என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாப்ட்வேர் என்ஜினியரை தாக்கிய போக்குவரத்து ஊழியர்களை கண்டித்து தர்ணா போராட்டம் 
    X

    தருமபுரி பஸ்நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்தபடம்.

    சாப்ட்வேர் என்ஜினியரை தாக்கிய போக்குவரத்து ஊழியர்களை கண்டித்து தர்ணா போராட்டம் 

    • போக்குவரத்து டிக்கெட் பரிசோதகரின் உடன் இருந்த ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
    • எனக்கு நடந்தது போல் மற்றவர்களுக்கு நடக்கக்கூடாது என்பதற்காகவே பேருந்துக்கு முன்பு தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பண்ட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவம். இவர் பாண்டிச்சேரியில் ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

    விடுமுறை முடிந்து நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்தில் பயணிக்க திருவண்ணாமலை பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார்.

    அப்போது அரசு ஊழியர்கள் இந்த பேருந்து செல்லாது என கூறி பேருந்தில் இருந்து பயணிகளை இறக்கி உள்ளனர். மீண்டும் பேருந்தில் ஏறுமாறு அழைத்துள்ளனர்.

    இதேபோல் மூன்று முறை போக்குவரத்து ஊழியர்கள் ஏற்றி இறக்கி விட்டனர். கோபம் அடைந்த சிவம் போக்குவரத்து ஊழியரிடம் இது குறித்து கேட்டபோது அங்கு வந்த போக்குவரத்து டிக்கெட் பரிசோதகரின் உடன் இருந்த ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிவம் திருவண்ணாமலை பேருந்துக்கு முன் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனை கண்ட சக பயணிகள் அங்கு சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    அரை மணி நேரத்திற்கு மேல் தர்ணா போராட்டம் தொடர்ந்ததை அடுத்து போக்குவரத்து பரிசோதகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சிவம்மிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் சாப்ட்வேர் என்ஜினியர் சிவம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட சிவம் கூறும்போது தருமபுரி பஸ் நிலையத்தில் எங்களைப் போன்ற படித்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பயணிகளின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக உள்ளது.

    தருமபுரி பஸ் நிலையம் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத பஸ் நிலையமாக மாறி வருகிறது. எனக்கு நடந்தது போல் மற்றவர்களுக்கு நடக்கக்கூடாது என்பதற்காகவே பேருந்துக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

    விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகளும், அரசு ஊழியர்களும் தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் செய்ய சென்னை செல்வதற்கு சிறப்பு பேருந்துகளை இயக்கிய போக்குவரத்து நிர்வாகம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், மதுரை, திருச்சி போன்ற நகரங்களை இணைக்கும் சேலம் பேருந்துகள் இல்லாமல் போக்குவரத்து வசியின்றி பெரிதும் தவித்தனர் என்றார்.

    Next Story
    ×