதுபோன்ற சுவடுகள் தொடர்பான தகவல்கள் முழுமையாக வெளிவரும்.
அதற்கு தொல்லியல் சின்னங்களின் இருப்பு அவசியமாக உள்ளது. வரலாற்றுச் சுவடுகளை அதன் பூர்வ இடங்களில் பராமரிப்பதே பொருத்தமாக இருக்கும்.
இருப்பினும், வளர்ச்சிப் பணி நோக்கில் ராஜாப்பேட்டை கல் மண்டபம் இடிக்கப்பட்டு விட்டது. சிற்பங்களுடன் கூடிய இந்த மண்டப கற்களை மீட்டு அருங்காட்சியகம் அல்லது அரசு கலைக் கல்லூரி போன்ற இடங்களில் நிறுவினால் அழிவற்ற நிலையை அடையும். மேலும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் தகவல்களை அளிக்கும் நேரடி சாட்சியாக அமையும்.
தருமபுரி மாவட்டம் அதிக வரலாற்றுச் சின்னங்களை கொண்டுள்ளது. அதனாலேயே இங்கு வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை இல்லையோ என்ற வருத்தமும் எழுகிறது.
எனவே, வரலாற்று ஆர்வலர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ராஜாப்பேட்டை கல் மண்டபம் உட்பட கவனிப்பாரற்று கிடக்கும் வரலாற்றுச் சின்னங்களை அரசு பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
- பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 13 பெண்கள் உள்பட 59 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 448 மதுபாட்டில், 100 லிட்டர் ஊறல், 8 லிட்டர் சாராயம் மற்றும் 8 கிலோ கஞ்சா ஆகியவற்றுடன், 3 டூவீலர்களையும் போலீசார் கைப்பற்றினர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சாராயம் மற்றும் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றதாகவும், ஓட்டல் மற்றும் பெட்டிக்கடைகளில் குடிக்க அனுமதித்ததாகவும் அரூர், பொரப்பூர், கம்பை நல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 13 பெண்கள் உள்பட 59 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 448 மதுபாட்டில், 100 லிட்டர் ஊறல், 8 லிட்டர் சாராயம் மற்றும் 8 கிலோ கஞ்சா ஆகியவற்றுடன், 3 டூவீலர்களையும் போலீசார் கைப்பற்றினர்.
- காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபுவின் பணியை பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.
- அதனை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதத்திடம் காண்பித்து பாராட்டைப் பெற்றார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் அரூர் காவல் நிலையம் பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு போன்ற நிகழ்வுகளில் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை தலைமையகத்தில் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபுவின் பணியை பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். அதனை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதத்திடம் காண்பித்து பாராட்டைப் பெற்றார்.
- மங்களம்பட்டியில் தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
- கடத்தூர் நகர தி.மு.க சார்பில் உடனடிப்பட்டி சாலையில் நகர தி.மு.க சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், ஒபிளிநாயக்கன் அள்ளி ஊராட்சி கெடகாரஅள்ளி, மங்களம்பட்டியில் தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் ஆகியோர் தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மனோகரன் எம்.எல்.ஏ , முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபுராஜசேகர், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஞானம்வடிவேல் வரவேற்றார்.இதற்கான ஏற்பாடுகளை கடத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சிவபிரகாசம் செய்திருந்தார்.
மாவட்ட ஓட்டுனர் அணி அமைப்பாளர் வடிவேல், அறங்காவலர் குழு தலைவர் கௌதமன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுகுணா ஆறுமுகம், மாரிமுத்து, புருஷோத்தமன், ராஜேந்திரன், அன்பரசு, கவுன்சிலர்கள் பச்சை யப்பன், சக்திவேல், முருகன், தங்கராஜ், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ஏராள மானோர் பங்கேற்றனர்.
அதே போல் கடத்தூர் நகர தி.மு.க சார்பில் உடனடிப்பட்டி சாலையில் நகர தி.மு.க சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செயலாளர் மோகன் செய்திருந்தார்.
பேரூராட்சி தலைவர் கேஸ் மணி மற்றும் பொருப்பாளர்கள் பங்கே ற்றனர். அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
- உடைந்த துவாரத்தின் வழியாக கழிவுநீர் குடியிறுப்பு பகுதியில் உள்ள காலி இடங்களில் தேங்குகிறது.
- கொசுக்கள் அதிகளவில் உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
தருமபுரி,
தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 31-வது வார்டு பாரதிபுரத்தில் ராஜீவ்காந்தி தெரு, பாரதியார் தெரு, விவேகானந்தர் தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.இந்த தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு ள்ளது.
இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. மேலும் பல ஆண்டுகளாக இந்த கால்வாய் தூர்வாராமல் சிதிலமடைந்து உள்ளது.
இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேக்கமடைகிறது. உடைந்த துவாரத்தின் வழியாக கழிவுநீர் குடியிறுப்பு பகுதியில் உள்ள காலி இடங்களில் தேங்குகிறது.
கொசுக்கள் அதி களவில் உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதனால் பொது மக்கள் அவதியடைகின்றனர். இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தரவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மது அருந்தி விட்டு வீட்டிற்க்கு வந்தவருக்கு மீண்டும் வயிற்று வலி அதிகமானது.
- கோவிந்தராஜ் வீட்டின் உள்ளே சென்று தூக்கு போட்டு உயிருக்கு போராடி னார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பூனாத்தனஅள்ளி காலணியை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தராஜ் (வயது 35) . இவருக்கு நீண்ட நாட்களாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த 28-ம் தேதி இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்க்கு வந்தவருக்கு மீண்டும் வயிற்று வலி அதிகமானது.இதனால் விரக்தியடைந்த கோவிந்தராஜ் வீட்டின் உள்ளே சென்று தூக்கு போட்டு உயிருக்கு போராடி னார்.
இதனை கண்ட இவரது மனைவி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோவிந்தராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






